19_Psalm_112

PSALM 112,MORNING PRAYER

காலை ஜெபம்

PSALM 112

MORNING PRAYER

திருப்பாடல் : 112

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.

(திருப்பாடல் 112: 1-2. 4-5)

19 Psalm 112 ஜெபம்

அன்பும், கனிவும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகின்றோம். வாழ்த்துகின்றோம். ஆராதிக்கின்றோம். நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! இந்த அதிகாலை வேளையில் உம் குரலுக்குச் செவிசாய்க்கிறேன். உம்மையே பற்றிக்கொள்கிறேன். ஏனெனில் நீரே எனது வாழ்வு; நீரே என் நீடிய வாழ்வு.

தந்தையே! கடந்த காலங்களில் நான், அனுதினமும் தொடரும் என் வாழ்வியல் துன்பங்களை எண்ணி சலிப்படைந்து புலம்பிய நாட்கள் ஏராளம். என்னுள் அவ்வப்போது எழுந்து மறையும் அசுவிசுவாசத்தின் வெளிபாடே அது. மனமிரங்கி மன்னித்தருளும். 🙏

“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.” என்று கூறிய எம் இயேசுவே! ஒருவர் தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொண்டு உம்மைப் பின்பற்றுவது என்பது அவர் தம்முடைய விருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடவுளாகிய உமது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதற்கு இணையாகும். எனவே ஆண்டவரே! நாங்கள் அவ்வாறு வாழ்வதற்கு எங்கள் உடலையும், உள்ளத்தையும் செம்மைப்படுத்தியருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

GOD BLESS

PRAYER TO INFANT JESUS,MORNING PRAYER

PRAYER TO INFANT JESUS

காலை ஜெபம்

SACRED HEART

MORNING PRAYER

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணி செபம்:

ஓ இயேசுவே! “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக நான் கேட்கிறேன், தேடுகிறேன், தட்டுகிறேன். நான் கேட்கும் இந்த வரங்களைக் கொடுத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளுமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை கெஞ்சி மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “விண்ணும் மண்ணும் அழிந்து போகும். ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்கப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஆமென்.

MENTAL STRENGTH

MENTAL STRENGTH

MENTAL STRENGTH

MENTAL STRENGTH

வாழ்க்கையில எந்தப் பிரச்சனை வந்தாலும் அசராம நிக்கிற “மனவலிமை” (Mental Strength) உங்களுக்கு இருக்கா?

மனதளவில் மிகவும் வலிமையான மனிதர்கள் ஒருபோதும் சில தவறுகளைச் செய்வதில்லை.

‘மெண்டல் ஸ்ட்ரென்த்’ அதிகம் உள்ளவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் செய்யாத அந்த 13 முக்கிய விஷயங்கள் இதோ:

1. சுய பரிதாபத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்: தங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டங்களை நினைத்து அழுதுகொண்டு நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
2. தங்கள் கட்டுப்பாட்டை இழக்க மாட்டார்கள்: மற்றவர்கள் தங்களை ஆதிக்கம் செலுத்தவோ அல்லது தங்கள் உணர்ச்சிகளைத் தீர்மானிக்கவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
3. மாற்றங்களைக் கண்டு ஓடி ஒளிய மாட்டார்கள்: புதிய சூழலையும் தவிர்க்க முடியாத மாற்றங்களையும் தைரியமாக வரவேற்பார்கள்.
4. கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள்: தங்களால் மாற்ற முடியாத வெளிப்புற விஷயங்களை நினைத்து வீணாகக் கவலைப்பட மாட்டார்கள்.
5. எல்லோரையும் திருப்திப்படுத்த முயல மாட்டார்கள்: அனைவருக்கும் பிடிச்ச மாதிரி வாழணும்னு நினைச்சு தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள். தேவைப்படும்போது ‘நோ’ சொல்லத் தயங்க மாட்டார்கள்.
6. திட்டமிட்ட அபாயங்களை (Calculated Risks) எதிர்கொள்ள பயப்பட மாட்டார்கள்: லாப நஷ்டங்களை முன்கூட்டியே கணக்கிட்டு, தைரியமாக ரிஸ்க் எடுப்பார்கள்.
7. கடந்த காலத்திலேயே வாழ மாட்டார்கள்: கடந்த கால தவறுகளையோ அல்லது கசப்பான நினைவுகளையோ நினைத்து நிகழ்காலத்தை பாழாக்க மாட்டார்கள்.
8. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்ய மாட்டார்கள்: செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த முறை அதைச் சரியாகச் செய்வார்கள்.
9. மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்பட மாட்டார்கள்: பிறரது வளர்ச்சியைப் பார்த்து உண்மையாகவே மகிழ்ச்சியடைவார்கள்; அதைத் தங்களின் முன்னேற்றத்திற்கான உத்வேகமாக மாற்றுவார்கள்.
10. முதல் தோல்வியிலேயே முடங்கிவிட மாட்டார்கள்: தோல்வியை ஒரு முற்றுப்புள்ளியாகப் பார்க்காமல், வெற்றிக்கான அடுத்த படியாகப் பார்ப்பார்கள்.
11. தனிமையைக் கண்டு பயப்பட மாட்டார்கள்: தனியாக இருக்கும் நேரத்தை தங்களின் அமைதிக்காகவும், புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுத்துவார்கள்.
12. உலகம் தங்களுக்கு கடமைப்பட்டிருப்பதாக நினைக்க மாட்டார்கள்: இந்த உலகம் தங்களுக்கு எதையும் தானாகத் தந்துவிடாது, தங்களுக்குத் தேவையானதை தாங்கள் தான் உழைத்துப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
13. உடனடி முடிவுகளை (Immediate Results) எதிர்பார்க்க மாட்டார்கள்: உண்மையான மாற்றத்திற்கும் வெற்றிக்கும் காலம் எடுக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, தொடர்ந்து பொறுமையுடன் உழைப்பார்கள்.

Psalm 51-

MORNING PRAYER, PSALM 51

MORNING PRAYER

GOD BLESS

PSALM 51

காலை ஜெபம் –

திருப்பாடல் : 51

கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

(திருப்பாடல் 51: 1-2. 6-7. 10-11. 12,15)

✝️ ஜெபம் ✝️

நேர்மையைக் கதிரொளி போலும், நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்பவரே!
உம் மக்களின் உள்ளத்து விருப்பங்களை உளமார நிறைவேற்றுபவரே!
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை உறுதிப்படுத்துகின்றவரே!
உம்மை உளமார போற்றுகின்றேன். உவகையோடு வாழ்த்துகின்றேன். உள்ளன்போடு நன்றி கூறுகின்றேன்.

தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

இறைவா, இவ்வுலக வாழ்க்கைப் போராட்டத்தில் அனுதினமும் நான் சந்திக்கும் எண்ணற்ற சவால்களை சமாளிக்கத் தேவையான மன உறுதியை தூய ஆவியானவர் வழியாக எனக்கு அளித்தருளும்.

“என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.” என எங்களுக்குக் கூறி எங்களுக்கு மனத்திடம் தந்தவரே உமக்கு நன்றி.

“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.” என்ற இறைவார்த்தைகள், இறைவா! என் இதய சிந்தனையில் இரவு பகலாக இயங்குவதாக!
ஏனெனில், இயேசுவே! “இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்” என நீர் கூறி இருக்கிறீர்.

இயேசுவே! உமது அறுவடை நாளில் நான் முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு பலன் தரும் நல்ல நிலத்தில் விழுந்த விதையாக இருக்க அருள் புரிவீராக!

இறைவா, இன்று விஷேசமாக தூய ஆவியின் துணையைத் தேடாமல் மன உறுதியற்ற நிலையில், மனத் துணிவின்றி, மனம் சோர்வுற்ற மனிதர் அனைவருக்காகவும் வேண்டுகிறேன்.

அவர்கள் இறுதிவரை மன உறுதியில் நிலைத்திருந்து உம்மால் மீட்படைய உம்மை வேண்டுகின்றேன்.

