Site icon Life Setter Saluja

MORNING PRAYER

MORNING PRAYER 1

MORNING PRAYER

APPRECIATE

ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணி செபம்:

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, மணிக்கு ஒருமுறையாக 9 முறை குழந்தைக்குரியப் பற்றுதலோடு தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்)

ஓ இயேசுவே! “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக நான் கேட்கிறேன், தேடுகிறேன், தட்டுகிறேன். நான் கேட்கும் இந்த வரங்களைக் கொடுத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளுமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை கெஞ்சி மன்றாடுகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

ஓ இயேசுவே! “விண்ணும் மண்ணும் அழிந்து போகும். ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா” என்று மொழிந்தீரே. உமது திருத்தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்கப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

(தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்)

Exit mobile version