MOR.PRAYER

காலை ஜெபம், MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

MOR.PRAYER

“அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்”.

(திருப்பாடல் 100 :1-5)

எங்கள் வாழ்வு தரும் ஊற்றே! உம் பேரின்ப ஓடையில், எங்கள் தாகம் தணிப்பவரே! எங்கள் மீட்பின் பிறப்பிடமே! இந்த காலை வேளையில், உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றோம்.

இறைவா! இன்றுவரை என்னை உம் சிறகுகளில் அரவணைத்து, பாதுகாத்து வரும் உம் மேலான அன்பிற்காக நன்றி அப்பா.

மீட்பின் தேவனே! உமது இரண்டாவது வருகையை மறந்து, அதை எதிர்நோக்காது, அதற்காக என்னையே நான் தயார்படுத்திக் கொள்ளாமல், கடந்த காலங்களில் நான் அறிவிலியாக இருந்ததற்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும்.

உமது வருகையை, தினம் தினம் ஆவலோடு எதிர்கொள்ளும் வகையில் அதற்கு ஏற்றபடி, முன்மதியுள்ள பெண்டிரின் மனநிலையை எனக்குத் தந்தருளும்.

இரக்கத்தின் இறைவா! செம்மறியின் விருந்திற்கு அழைக்கப்படும் மாபெரும் பேற்றினை எனக்கும் அளித்தருளும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

PRAYER

MORNING PRAYER

காலை செபம்

MORNING PRAYER

PRAYER

“அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். ‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்”!

(திருப்பாடல் 66: 1-7)

அன்பே உருவான எம் இறைவா! உம்முடைய இரக்கப் பெருக்கத்தினால், மற்றொரு புதிய நாளை காணச்செய்த உமது மேலான அன்பிற்காக நன்றி. தந்தையே! இந்த அதிகாலை வேளையில் உம்மை வாழ்த்திப் போற்றி, ஆராதிக்கின்றேன்.

என் அன்பு இயேசுவே! இந்தக் காலை வேளையில், உம்மை எண்ணியே என் உள்ளம் நாடுகிறது.

“என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” எனக் கூறிய இயேசுவே, உம்மையே நாடுகிறேன், தேடுகிறேன், நம்பிக்கை கொள்கிறேன்.

நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும், நிலைவாழ்வை அடைய வேண்டும் என்ற, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வந்த எங்கள் இயேசுவே !நாங்கள் கபடமற்ற மனமுடையவர்களாக வாழவும், நாங்கள் முழுமனதோடு உம்முடைய பிரசன்னத்தில், உம் அன்பில், எப்போதும் நிலைத்திருக்கவும் வரமருளும்.

உமது அளவுகடந்த ஞானத்திற்கேற்ப, இன்று என்னை பயன்படுத்தும். உம்மோடு உமக்காக வாழ்வதே, எனக்கு கிடைக்ககூடிய மாபெரும் பேறு எனப் புரிந்துக்கொண்டு வாழ இறைவா! எனக்கருள் புரியும்.

இயேசு மரி, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MOTIVATIONAL

MASTERMIND MONDAY

MASTER MIND MONDAY

MOTIVATIONAL

இவற்றை கற்றுக்கொண்டால் — எதுவும் உன்னை அசைக்காது!

உன் வாழ்க்கையில் யாரும் உன்னை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை வேண்டுமா?
அது அதிர்ஷ்டத்தால் வராது — இந்த 9 பழக்கங்களால் வரும்! 👇

1. 👁️ கண்களில் பார்த்துப் பேசு
யார் முன்னே நின்றாலும், அவர் கண்களை நேருக்கு நேர் பார். அது உன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். கண்களை தவிர்ப்பவன் — தன்னை தவிர்க்கிறான்.

2. ⏸️ உடனே பதில் சொல்லாதே
கேள்வி கேட்கும்போது சில நொடிகள் நிறுத்து. பிறகு அமைதியாக, சுருக்கமாக பேசு. அவசரமான வார்த்தைகள் பலவீனத்தை காட்டும். அமைதியான பதில் ஆற்றலை காட்டும்.

