smile

SMILE PLEASE

SMILE PLEASE

smile

Today is National Smile Day. So this little poem…..
Smiling is infectious,
We catch it like the flu.
Someone smiled at me today;
I started smiling too.
I walked around the corner
And someone saw me grin,
When he smiled I realised
I had passed it on to him!
I thought about the smile
And then realised its worth;
A single smile like mine
Could travel round the earth.
So if you feel a smile begin,
Don’t leave it undetected;
Start an epidemic
And get the world infected!

LIVING

Live in peace , Not in pieces.

Live in peace , Not in pieces.

 

LIVING

Not everyone thinks the way you think,

Know the things you know,

Believe the things you believe,

Nor act the way you would act.

Remember This

and you will go a long way

in getting along with people.

Live in peace , Not in pieces.
Having a sharp memory is a good quality of the brain.

But the ability to forget the unwanted thing is a far better quality of the heart .

Live in peace , Not in pieces.

GOOD

அமைதி அனைவருக்கும் சொந்தமானது

அமைதி அனைவருக்கும் சொந்தமானது

GOOD

அமைதி என்பது ஒரு பிரிக்க முடியாத நன்மை, அது அனைவருக்கும் சொந்தமானது என்றும், மக்களின் மனச்சான்றுகளில், பொது நன்மைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதியான மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய உறுதிப்பாடு இருந்தால் மட்டுமே, அமைதியை உண்மையிலேயே அடையவும், வாழ்க்கையின் எதார்த்தமாகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சியாகவும் அனுபவிக்கவும் முடியும் என்றும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் மொழிந்ததையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மேலும் நம்முடைய பரபரப்பான இன்றைய உலகில், இந்தச் செயல்முறை நிகழ்வதற்குத் தேவையான பொறுமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் திருத்தந்தை, இடங்கள், சமூகங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் தொடங்கி, அவைகள் நமக்குச் சொல்ல வேண்டியதைக் கேட்பதன் வழியாக, உண்மையான அமைதி அடித்தளத்திலிருந்து வடிவம் பெறுகிறது என்பதை வரலாறும் நடைமுறை அனுபவமும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன என்றும், இந்த வழியில், கருத்து வேறுபாடுகள் மற்றும் அவை ஏற்படுத்தும் முரண்பாடுகள் ஒதுக்கி வைக்கப்படாமல், ஒப்புக்கொள்ளப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு, சமாளிக்கப்படும்போது அமைதி சாத்தியமாகும் என்பதை நாம் உணருகிறோம் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

சான்று வாழ்க்கை வாழ வேண்டும்

உலகிலும் நமது சமூகங்களிலும் வன்முறை நிலவுகிறது என்றும், போர்கள், பயங்கரவாதம், மனித வர்த்தகம் மற்றும் பரவலான ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில், நமது குழந்தைகளும் இளைஞர்களும் வாழ்க்கை கலாச்சாரம், உரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை அனுபவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, எல்லாவற்றிற்கும் மேலாக, வித்தியாசமான மற்றும் வன்முறையற்ற வாழ்க்கை முறையைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் சான்று வாழ்வு அவைகளுக்குத் தேவை என்பதையும் அடிக்கோடிட்டுக்காட்டினார்.

நற்செய்தியும் மறைப்படிப்பினைகளும் அகிம்சை என்பது, ஒரு வழிமுறையாகவும் பாணியாகவும் நமது முடிவுகள், உறவுகள் மற்றும் நமது செயல்களை வேறுபடுத்திக் காட்ட கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, இந்த முயற்சியில் கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தியும் திருஅவையின் சமூக மறைப்படிப்பினையும் நிலையான ஆதரவின் ஆதாரமாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

அமைதியின் கலாச்சாரத்தை வளர்ப்பது என்பது நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள் என அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பணி என்பதால், அவர்கள் அனைவருக்கும் நற்செய்தியும் திருஅவையின் சமூக மறைப்படிப்பினையும் ஒரு திசைகாட்டியாகவும் செயல்பட முடியும் என்பதால், அவர்கள் அதை ஆலோசனை மற்றும் நடைமுறை வழியாக, நபரின் மாண்பு மற்றும் பொது நன்மையால் ஈர்க்கப்பட்டு முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

MOR.PRAYER

PRAYER FOR THE DAY

PRAYER FOR THE DAY

MOR.PRAYER

வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!

இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!

நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே,

ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

(வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே!

இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!

எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே.

psalm 111

MY PRAYER FOR THIS DAY

MY PRAYER FOR THIS DAYpsalm 111

Lord, empty me of pride, and fill me with Your mercy.

Lord, empty me of anger, and fill me with Your calm.

Lord, empty me of judgment, and fill me with compassion.

Lord, empty me of fear, and fill me with trust in You.

Lord, empty me of control, and fill me with surrender.

Lord, empty me of resentment, and fill me with forgiveness.

Lord, empty me of selfishness, and fill me with love.

Lord, empty me of anxiety, and fill me with stillness.

Lord, empty me of bitterness, and fill me with healing.

