THRILLING THURSDAY
TWISTING THURSDAY

Never lose sight of the fact that the most important yard stick to your success is how you treat other people.
Let us treat our neighbor as we treat our own self.
Good morning.
THRILLING THURSDAY
TWISTING THURSDAY

Never lose sight of the fact that the most important yard stick to your success is how you treat other people.
Let us treat our neighbor as we treat our own self.
Good morning.
NOVENA TO OUR LADY OF VELANKANNI
NATIVITY OF OUR LADY

ஆரோக்கிய அன்னையே! இறைவனின் தாயான உம்மை வாழ்த்துகிறோம். இறைவனின் புகழ் பாடும் படைப்புப் பொருட்கள் அனைத்தும் உம்மை வாழ்தும்படியாக அழைக்கின்றோம். கடவுளின் படைப்புகளே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். இறைவனின் தூதர்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானகப் படைப்புகளே, வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். விண்ணகத்திலுள்ள புனிதர்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். பகலோனே, நிலவே, வானத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மழையே, வெண் பனியே விண்ணக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். வெம்மையே, குளிரே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மலைகளே, குன்றுகளே, பள்ளத்தாக்குகளே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். இருளே, ஒளியே ஆரோக்கிய அன்னையை வாழ்த்துங்கள். மேகங்களே, மின்னல்களே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். பூமிதனில் உள்ள விளைச்சல்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். நீர் சுனைகளே, மலை அருவிகளே, நதிகளே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். கடலே, கடல்வாழ் உயிர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானத்துப் பறவைகளே, தரைவாழ் உயிரினங்களே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். ஆரோக்கியத் தாயே! புகழ் பாடும் உம் மக்களின் மன்றாட்டுக்களை தயவுடன் ஏற்றுக் கொள்ளும். நாங்கள் என்றென்றும் உம்மை எங்கள் தாயாக அன்பு செய்வோம். நாங்கள் ஆன்ம உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இறைவனின் அன்பில் நிலைத்துப் புனிதர்களாக வாழ்ந்திட எங்களுக்காக உம் திரு மகன் வழியாக விண்ணகத் தந்தையிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
PSALM 145
திருப்பாடல் : 145
MORNING PRAYER

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!
(திருப்பாடல் 145: 17-21)
🛐 ஜெபம் 🛐
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! விடுதலை அளிப்பவரே! விரும்பிக் கேட்பவற்றைக் கொடுப்பவரே! உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் புகழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்.
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், அண்மையில் இருக்கும் என் ஆண்டவரே உமக்கு நன்றி.🙏
இந்த காலை வேளையில் உம்மை நினைப்பது, உம்மைப் புகழ்வது, உம்மிடம் செபிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும், ஆற்றலைக் கொடுப்பதாகவும் உள்ளது.
இறைவா! ஓய்வுநாள் சட்டத்தைப் பற்றி பேசிய பரிசேயர்களைப் போல் நானும் பிறரிடம் குறை காணும் போக்குடன் இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் அன்பு குறையும் இடத்தில்தான் குறைகள் பெரிதாகத் தெரியும் என்பதை நான் உணர்வேன். எனவே பிறரிடம் குறை காணும் குணத்தினை இனி நான் அடியோடு தவிர்ப்பேன்.
இயேசுவே, பிறரிடத்தில் குறை காணும் போக்கு உமது அன்புக் கட்டளையை நிறைவேற்ற எப்போதும் தடையாக உள்ளது என்ற உண்மையை நான் அனுதினமும் உணர்வேனாக. அன்பு பிறரிடத்தில் நிறைகளை மட்டுமே காணும் என்பதை நான் என் வாழ்வில் செயல்படுத்த அருள் புரிவீராக.
NOVENA TO OUR LADY OF VELANKANNI

