NIGHT PRAYER
இரவு நேர பிரார்த்தனை †
எல்லாம் வல்ல தந்தை, மகன், தூய ஆவியானவரே, நாங்கள் உம்மை வணங்குகிறோம், மகிமைப்படுத்துகிறோம்! உம்முடைய தெய்வீக மகத்துவத்திற்கு நாங்கள் எம்மை அர்ப்பணிக்கின்றோம். எங்களிடம் இருந்தும் மற்றும் அனைத்து விசுவாசிகளிடமிருந்தும், நீர் விரும்பாதவைகளை எம்மிலிருந்து களைந்தருளும். உம்முடைய பார்வையில் நன்றியுள்ளவற்றை மாத்திரமே எங்களுக்கு வழங்கிடவும் பணிவுடன் மன்றாடுகிறோம்.
நீர் கட்டளையிடுவனவற்றை நாங்கள் இங்கே செய்யவும், நீர் வாக்குறுதியளிப்பதைப் பெறவும், உமக்கு நாங்கள் எங்கள் ஆத்மாக்களையும் உடலையும் அர்ப்பணிக்கின்றோம். பிறருக்கு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும், ஆறுதலையும் தந்து, அவர்களின் அனைத்து சோதனைகளிலும், துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்து, அவர்கள் உண்மையை அறிந்துகொள்ளவும், அனைவரையும் அன்பு செய்யவும்,
உமக்கே சேவை செய்யவும், இனிமேல் உமது பரலோக இராச்சியத்தை அனுபவிக்கவும் அருள்புரிவீராக.
உம்முடைய தெய்வீகப் பாதுகாப்பிற்காக உலகளாவிய ரீதியில் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும் மன்றாடுகிறோம். நீர் அவர்களுடைய பாவங்களுக்கான உயிருள்ள மன்னிப்பை வழங்கிடவும், மேலும், மரித்து, இவ்வுலகிலிருந்து விலகிச் சென்ற அனைத்து ஆன்மாக்களும் உம்முனுடைய நித்திய அமைதியில் இளைப்பாறிடவும் அருள்வீராக! என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரிபவர் நீரே! ஆமென்! †
எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †