MORNING PRAYER
காலை✝️ஜெபம்🌤️🌴
🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் ப+வென அவர்கள் மலர்கின்றார்கள்.
அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.
அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
(திருப்பாடல்கள் 103:13-18)
✝️ஜெபிப்போமாக :🛐
விண்ணக தந்தையே இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம், புகழ்கின்றோம், வாழ்த்துகின்றோம், வணங்குகின்றோம், உம்மை ஆராதிக்கின்றோம்.
இந்நேரம் வரை எங்களை காத்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம்.
எங்கள் அன்பான தந்தையே! இதோ உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொரு ஆன்மாவும், இறுதிநாளில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நீர் ஆவல் கொண்டீரே! அதற்காக உமது மகனையே பலியாக்கினீரே!
இதோ பாவம் செய்து, உம்மை விட்டு பிரிந்த, அனைத்து ஆன்மாக்களுக்காகவும், உம்மிடம் மனதார மன்னிப்பு வேண்டி ஜெபம் செய்கிறோம் அப்பா!
சாத்தானின் மாய வலையில், உமது ஆன்மாக்கள் விழுந்து கொண்டிருப்பதை காண்கிறோம், எங்களை மீட்டுக் கொள்ளும் ஆண்டவரே! நாங்கள் பலவீனமான மனிதர்கள் ஏமாற்றப்படுகிறோம்! எங்களை காத்தருளும்; எங்களை வழிநடத்தும்; எங்களுக்கு அருள் புரியும்; எங்களுக்கு துணையாய் இரும்; உமது தூதர்களை அனுப்பி எங்களை காப்பாற்றும்.
ஆண்டவரே! உலகெங்கும் உள்ள, உமது பிள்ளைகளாகிய நாங்கள், சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறோம்; சோதனையில் விழுந்து விடுகிறோம்; சோதனையில் சிக்கிக் கொள்கிறோம்; எங்களால் மீண்டு வர இயலவில்லை; நீரே எங்களுக்கு துணை செய்யுமாறு உன்னிடம் பணிந்து வேண்டுகிறோம் அப்பா! எங்களை கைவிட்டு விடாதேயும். சாத்தானிடம் கையளித்து விடாதேயும். உம்மிடமிருந்து நாங்கள் விலகி விடாமல், எங்களை பாதுகாத்துக் கொள்ளும்; அரவணைத்துக் கொள்ளுங்க அப்பா!
நாங்கள் சோதனையில் விழுந்து விடாமல் காப்பாற்றப்பட்டு, அதன் மூலம் உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தையும், பாக்கியத்தையும் எங்களுக்கு அளித்தருளுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம் .
இன்றைய நாளின் எம் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதித்து, உம் இறைவார்த்தை வழியில் நடக்க எமக்கு அருள் புரியும்.
🙏🏻ஆமென்.🙏🏻