NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

எம் இரக்கத்தின் ஊற்றே இறைவா! எங்கள் மூதாதையரான இஸ்ரேல் மக்கள், உம்மை விட்டு பலதடவை விலகிச் சென்றாலும், அவர்களை மன்னித்து என்னிலடங்கா அற்புதங்களை செய்தீர்கள். செங்கடலை இரண்டாக பிரித்து, தரையிலே நடக்கச் செய்தீர். பாறையைப் பிளந்து, தண்ணீர் பொங்கிவர செய்தீர். வானத்திலிருந்து மன்னா என்ற உணவை, இஸ்ரேல் மக்கள் உண்பதற்கு வேண்டிய மட்டும் பொழியச் செய்தீர் அப்பா. நன்றி ஆண்டவரே.

அதே போல் நாங்களும், பலதடவை உம்மை விட்டுச் சென்றாலும், எங்களை கைவிடாமல், எங்கள் தேவைகள் அனைத்தையும், எங்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்பா. ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றி பாதுகாப்பது போல், ஒவ்வொரு நாளும் எம்மை அரவணைத்து வழிநடத்தி வருகிறீர் அப்பா. நன்றி ஆண்டவரே.

இன்றைய நாள் முழுவதும், உம்மை விட்டு விலகிச் செல்லாமல், உம்முடைய வலது கரத்தால் எங்கள் கைகளை பிடித்து, எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய இரவு வேளையிலும், எங்களை உமது அடைக்கலத்திலே ஒப்படைக்கின்றோம். இயேசுவே! எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், அமைதியான மனநிலையையும் தாரும் அப்பா. அதிகாலையில் முழு ஆன்ம, உடல் நலத்துடன் விழித்தெழுந்து, உமது திருமுகத்தைக் கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்

அடுத்தவர் அறியாமல் அயலானுக்கு உதவிடும்போது, ஆண்டவராகிய நீர் கைமாறு அளிக்கின்றீர் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்த இயேசுவே! இன்றைய நாள் முழுவதும் உமது அருளுதவியில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, உமது அன்பு பிள்ளைகளைப்போல் அரவணைத்து காத்து, வழிநடத்தியதற்காக நாங்கள் உம்மைப் போற்றி புகழ்கின்றோம்.

நாங்கள் இயங்குவதும், இருப்பதும் உம்மாலே; உமது அருட்கரம் எங்களோடு இருந்து, அறவழிகாட்டி, வாழ்வு என்னும் பாதையில் அழைத்துச் சென்று, அற்புதங்கள் செய்து வாழ வைத்ததற்காக நன்றி கூறுகின்றோம். அடுத்தவர் தரும் அங்கீகாரம் அல்ல; ஆண்டவராகிய நீர் தரும் அருள் ஆசீர் அபரிமிதமானது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு செயலையும் உமது மகிமைக்காக செய்ய, நீர் தந்த அருளுக்காக நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! சிறிய அளவு செய்தாலும், உள்ளத்திலிருந்து கொடுக்கும்போது, உள்ளத்தை உற்றும் நோக்கும் நீர், உரிய கைமாறு செய்வீர் என்பதை உணர்ந்து, எங்களால் முடிந்ததை பிறருடைய வாழ்வுக்காக வழங்கிட, எங்களைத் தூண்டியதற்காக நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! இந்த இரவு வேளையில் உறங்கச் செல்லும் நாங்கள், உமது அருட்கரங்களை நோக்கி எங்களுடைய புறக்கரங்களை நீட்டுகின்றோம். உமது காயப்பட்ட கரங்கள், எங்களுடைய உள்மனக் காயங்களை ஆற்றி, தேற்றி இளைப்பாறுதல் தந்து, இனிய உணர்வுகளோடு, உறவுகளோடு புதிய நாளை வாழ்ந்திட வழிகாட்ட வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்களுக்காகவும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நன்றி செலுத்துகிறோம்!

எங்கள் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தடுக்க உமது வலிமைமிக்க சம்மனசுக்களை எங்களைச் சூழ்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி. கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, ​​இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.

அப்பா, எங்கள் கவலைகளை நீர் அறிவீர்! எங்கள் கஷ்டங்களை கவனித்துக்கொள்கிறீர். எனவே எங்களுடைய கடினமான கவலைகள் அனைத்தையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக் கிறோம். எமது கடின சூழ்நிலைகளை நாங்கள் உமது காலடியில் வைக்கிறோம். ஒரு புதிய நாள் தொடங்கும்வரை எங்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுத்தருளும். இவை அனைத்தையும் எங்கள் இரட்சகராகிய இயேசுவின் தூய திருநாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்!

இரவு செபம்..

ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

(எசாயா 64:8-9)

குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எந்தத் தீங்கும் நேரிடா வண்ணம் எங்களை காத்துக் கொள்ளும்.

ஒன்றுமில்லாத களிமண்ணாய் இருந்த எங்களை நீரே வனைந்து உம் திட்டத்தின் படி எங்களை வழிநடத்தி, பயன்படுத்தி வருகின்றீர்.

ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும் தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே. நன்றி.

– ஆமென்!

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

எம் அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.

எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக, நன்றி கூறுகின்றோம்.

இன்றைய நாள் முழுவதும் எங்கள் உடனிருந்து, பாதுகாத்து, ஆலோசனை தந்து, ஆரோக்கியத்தை அளித்து, சோர்வுகள் எங்களை தாக்கினாலும் எமக்கு ஆற்றில் தந்து, அரவணைத்தீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

உமது அன்பை பிரதிபலிக்கும் வகையில் எங்களை இன்று நடக்கச் செய்தீரே, உமது ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பினீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.

தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும்.

பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.

எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும், மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும்.

தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும்.

நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும், உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.

ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளும். இன்று களைப்புற்ற எனது மனமும், உடலும் உம்மில் ஓய்வு பெறட்டும்.

எங்கள் குடும்பத்தையும், உறவுகளையும் உமது பாதுகாப்பில் காப்பாற்ற வேண்டுகிறேன். நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தையும், துயருருவோருக்கு ஆறுதலையும் தந்தருளும். நாளைய தினத்திற்கான நம்பிக்கையும், ஆற்றலும் எங்களுள் புதுப்பித்தருளும். எங்கள் மனதில் அமைதியும், எங்கள் வீட்டில் சமாதானமும் நிலைத்திருக்க அருள் தாரும். துன்மார்க்கத்திலிருந்து எங்களை விலக்கி, உமது ஒளியில் நடத்தும்.

இன்றைய இரவில் எங்கள் கனவுகள், உமது அமைதியால் நிரம்பட்டும். எங்கள் வாழ்வில், உமது சித்தம் நிறைவேறட்டும். இயேசுவின் நாமத்தில் இவற்றையெல்லாம் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். – ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு செபம்

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.

எங்கள் குடும்பங்களையும், குடும்ப சூழ்நிலைகளையும் ஆசீர்வதிக்கும் தெய்வமே இறைவா, உம்மை நன்றியோடு போற்றி புகழ்கின்றோம் அப்பா.

இன்றைய நாள் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல் பாதுகாத்து, யாதொரு தீமையும் எங்களை அணுகாது, உமது நிறைவான அருளினால் எங்களைக் காத்த உம் பேரன்பிற்காக நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், எண்ணிலடங்கா நன்மைகளாலும், நலன்களாலும் ஆசீர்வதித்து, வழிநடத்தி வருவதற்காக நன்றி அப்பா.

நாங்கள் ஒவ்வொருவரும் உம்மைப்போல பணிவு கொண்டவர்களாய், தாழ்ச்சி உள்ளவர்களாய் வாழ, எங்களுக்கு உமது அருளை பொழிவதற்காய் நன்றி செலுத்துகிறோம்.

எங்கள் உள்ளங்கள், இல்லங்கள் உமது அன்பினால், உமது ஆளுகையின் இரக்கத்தினால், வல்லமையாய் செயல்பட செய்கிறீரே உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஒவ்வொருவரும், உமது ஆசீர்வாதத்தின் இரக்கத்தை உணரச் செய்தீரே நன்றி அப்பா.

இந்த இரவை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். இந்த இரவிலே உமது அன்பு எங்களோடு இருப்பதாக. உமது அருள் எங்களோடு இருப்பதாக. உமது வல்லமை உங்களோடு இருப்பதாக.

எங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் உம் இரக்கத்தினால் நிரப்புங்க அப்பா. இந்த இரவு முழுவதும் உமது அருளை நாங்கள் உணர்ந்து கொள்ளச் செய்வீராக. காவல் தூதர்கள் எங்களோடு இருப்பதை நாங்கள் அறிந்து கொள்ள செய்வீராக.

~ ஆமென்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

ஆண்டவரே! இன்றைய நாளுக்காக நன்றி. இந்நாளை அமைதியோடு முடிக்க வழிநடத்தியதற்கு நன்றி அப்பா. நாங்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும், உமது கரங்களில் ஒப்படைக்கிறோம்.
இன்றைய நாளின் எனது தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளும்.
இன்று களைப்புற்ற எனது மனமும், உடலும் உம்மில் ஓய்வு பெறட்டும்.

எங்கள் குடும்பத்தையும், உறவுகளையும் உமது பாதுகாப்பில் காப்பாற்ற வேண்டுகிறேன். நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தையும், துயருருவோருக்கு ஆறுதலையும் தந்தருளும். நாளைய தினத்திற்கான நம்பிக்கையும், ஆற்றலும் எங்களுள் புதுப்பித்தருளும்.
எங்கள் மனதில் அமைதியும், எங்கள் வீட்டில் சமாதானமும் நிலைத்திருக்க அருள் தாரும். துன்மார்க்கத்திலிருந்து எங்களை விலக்கி, உமது ஒளியில் நடத்தும்.