PSALM 145

MORNING PRAYER, PSALM 145

MORNING PRAYER

GOD BLESS BLESS

 

PSALM 145

காலை ஜெபம் –

திருப்பாடல் : 145

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.

(திருப்பாடல் 145: 1-2. 8-11. 13ab-14)

🛐 ஜெபம் 🛐

எல்லாம் வல்ல எம் ஆண்டவரே! சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றவரே! வலிமை இழந்தோர்க்கு ஊக்கம் அளிப்பவரே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகிறேன். ஒரு தாய் தன் சேயை அன்போடு நோக்குவது போல், இந்த இரவு முழுவதும் என் அருகில் இருந்து என்னை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய நாளை எனக்கு வாய்ப்பாகக் கொடுத்து இருக்கிறீர். உமக்கு நன்றி அப்பா! 🙏

இறைவா, என்னைவிட எளியோரிடம் நான் கனிவற்று நடந்து கொண்ட நேரங்களுக்காகவும், தற்பெருமை என்னும் தீய ஆவியினால் மனத்தாழ்ச்சி அற்று இருந்த தருணங்களுக்காகவும் உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் அகில உலகைப் படைத்த நீரே, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ” என கூறியிருக்கின்றீர்.

இறைவா ! இன்று விஷேசமாக தங்களது வாழ்வியல் துன்பங்களைத் தாங்காது மனப்பாரங்களால் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போருக்காக வேண்டுகிறேன். அவர்களது மனச்சுமைகளை இறக்கி அவர்களது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் அளியும். இயேசுவே! அவர்களது இருண்ட வாழ்வில் ஒளியேற்றும்.

இறைவா இந்த ஒய்வு நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். என்னைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

GOD BLESS BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

GOD BLESS BLESS

காலை ஜெபம்

திருப்பாடல் : 145

நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன். அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.

திருப்பாடல் : 145: 2-9

ஜெபம் 

அன்பும், இரக்கமும், பரிவும், கனிவும் மிக்க எங்கள் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறோம். புகழ்கிறோம். ஆராதிக்கிறோம். நன்றி கூறுகிறோம்.

இந்த காலை வேளையில் உம்மை நினைக்க, துதிக்க, ஆராதிக்க எங்களுக்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தந்தையே!

இயேசுவே, அன்று இரத்தப் போக்குடைய பெண்ணைப் பார்த்து “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று.” என்று கூறி பரிபூரண சுகமாக்கினீர். இறைவா உன் மேல் நம்பிக்கைக் கொண்ட அனைவரையும் நீர் தொட்டு குணமாக்கிட நாங்கள் உம்மை இறைஞ்சு வேண்டுகிறோம்.

இயேசுவே, கனானியப் பெண்ணின் ஆழமான நம்பிக்கையையும், தொழுகைக்கூடத் தலைவனின் அசைக்க முடியாத விசுவாசத்தையும் நாங்களும் கொண்டிருக்க அருள் புரிவீராக.

இறைவா இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

john the baptist

FEAST DAY  OF St. John the Baptist

FEAST DAY  OF St. John the Baptist

john the baptist

The feast of the birth of St. John the Baptist holds a special significance for many of us. Colourful festivities and meaningful rituals attached to this solemn feast are very endearing for the Christians influenced by Portuguese traditions. St. John the Baptist is called São Joãn. The scene at the time of the birth and naming of this great Saint mentioned in today’s Gospel and the general mood at the celebration of the feast day are somewhat similar.

The first emotion that we read in today’s Gospel is rejoicing. Not only the old parents of John, but the neighbours and relatives rejoice at his birth. At the time of his naming, something spectacular happens. Zechariah who was dumb for nine months begins praising God and the people are filled with awe and wonder. We are familiar with the emotion of joy which is quite secular in nature. However, in the religious festivities, there is something more than secular joy; there is awe and wonder, witnessing and participating in the Lord (yo)’s grace (han).

Today as we celebrate the feast of St. John the Baptist, let us not only experience joy, but also awe and wonder coming from the Lord’s grace!

MORNING PRAYER 1

MORNING PRAYER

MORNING PRAYER

திருப்பாடல் : 139

MORNING PRAYER 1

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.

