NIGHT PRAYER
இரவு ஜெபம் †*_
எல்லாம் வல்ல இறைவா, என் களைப்பை நீக்கி எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். இன்றைய நாள் முழுவதும் நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும், உம்மைப் போற்றுகின்றேன். என் பாவங்கள் உம்முடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத் தனத்திற்கும் விரோதமாயிருப்பதால் இவைகளை மனம் நொந்து வெறுக்கின்றேன். என் பாவங்களையெல்லாம் மன்னிக்கும்படி உம்மைப் பணிந்து வேண்டுகின்றேன். இந்த இரவில் என்னைத் திடீர் மரணத்திலிருந்தும், தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும்.
மூவொரு இறைவா, என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன். குறிப்பாக என் மரண நேரத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். இப்போதும், எப்போதும் உம் அருள் பிரசன்னத்தால் என்னை நிரப்பியருளும். என் இறுதி நேரத்தில் உம்மைச் சந்திக்க மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்து என் உயிர் பிரியவும், உம் நித்திய பேரின்பப் பாக்கியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளவும், கருணை புரிந்தருளும். என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் இன்றிரவு உம் அன்பின் கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்க பலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
மரியாயே எங்கள் நல்ல தாயாரே.. இந்த ராத்திரியிலே சகல பாவங்களிலும் விடுவித்து மரணத்தினின்றும் எங்களை தற்காத்துக் கொள்ளும்.
இயேசுவுக்கே புகழ்.! இயேசுவுக்கே நன்றி.! மரியே வாழ்க.!!