3. 🔒 உன் பலவீனத்தை மறை
எல்லாரிடமும் மனசை திறக்காதே. உன் வலியை அறிந்தவன் — அதை ஆயுதமாக்குவான். உன் அன்பானவர்களிடம் மட்டும் பேசு.

4. 😌 மன அழுத்தத்தை வெளியே காட்டாதே
உள்ளே புயல் வீசினாலும் — வெளியே அமைதியாக இரு. உன் நிதானம்தான் உன் மிகப்பெரிய பலம்.

5. 👔 நேர்த்தியாக உடை அணி
உடை என்பது வெறும் ஆடையல்ல — அது உன் ஒழுக்கத்தின் பிரதிபலிப்பு. நேர்த்தியான தோற்றம் உன்னை நீயே மதிக்க வைக்கும்.

6. 🗣️ மெதுவாக பேசு
வேகமாக பேசுபவன் பயத்தில் இருக்கிறான். மெதுவாக பேசுபவன் நம்பிக்கையில் இருக்கிறான். உன் வார்த்தைகளுக்கு நீயே மரியாதை கொடு.

7. 🚫 பிறர் கருத்தை பொருட்படுத்தாதே
“அவங்க என்ன நினைப்பாங்களோ?” என்று வாழ்க்கையை வீணாக்காதே. உன்னை பத்தி அவர்கள் சொல்வது — அவர்களின் பிரச்சனை. உன் பிரச்சனை இல்ல.

8. 🌊 கட்டுப்படுத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்
வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் அதற்கு எப்படி நீ நடந்துகொள்கிறாய் என்பதை மட்டும் மாற்றலாம். எதிர்வினை ஆற்றாதே — ஏற்றுக்கொள்.

9. 🌟 உன் வாழ்க்கையை நீயே வடிவமைத்துக்கொள்
யாரோ சொன்ன வழியில் போகாதே. உனக்கான கனவை வரைந்துகொள். அந்த தடத்தில் நட. அதுவே உன் விடுதலை.

திருக்குறள் சொல்கிறது:

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”

செயலில் உறுதி என்பது மனதின் உறுதியே — மற்ற எல்லாம் வெளிப்பூச்சுதான்.

LIFE AS

Life is a strange melody

Life is a strange melody

LIFE AS

Some people are meant to be loved for a short time, just like how our favourite songs, movies, and books come to an end. It’s about the quality of the time spent together, not the longevity of the love.
The True Meaning of Life*

Sometimes life feels like a burning fire of sadness.
Sometimes it blooms like a beautiful garden of joy.
Life is a strange melody—
it makes us laugh,
and at times, it brings tears to our eyes.
It gives us the taste of both
bitter and sweet experiences.
But at the end of the day,
life quietly becomes the account book of our actions,
where every deed we do finds its place.
So live wisely, act kindly, and walk with humility…

MOR.PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

MOR.PRAYER 1

“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்”.

(திருப்பாடல் 118: 1,14-15. 16,18-21 )

எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். கடந்த இரவு முழுவதும் பாதுகாத்த, உம் ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆண்டவரே, என் மன்றாட்டுகளை நீர் கேட்டதால், நான் உமக்கு என்றும் நன்றி செலுத்துவேன். நீர் என் வாழ்வில் செய்த அனைத்து அற்புதங்களுக்காகவும் நன்றி அப்பா. நீர் செய்த வல்ல செயல்களான நான் கண்டதையும், கேட்டதையும், பிறரிடம் எடுத்துரைக்காமலிருக்க என்னால் முடியாது. உம்மைப் பற்றி, உமது நற்செய்தியைப்பற்றி நான் பறைசாற்ற, தூய ஆவியின் துணையினை நீர் பேதுருவுக்கும், யோவானுக்கும் தந்தது போல, எனக்கும் தந்தருளும்.

இறைவா, இன்று விஷேசமாக பிறரால் வீண்பழி சுமத்தப்பட்டவர்கள், அவதூறு பேச்சுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்காக வேண்டுகிறோம். அவர்கள் படும் மனத்துயரினைக் கண்ணுற்று பாரும். அவர்களது கண்ணீரைத் துடைத்து, மனக்காயங்களை ஆற்றும். அவர்களுக்கு பொல்லாரினால் ஏற்பட்ட அவப்பெயரினை நீக்கியருளும்.

இறைவா! இந்த நாள் முழுவதும், உம்முடைய மகிமையை காணும்படியாக செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும் , தாழ்விலும் உம்மை மட்டுமே அன்புசெய்ய அருள்புரியும்.

இயேசு மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

LIVING

POSITIVE ATTITUDE A HEALING ATTITUDE

இன்றைய சிந்தனை.”
……………………….

” நேர்மறையாக சிந்தியுங்கள்..”

POSITIVE ATTITUDE A HEALING ATTITUDE

tomorrow
…………………………

துன்பங்களும், துயரமும் உங்களைத் துரத்துகிறதா? அவற்றிற்கு எளிதாக தீர்வு காண முயல வேண்டுமே தவிர
மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது..

துன்பம் இல்லாத மனிதர்களே உலகில் யாரும் இல்லை..

அந்த நேரங்களில் கீழே உள்ள மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமது பிரச்சினை எல்லாம் மிகமிக சாதாரணம்…

அதனால் எந்த ஒரு செயலை செய்யும் போதும் நேர்மறையாகவே சிந்திக்க வேண்டும்..

லண்டன் நகரத்தில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். அங்கு உள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளருவது போலவே அவை எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால் இந்தப் பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு ரோஜாப்பூ அருகில் இருந்தாலே இவர் கண்களில் இருந்து கண்ணீர் வரும். தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார்.

அதனால் இவர் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் இருந்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார்.

அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளிலில் நூற்றுக் கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

‘ஒரு பூ அருகில் இருந்தாலே இருக்க முடியாது. இப்போது இந்தக் கூட்டத்தில் இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி இறுதிவரை இருக்கப் போகின்றோம்’ என்று பயந்தார்.

ஆனால் வேறு வழி இல்லாமல் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார்.

பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்ததோடு தும்மலும் வந்தது. முகமெல்லாம் சிவந்து விட்டது.

கூட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்த ஒருவர் எழுந்து வெளியில் செல்கின்ற போது,

‘ ‘இந்த பூக்களைப் பாருங்கள் நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன’ என்று வியந்தபடி கூறிக் கொண்டே சென்றார்.

அப்பொழுது தான் இவருக்குத் தெரிந்தது. அந்தப் பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல, காகிதத்தில் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

‘இந்தப் பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்’ என இவர் நினைத்த விநாடியே அவருடைய அலர்ஜிக்கு உண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

இது தான் நம் மனதின் சக்தி! “ஒன்றை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அது நம்மை பாதிக்கும்.

ஆம்.,நண்பர்களே..

‘வாழ்க்கை ரொம்பத் துயரமாக,துன்பமாக இருக்கு’ என்று நீங்கள் நினைத்தீர்களானால், உங்களுக்கு வாழ்க்கையிலுள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சியான தருணங்கள் கூட உங்கள் கண்ணில் தெரியாது.

ஆனால்,

அதே நீங்கள் ‘வாழ்க்கை ரொம்ப ஆனந்தமாகப் போகுது’ அப்படியென்று நினைத்தீர்களானால்,

”உங்களுக்கு அன்றாடம் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகள் கூட ஆனந்தமாகத் தெரியும்.

அதனால் நீங்கள் கவலையான நேரங்களிலோ அல்லது மகிழ்ச்சியான நேரங்களிலோ எப்போதும் உங்கள் மனதை நேர்மறையாகவே வைத்திடுங்கள். அது தான் உங்களுக்குச் சிறந்தது.

ஆம், மனதில் நீங்கள் சாதாரணமாக நினைக்கும் எண்ணங்கள் இவ்வளவு சக்தி வாய்ந்தவை

அதனால் நீங்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்து பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சுமூகமாக செல்லும்.

 

tomorrow

SINGLE WORK  SMART WORK

SINGLE WORK  SMART WORK

u r precious

You cannot bring someone before God in prayer and then bring them before people in gossip…

Those two do not flow from the same heart.

Prayer covers.
Gossip exposes.

Prayer seeks restoration.
Gossip spreads damage.