இரக்கம் மிகுந்த அன்னையே! எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது. அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனம் வருந்துகின்றோம். ஓ, கருணைக் கடவுளின் கன்னித் தாயே! நீர் சிந்திய கண்ணீர் யாவும் எங்களுக்கு அருட்சுனையாய்ப் பாயட்டும். எங்கள் உள்ளத்தில் காணப்படும் தீய நாட்டங்களை எல்லாம் அகற்றி இறை அன்பை வளர்க்கட்டும். அன்புத் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாக நாங்கள் வாழ எங்களுக்கு ஆசீர் தாரும். தூய அன்னையே! எல்லா ஆபத்துகளினின்றும்
எங்களை பாதுகாத்தருளும். வேடனைக் கண்ட பறவை விண்ணிலே பறந்து மறைவது போலவும், புலியைக் கண்ட புள்ளிமான் புதருக்குள் பதுங்கி ஒளிவது போலவும், பாவிகளாகிய நாங்கள் உமது மாசற்ற திரு இருதயத்தில் அடைக்கலம் நாடி ஓடி வருகிறோம். எங்களை அரவணைத்து, இறைவனிடம் அழைத்துச் செல்ல எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
LIFE TIPS
WORTHY LIVING

மீண்டும் பேசினால் மேலும் மேலும், காயப்படுவோமென்ற பயத்தினாலே, மௌனத்தை தேர்ந்தெடுக்கிறது சிலரது அன்பு.
விரும்பி நிற்கத் தெரிந்தவர்களுக்கு விலகி நிற்கத் தெரியாது. காரணம் அவர்கள் அன்பை கடமையாக வைத்தவர்கள் அல்ல. உண்மையாக வைத்தவர்கள்.
புரிதல் இல்லாத இடத்தில், நீங்கள் உங்களது அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. காலம் அதன் பணியை சிறப்பாக செய்து முடிக்கும்.
நினைவில் வைத்திருங்கள். பிடிவாதங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனம் என காலம் உணர்த்தும். அப்போது உங்களுக்கு வயதாகி இருக்கக்கூடும்.
MORNING PRAYER

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கை
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.
(திருப்பாடல்கள் 33:1-5)
உலகை படைத்து, பராமரித்து வழிநடத்தி வரும் இறைவா! இதோ இந்த காலை நேரத்திலே, உம்மை போற்றி புகழுகிறோம்.
உம்மோடு பேசவும், உம்து அன்பை அனுபவிக்கவும், இன்னொரு புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஆண்டவரே! உமது அன்பை மறந்து நாங்கள் செய்த அனைத்து செயல்களுக்காகவும், இந்த நேரத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உமது அன்பிலிருந்து விலகி சென்றதற்காக மனம் வருந்துகிறோம். உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எங்களை மன்னித்தருளும் அப்பா.
எங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாய் இரும்; எங்கள் அன்றாட செயல்களில், நேர்மையுடன் நடக்க எங்களுக்கு துணை புரியும்; இரக்க செயல்கள் செய்ய எங்களை ஈடுபடுத்தும்.
இவ்வாறு, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை பிறருக்கு வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான அருள் வரங்களை தந்துருளும்.
NIGHT PRAYER
THANKS BE TO GOD

அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,
இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.
இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.
எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.
– ஆமென்.
PSALM 27
திருப்பாடல் : 27
MORNING PRAYER

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
(திருப்பாடல் 27: 1. 4. 13-14)
🛐 ஜெபம் 🛐
ஆண்டவரே நீரே என் ஒளி; நீரே என் மீட்பு; யாருக்கும் நான் அஞ்ச வேண்டியதில்லை. ஆண்டவரே நீரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
மனிதரோ, நோயோ, நொடியோ, துன்பமோ, துயரமோ, அதிகாரமோ, அடக்குமுறையோ, சதியோ, வீண்பழியோ, கடனோ, கவலையோ இவற்றில் எவை எனக்கு இடறலாக இருந்தாலும் படைத்த இறைவன் நீர் இருக்க எதற்கு நான் அஞ்சிட வேண்டும்?
அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.
இறைவா, எங்களுக்கு கல்வி ஞானம் அளித்த ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்காகவும் இன்று விஷேசமாக செபிக்கிறேன். தற்போது கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் பணி அழுத்தம் இல்லாமல் நல்ல முறையில் கற்பிக்கக்கூடிய ஏற்ற சூழ்நிலையை உருவாக்கும். கற்கும் மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்க அருள் புரிவீராக.
ஆண்டவரே! நாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த புனிதர் அன்னை தெரசாவை எங்கள் நாட்டிற்காக அளித்த இறைவா உமக்கு நன்றி. கருணை இல்லங்களின் பாதுகாவலரான புனித அன்னை தெரசாவின் விழாவினை இன்று கொண்டாடும் நாங்கள் கருணை இல்லங்களில் சேவை புரியும் எண்ணற்ற அருட்பணியாளர்களுக்காக பிராத்திக்கிறோம். அவர்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினை அளித்திடும்.
இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் கரம் பிடித்து வழி நடத்தும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
NIGHT PRAYER
WORD OF GRATITUDE

எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா.
இன்றைய நாள் முழுவதும், எம்மை கண்ணின் மணிபோல் காத்து, யாதொரு தீங்கும் எம்மை அனுகாமல் பாதுகாத்த, உம் இரக்கத்திற்காக, உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.
காலை முதல் இந்நேரம் வரை, எங்களின் அன்றாடப் பணிகளை செவ்வனே செய்து முடிக்க எங்களுக்கு ஆற்றலையும், ஞானத்தையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.
எங்களுக்கு சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் இருந்த போதிலும், உமது இறைஇரக்கத்தின் இரத்தத்தால், எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்த உம் தாயினும் மேலான அன்பிற்காக நன்றி செலுத்துகின்றோம் அப்பா.
ஆண்டவரே, இந்த இரவுப்பொழுதை ஆசீர்வதியுங்க. உமது காவல் தூதர்களை அனுப்பி எங்களை பாதுகாத்திடுங்க. எங்களுக்கு ஆழ்ந்த நித்திரையையும், மனஅமைதியையும் தாரும் அப்பா. நாங்கள் அதிகாலை புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் எழுந்து, உம்மை போற்றி புகழ வரம் தாரும்.
அன்பு தகப்பனே! இன்று நாங்கள் உமக்கு எதிராக, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக, பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம் அப்பா. எங்களை தயைகூர்ந்து மன்னித்து, உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென, சிரம் தாழ்த்தி வணங்கி மன்றாடுகின்றோம். ஆமென்.
NIGHT PRAYER
THANKSGIVING PRAYER

எங்களை என்றும் நேசிக்கும் அன்பு தகப்பனே, இந்த நல்ல நாளுக்காகவும், நீர் எங்களை எப்போதும் கவனித்துக்கொள்ளும் சிறப்பு வழிக்காகவும், இந்த இரவு வேளைக்காகவும் நன்றி கூறுகிறோம்.
இறைவார்த்தையின் ஊற்றான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தையால்; எங்களை வளப்படுத்துவதற்காக நன்றி. இறைவார்த்தையில் நாங்கள் காட்டும் ஆர்வத்தை, அதை வாழ்ந்து காட்டுவதிலும் காட்ட அருள் தாரும். துன்பங்கள் வந்தாலும், நிலைகுலையாது உம் வார்த்தையில் நிறைவாக வாழ்வோமாக இந்த நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல பாதுகாத்து, வழிகாட்டி மற்றும் எங்கள் கூடவே இருந்ததற்காக நன்றி ஆண்டவரே, நாங்கள் உறங்கும்போதும் இரவிலும் அதை நீடிக்கவும் உங்கள் பிடியில் இருந்து நழுவியதற்கு எங்களை மன்னியுங்கள் ஆண்டவரே, எங்கள் உள்ளம் பண்பட்ட நிலமாக இருந்து உம் வார்த்தையை ஏற்றுப் பலன் நல்கிட அருள்தாரும்.
நாங்கள் உமக்கு கீழ்ப்படியாதபோதும் அல்லது மற்ற காரியங்களை எங்கள் சொந்த வழியில் செய்ய முயற்சித்தபோதும் கூட எங்களைத் தொடர்ந்து நேசித்ததற்கு நன்றி ஆண்டவரே, நாங்கள் இருக்க ஒரு வீடு மற்றும் உறங்க சுகமான ஒரு இடம் மற்றும் சாப்பிட நல்ல உணவை ஆசீர்வாதமாக தந்ததற்கு நன்றி ஆண்டவரே, எங்களுக்கு நல்ல,
அமைதியான கனவுகள் நிறைந்த உறக்கத்தையும் எங்களுக்குக் கொடுத்து, இரவு முழுவதும் எங்களைப் பாதுகாக்க உமது தேவதூதர்களை எங்கள் வீட்டைச் சுற்றி அனுப்பியருளும். உம்மை நம்பவும் உம்மை மேலும் மேலும் நேசிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் விலைமதிப்பற்ற பெயரில்,
– ஆமென்!