Lord, empty me of ambition, and fill me with purpose.

LIFE

TREASURE EVERY MOMENT

TREASURE EVERY MOMENT

LIFE

If I could offer you just one piece of advice to carry in your heart, it would be this:

Treasure every moment you have with the things you love—whether they’re places, objects, or people.

Because everything has an ending… and we rarely realize we’re living the “last time” as it’s happening.

There will be a last time you watch the sunrise, a last time you taste ice cream, a last time you smell a blooming rose.
There will be a last time you walk into certain rooms, hug your pets, or hear the voice of someone you love.

Sometimes, we know when those moments are happening—and we can savor every second.
But so often, we only understand their value once they’re gone, and it’s too late to return.

So live deeply. Feel every little moment as if it won’t come again.
Hold a little longer. Listen a little closer. Love a little fuller.
So when time finally takes those moments away, you’ll have no regrets—only warm, complete memories.

SPECIAL

LIVE WITH A BLESSED THOUGHT

LIVE WITH A BLESSED THOUGHT

SPECIAL

When we see someone struggling through a storm, let’s be the umbrella that shelters them and not a broadcaster. In moments of another’s adversity, the impulse to offer unsolicited advice or judgment often overshadows the simple act of offering genuine support.

When we witness someone struggling, the most impactful response is not to become a commentator on their situation, but rather to serve as a source of comfort and shelter. To be the “umbrella” is to offer empathy, understanding, and practical assistance without the need to analyze, criticize, or offer solutions that may not be desired or helpful.

True compassion lies in providing a safe space for the individual to weather their storm, knowing that they are seen, heard, and valued, even without words of correction or direction. The power of quiet presence and unwavering support can often be far more effective than any well-intentioned but ultimately intrusive commentary.

APPRECIATE

Appreciate What You Are

Appreciate What You Are

APPRECIATE

A sunflower doesn’t try to be a rose.

It doesn’t apologize for not being a rose;
and it doesn’t make itself smaller to avoid standing out.

It doesn’t change the shape of its petals or the size of its seeds,
and it doesn’t grow thorns just because a rose does.

It doesn’t shrink itself or sharpen itself to fit in with the flowers that are different, simply because some people love roses. Instead, it stands tall, proud to be itself.

Because the sunflower knows that there are people out there who love the tall things, the yellow things, the bright things, and it knows that these are its people: the ones who will see it and appreciate it for who and what it is.

Yes, there are people out there searching for a sunflower to love; to cherish; to treasure.

And the sunflower knows
that its people will never find it,

if it insists
on looking like a rose.

PEACE OF MIND

MORNING PRAYER

MORNING PRAYER

PEACE OF MIND

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

எசாயா 12 : 2-6

ஜெபம்

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருபவரே! வலியோரை அரியணையினின்று தூக்கி எறிபவரே! தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துபவரே! பசித்தோரை நலன்களால் நிரப்புபவரே! செல்வரை வெறுங்கையராய் அனுப்புகிறவரே! உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதனை செய்கிறோம்.

ஆண்டவரே! தாழ்ச்சியிலும், தூய அன்பிலும், பிறரன்பு பணியிலும் அன்னை மரியாளை உதாரணமாக எங்கள் அனைவருக்கும் அளித்தீர். ஆனால் அகம்பாவம், ஆணவம், சுயநலம், கடும்சினம் ஆகிய அலகையின் அஸ்திரங்களினால் அவ்வப்போது நான் வீழ்ந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். இரக்கத்தின் இறைவா! உன் அன்பு பிள்ளையாகிய என்னை மனமிரங்கி மன்னித்தருளும்.

ஆண்டவரின் தாயாகிய அன்னை மரியா, எங்களுக்காக பரிந்து பேச, எங்களுக்காக மன்றாட, எங்களுக்காக இரக்கம் கொள்ள பாவிகளாகிய நாங்கள் யார்? அகில உலகுக்கும் அன்னையவளை எங்களுக்குத் தாயாக தந்த எங்கள் தந்தையே உமக்குக் கோடி நன்றி.

இயேசுவே! நீர் கூறியவற்றை அனைத்தும் நாங்கள் செய்வதே அன்னையவளுக்கு நாங்கள் செலுத்தும் உண்மையான அன்பு. அது ஒன்றே அவளை என்றென்றும் மகிழ்விக்கும்.

ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம் என்றென்றும் போற்றப்படுவதாக.

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம் †

என்றும் வாழும் அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் உம்மிடம் திரும்பி வர உமது மென்மையான, தெளிவான குரலை நாடுகிறோம். நீர் பேசுவதை நாங்கள் கேட்கும்போது, ​​ உமது பரிசுத்த சித்தத்தைத் தழுவுவதற்கும், உமது தெய்வீக இரக்கத்தின் கருவியாக மாறுவதற்கும், உமது கட்டளைகளைப் பின்பற்றுவதற்கான வல்லமையையும் எங்களுக்குத் தந்தருளும்!

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும், தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே.

எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த தாயாரான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், இவை அனைத்தையும் தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †

இனிய இரவு வணக்கம்!
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †