MORNING PRAYER
திருப்பாடல் : 116
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
(திருப்பாடல் 116: 12-13. 15-16. 17-18)
🛐 ஜெபம் 🛐
என் அன்பிற்குரிய இயேசு கிறிஸ்துவே, இப்புதிய ஓய்வு நாளை எங்களைக் காணச் செய்த உமது மேலான கிருபைக்காக நன்றி.
இயேசுவே உமது திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவான இன்று ஆலயத்தில் திருப்பலியில் உமது திருவுடலை புசிக்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உமது ஆன்மீக உணவு எங்களது ஆன்மா, உடல் இரண்டிற்கும் பெலனையும், சக்தியையும் தர நீர் அருள் புரிவீராக.
உமது திருவுடலை நாங்கள் உண்ணும்போதெல்லாம் உமது சாவினை அறிவிக்கும் பேற்றினை எங்களுக்கு நீர் அளித்துள்ளீர்.
இறைவா உமது திரு இரத்தம் எங்கள் அனைவரின் பாவங்களைக் கழுவிடவும், உமது திருவுடல் அனைத்து நோயாளிகளையும் பரிபூரண சுகமாக்கிடவும் அருள் புரிவீராக.
இயேசு, மரி!, சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.