இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! *

தொண்டனாகவே இருந்து தொலைந்து போகாதே, தகுதிகளை வளர்த்து, நல்ல தலைவனாக முயற்சி செய்!

கிளறாத சோறு வேகாது, சீவாத தலை படியாது, துவைக்காத துணி வெளுக்காது, இவற்றை போல் தான், விளக்காத உண்மை வீணாகி போகும்!!

நீ அறிந்த உண்மைகளை, உரிய நேரத்தில், விளக்கிச் சொல்லாத காரணத்தினால்தான், அநியாயக்காரர்கள் அரியாசனத்தில், ஒட்டிக்கொண்டிருக்க முடிகிறது!!!

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! *

நாமும் இந்த குடையும் ஒன்றல்ல; தேவை என்றால் தூக்கிப் பிடிக்கவும், தேவையில்லை என்றால் ஓரமாக ஒதுக்கி வைக்கவும்! நாம் உணர்வுள்ள மனிதர்கள்.

வாழ்க்கையில் நிகழ்ந்ததை மறுக்கவம் முடியாது, நிகழ்வதை தடுக்கவும் முடீயாது, நிகழப்போவதை நிறுத்தவும் முடீயாது. இவை அனைத்தையும் நம்மால் கடந்து போக மட்டுமே முடீயும்.

மாற்றம் இல்லாமல், முன்னேற்றம் சாத்தியமில்லை, எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்களால், வேறு எதையும் மாற்ற முடியாது!

மன அழுத்தங்களை போக்க, எப்போதும் தனிமையை தேடாதே, பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசு, அல்லது பிடித்த எதையாவது செய்!!

வாழ்க்கையில் என்ன நடந்தாலும், உடைந்து போகாதே, உன்னை உடைப்பதற்கு ஒரு தருணம் உண்டு என்றால், உன்னை உருவாக்குவதற்கும் பல தருணங்கள் காத்திருக்கும்!!!

இன்று ஒரு சிந்தனை! 

இன்று ஒரு சிந்தனை! 

அளவு கடந்த தர்மம், உன்னை பிச்சைக்காரன் ஆக்கலாம், ஆனால் உன் வாரிசுகளை, கோடீஸ்வரனாக்கி அழகு பார்க்கும்!

சேமிப்பும் சரி, கடனும் சரி, சிறிது சிறிதாக தெரியும் தொகை, அதிகரித்து கொண்டே இருந்தால், ஒரு நாள் பெரியதாய் வளர்ந்து நிற்கும்!!

சேமிப்பாக இருந்தால், வாழ்க்கையை ஆச்சரியக்குறி ஆக்கி விடும், அதுவே கடனாக இருந்தால், உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடும்!!!

*இன்று ஒரு சிந்தனை! *

*இன்று ஒரு சிந்தனை! *

ஒருவருக்கு நீ கொடுக்கக் கூடிய பெரிய பரிசு உனது நேரம். ஏனெனில் உனது நேரம் தான் நீ மீண்டும் பெறமுடியாத உனது வாழ்வின் ஒரு பகுதி ஆகும்.

சிறந்த, உயர்வான விஷயங்களை, செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, செய்யும் சிறு விஷயத்தை, சிறப்பாக செய்!

கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார், அதை வரமாக்குவதும், சாபமாக்குவதும், உன் கைகளில் தான் உள்ளது!!

உயர்வான எண்ணமும், விரிவான சிந்தனையும், நேர்மையான செயல்பாடும் இருந்தால், உன்னை யாராலும் வீழ்த்த இயலாது!!!

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

இழப்பதற்கு எதுவும் இல்லை, எனும் போது தான், துணிச்சல் தானாக வந்து விடுகிறது!

இந்த உலகில், எதுவும் நிரந்தரம் இல்லாத பொழுது, உன் கஷ்டங்கள் மட்டும், எப்படி நிரந்தரமாகும்!!