“Set a guard over my mouth, Lord, keep watch over the door of my lips.”
Psalm 141:3

It is easy to talk about people.
To share what we heard, what we saw, what we think.
Sometimes it even feels harmless.

But words carry weight.
They can either heal or destroy.

When you truly pray for someone, your heart begins to soften toward them.

You begin to see them the way God sees them.
And it becomes harder to tear down the very person you are asking God to restore.

Sometimes the real test of your prayer life is not how long you pray, but how you speak after you pray.

So choose carefully…

Will you be someone who covers in prayer or someone who exposes in conversation?

Because you cannot do both at the same time.

240_F_589353006_rXYIad0ZKPjmGdN6Cq6eiZEL4e2o1nhi

Why do we still doubt…even when we’ve seen enough?

Why do we still doubt…even when we’ve seen enough?

76
He was resurrected lettering against a background of clouds and sun. Background for congratulations on the Resurrection of Christ. Vector illustration EPS10

The disciples had already heard it.

They were told.
They were even starting to believe.

And yet—
when Jesus stood among them,

they were startled.
Afraid.
Unsure.

Not because there wasn’t enough evidence.

But because something in them
was still holding back.

And maybe we know that space.

We’ve seen God work.
We’ve experienced moments that were real.

But when it comes to fully trusting,
fully stepping forward—

we hesitate.

We overthink.
We question.
We hold back just enough.

Not because we don’t believe…

but because we’re not ready
to let go of control.

And Jesus doesn’t reject that.

He meets them there.

He shows them.
He reassures them.
He stays.

Until doubt turns into understanding.

Maybe that’s the shift today.

Not pretending we don’t doubt—
but allowing Him to meet us in it.

And moving forward anyway.
——
Prayer:
Lord,
we believe—
but we still hesitate.

In moments of uncertainty,
when fear and doubt rise within us,
help us not to pull back.

Stay with us,
steady our hearts,
and remind us that You are near.

Give us the courage
to trust You more,
to move forward even when we don’t have all the answers,
and to walk with confidence
knowing You are already with us.

Amen.

Human hands praying to god on mountain sunset background

MORNING PRAYER

காலை ஜெபம்

MORNING PRAYER

33

“ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.
நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்”.

(திருப்பாடல் 34: 16-19. 20,22)

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருப்பவரே! நைந்த நெஞ்சத்தாரைக் காப்பாற்றுகின்றவரே!
நேர்மையாளருக்கு நேரிடும், தீங்குகளில் இருந்து விடுவிக்கின்றவரே! உம்மை வாழ்த்தி, வணங்கி, ஆராதனை செய்கிறோம். அற்புதங்கள் செய்யும் எங்கள் அன்பரே! உம்மைப் போற்றி துதித்து நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! நீர் எங்கள் வாழ்வில் செய்த, அனைத்து வியத்தகு செயல்களையும் நாங்கள் நினைவுகூர்ந்து நன்றி கூறுகின்றோம்.

தந்தையே! என் வாழ்வில், கடந்தபோன காலங்களில், நான் இறைப்பற்றில்லாது இருந்த நேரங்களுக்காக, உம்மிடம் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இனி இன்பத்திலும், துன்பத்திலும் எவ்வேளையிலும், உம் பாதங்களை என் கரங்கள் இறுகப்பற்றிக் கொள்ளும்.

இறைவா! இந்நாளில் விஷேசமாக, இறைப்பற்றிலாதவர்களுக்காக வேண்டுகிறேன். அவர்கள் அனைவரும் உம்மில் நம்பிக்கைக் கொள்ளவும், உம் வழி திரும்பவும், உம்மில் கொண்ட விசுவாசம், அனுதினமும் பெருகவும் வேண்டுகிறேன்.

இறைவா! என்னை முழுமையாக உமது பாதத்தில் வைக்கிறேன். உம்முடைய பரிசுத்த ஆவியினாலே என்னை பரிசுத்தப்படுத்தும். என்னை உமக்கு சொந்தமாக்கும். இன்று முழுமையாக என்னை, உமது திருநாமத்தின் பாத்திரமாக, உம்முடைய ஆவியின் ஆலயமாக என்னை பயன்படுத்தும்.

இறைவா! உம் திருமுகத்தை தேடவும், உம் திருவழியில் நடக்கவும், என் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு விலகவும் அருள்புரியும்.