(திருப்பாடல் 139: 1-3. 13-14.)

ஜெபம்

“மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது” என கூறிய என் அன்பு தெய்வமே! மாறாத உமது பேரன்பினால் மானிட குலத்தை மன்னித்து மீட்டருளுனீரே! “நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.” என்று கூறிய எங்கள் இரக்கத்தின் தேவனே! உம்மை வாழ்த்தி, வணங்கி, போற்றி ஆராதனை செய்கிறேன்.🙏

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீரே என்னைக் கைதூக்கிவிட்டீர்;

தந்தையின் அன்பார்ந்த திருமகனே! எங்கள் இயேசுவே! உம் பொருட்டு தந்தை பூரிப்படைந்தது போல உம் பிள்ளைகளாகிய எங்களைக் குறித்து நீர் பூரிப்படையும் வகையில் நாங்கள் நடந்து கொள்ள தூய ஆவியானவரின் துணையை நாங்கள் நாடுகின்றோம்.

இயேசுவே! உமது மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்று கூறிய திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியை நாங்கள் எப்பொழுதும் கைக்கொள்ள அருள் புரிவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

SACRED HEART

PRAYER TO THE SACRED HEART OF JESUS

PRAYER TO THE SACRED HEART OF JESUS

SACRED HEART

இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

இயேசுவின் திருஇருதயமே ! கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும் சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே ! எங்கள் குடும்பங்களில் உள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் .தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திருஇருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவனாவது உமது திருஇருதயத்தை நோகச் செய்திருந்தால் அவன் குற்றங்களுக்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவனுக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், ஊனமுற்றோர்களுக்கு ஊன்றுகோலும் ,விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்து காத்திருப்பீராக.

இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே ! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தரே, இந்த ஊரில் உள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும், அவர்களுடைய திருஇருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வபயத்தையும் வளரச் செய்யும். சீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும், மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.

திவ்விய இயேசுவே! முறைமுறையாய் உமது திரு சிநேகத்தில் சீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும் .

ஆமென்.

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

🙏 *நன்றி அறிதல்:*
அன்பு இயேசுவே, விடியலின் பேரொளியே! இந்தப் புதிய நாளுக்காக உமக்கு நன்றி. “என்னிடம் நம்பிக்கை கொள்கிறவர் எவரும் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்” என்று எங்களுக்குப் பாதுகாப்பு அளித்த உமது பேரன்பிற்காக உம்மைப் போற்றுகிறோம்.

📖 *இன்றைய நற்செய்திச் சிந்தனை:*

ஆண்டவரே, இன்று நற்செய்தியில் உம்மை நம்புவோர் உம்மை அனுப்பிய தந்தையையே நம்புகிறார்கள் என்று கற்றுக்கொடுத்தீர். உமது வார்த்தைகள் வெறும் பேச்சல்ல, அவை “நிலைவாழ்வு” தரும் கட்டளைகள் என்பதை உணரச் செய்யும். உலகத்தின் போலித்தனமான கவர்ச்சிகள் என்ற இருளில் நாங்கள் சிக்கிக்கொள்ளாமல், உமது ஒளியில் நடக்க அருள் தாரும்.

*வேண்டுதல்:*
இறைவா, இன்று எங்களுடைய எண்ணங்களும் செயல்களும் உமது ஒளியைப் பிரதிபலிக்கட்டும். கவலை, மன அழுத்தம், சந்தேகம் என்ற இருளில் வாடும் எங்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நாங்கள் நம்பிக்கையின் சுடராக விளங்கச் செய்யும். நாங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு வாழ்வைத் தருவதாக அமையட்டும்.

*அர்ப்பணம்:*
இயேசுவே, இன்றைய நாள் முழுவதையும் உமது ஒளியில் ஒப்படைக்கிறோம். நீர் காட்டும் சத்தியத்தின் பாதையில் உறுதியோடு நடக்க எங்களுக்கு ஆற்றலைத் தாரும். உமது வார்த்தையே எங்கள் கால்களுக்கு விளக்கு!

*ஆமென். அல்லேலூயா!*