ஒருவரின் மரியாதை, வயதை பொறுத்து வருவதில்லை, அவரவர் செய்யும், நற்செயலை பொறுத்தே வருகிறது!!!

இன்று ஒரு சிந்தனை! *

இன்று ஒரு சிந்தனை! *

விதைத்தது எதுவானாலும், அறுவடைக்கு வந்தே தீரும், விதையானாலும் சரி, வினையானாலும் சரி!

ஒரு இடத்தில், உனக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும் போது, நீயாகவே விலகி நிற்பதுதான், உனக்கு மரியாதை!!

நேர்மையாக, கடினமாக, உழைத்து , உயர்ந்துவிட்டால், பொறாமையில் பேசுவர், உழைக்காமல் தாழ்ந்து, வீழ்ந்துவிட்டால், கேவலமாக பேசுவார், இவ்வளவுதான் உலகம்!!!

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

பூனைக்கு, அதிகமாக கவனம் கொடுத்தால், அது தன்னை சிங்கமாக, நினைக்கத் தொடங்கி விடும்!

நல்ல பாம்பிடம், ஒருபோதும் நீதி கிடைக்காது, கடித்த பாம்பை தேடாமல், மருந்தை தேடினால், நன்மை உண்டு!!

பதற்றப்படாதே, மெல்ல மெல்ல தான், எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன், நூறு குடம் நீர் ஊற்றினாலும், பருவம் வந்தால் தான், பழம் பழுக்கும்!!!

இன்று ஒரு சிந்தனை

இன்று ஒரு சிந்தனை

தவற விட்டதற்கும் இழந்து விட்டதற்கும் எதையும் யாரையும் காரணம் காட்டி விடாதீர்கள். எல்லாமே வாழ்க்கை நம்மோடு விளையாடும் சின்னச் சின்ன விளையாட்டு.

ஆகையால் எதிர்காலத்தை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை நினைவாக வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்காலம் நிறைவாக இருக்கும்.

அதாவது உறங்கினால் எழறமோ
தெரியல, ஓரு நிலை இல்லாத வாழ்க்கை. அதுக்குள்ள எவ்வளவு வெறுப்பு கோவம் பிரிவு. இருக்குற வரைக்குமாவது சந்தோஷமாஇருங்க.

பண நோய் இல்லையென்றால் மன நோய் உனைத் தீண்டாது. பிணமாய் முடியும் இந்த வாழ்க்கை‌ப் பயணத்தில் கவனமாய் இருங்கள். வானம் என்றால் வெய்யில் மழை, பனி எல்லாம் வரும்.

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

திறமையினால் சாதிப்பதை விட, பொறுமையினால் அதிகம் சாதிக்கலாம்; வலியும் வேதனையும் இல்லையெனில்,
வெற்றிக்கு இடமில்லை!

உதிர்ந்தப் பிறகும், பொறுமையோடு காத்திருக்கும் மரம்தான், துளிர்கிறது; தோல்வியுற்றாலும் பொறுமையோடு காத்திரு, வெற்றியானது துளிர்க்கும்!!

நீ எப்படி இருந்தாலும், வாழ்ந்தாலும், உன் எண்ணம் உயர்வாக இருந்தால் போதும்; உன் நல் எண்ணமே, ஒரு நாள் உன் வெற்றிக்கு காரணமாக அமையும்!!!

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை!

அடக்கமாக உள்ளவரின் வலிமையை அறியாமல், அவரை எளிதாக வெல்ல நினைப்பவனுக்கு, தப்பாது கேடு நேரும்!

வாழ்க்கை கடினமாகதான் இருக்கும், எதிர்த்து போராட, அதற்கேற்ப உன்னை, மேலும், மேலும் உறுதியாக்கி கொள்!!

எனக்கு இது வராது, என்னால் முடியாது, என நினைப்பவரால், எதையும் சாதிக்க இயலாது, வெற்றிக்கனியை எட்டும் வரை, முயற்சி வேண்டும்,!!!