இயேசு, மரி!, சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்

PSALM 27

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

PSALM 27

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; “நீரே என் கடவுள்” என்று சொன்னேன்.

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்; என்னை வெட்கமுற விடாதேயும்; பொல்லார் வெட்கிப்போவார்களாக! பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!

(திருப்பாடல்கள் 31:14-17)

உலகை படைத்த ஒரே இறைவனின் அன்னையே! விண்ணக அரசியே! இதோ இந்த காலை வேளையிலே உம்மோடு பேசவும், உமது துயரத்தில் பங்கெடுக்கவும், அதை பகிர்ந்து கொள்ளவும் வந்திருக்கும் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

அம்மா! சிலுவை அடியில் உயிரற்ற உமது மகனை, உமது மடியில் கிடத்தி வைத்தார்கள். அப்போது உமது மனது சொல்ல முடியாத துயரத்தில் இருந்திருக்கும், அம்மா எதற்காக இந்த துயரம்? அதை நானே தியானிக்கின்றேன்…

உலகில் எந்த தாய்க்கும் கிடைக்காத துயரம், உமக்கு கிடைக்கபட்டது.

தன்னை பிடிக்க வந்தவனின் காதை, பேதுரு வாளால் வெட்டியபோது, அதை குணமாக்கிய உமது மகனை, அவரது கைகளிலும் கால்களிலும், ஆணிகளை வைத்து சுத்தியால் ஓங்கி அடிக்கும்போது, நீர் பட்ட துன்பத்தை எவ்வாறு எடுத்து கூற முடியும்???

முடக்குவாதமுற்ற ஒருவரை, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்று சொல்லி, முடக்கு வாதத்தை குணமாக்கிய உமது மகனை இன்று, சிலுவை மரத்தில் அசைய முடியாமல் ஆணிகளால் அடிக்கபட்டு, இரத்தம் வழிந்த உமது மகனை கண்ட போது, நீர் பட்ட துன்பத்தை யாரால் தாங்க முடியும்???

பன்னிரண்டு வயது ஆன, இறந்துபோன ஒரு சிறுமியின் கையைப் பிடித்து “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்று கூறி உயிர்ப்பித்த, உனக்கென இருந்த அந்த ஒரே மகனை, இன்று சிலுவையில் அறையப்பட்டு இறப்பதை காணும்போது, நீர் பட்ட துன்பத்தை யாரால் அதை உணர முடியும்???

பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய், பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறியதை கேட்ட நீர், இன்று சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று அதே மக்கள் கூறுவதையும் நீர் கேட்கும்போது, நீர் பட்ட துன்பத்தை யாரால் அதை பொருத்துகொள்ள முடியும்???

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று, தன் மகன் ஆண்டவர் என, நீர் கேட்ட வார்த்தைகளையும், இன்று ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப் பட்டவனுமானால், தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்று கேலிசெய்த வார்த்தைகளையும் இப்போது கேட்கும்போது, நீர் அனுபவித்த துயரத்தை யார் பகிர்ந்துகொள்ள முடியும்?

அன்று, இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, எருசலேம் கோவிலில் அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து, பேசிய உமது மகனை கண்ட நீர் இன்று, கள்வர்கள் நடுவில் சிலுவை மரத்தில் தொங்கும் உமது மகனை பார்க்கும் போது, நீர் அனுபவித்த வேதனையை யார் ஏற்றுகொள்ள முடியும்?

உனக்கென இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே! அவரையும் சிலுவையில் பலிகொடுத்து, தனியே தவித்த உம்மை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறோம் அம்மா.

அம்மா! இப்படி உமது துயரத்தை சொல்லிகொண்டே போகலாம். இதெல்லாம் எங்களுக்காகதான், எங்கள் பாவங்களுக்காக தான். எங்களுக்கு உமது மகனிடமிருந்து, மன்னிப்பை பெற்றுதாரும் அம்மா.

அம்மா! இனி நாங்கள் பாவம் செய்ய மாட்டோம் என்று கூறுவதை தவிர, வேறு என்ன சொல்லி உம்மை நாங்கள் ஆறுதல் படுத்த முடியும்?

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்