MORNING PRAYER
காலை✝️ஜெபம்🌤️🌴
🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹
அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்;
அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.
இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் “ஆமென்” எனச் சொல்வார்களாக! அல்லேலூயா!
(திருப்பாடல்கள் 106:44-48)
✝️ஜெபிப்போமாக:🛐
அனைத்தையும் படைத்து, காத்து, வழிநடத்தி வரும் இறைவா! இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம்.
இவ்வுலகில் உமது வல்லமை விளங்கும்படி, முற்காலத்தில் மக்களை வழிநடத்தி வந்தீர். இக்காலத்தில், உமது மகனையே எங்களுக்காக அனுப்பி, எங்களை மீட்டுக் கொண்டீர். உமது எல்லையற்ற அன்பால், நாங்கள் விண்ணகத்துக்கு உரிமை பெற்றுள்ளோம். நன்றி ஆண்டவரே!
அன்பான தந்தையே! உமது தூய ஆவியார், எங்களின் உள்ளங்களை ஆட்கொள்ளட்டும். உமது அரசை, இவ்வுலகில் வெளிப்படுத்தும் பிள்ளைகளாக நான் வாழ, எங்கள் மீது இறங்கச் செய்தருளும்.
வேதனைகள், சோதனைகள் வரும் வேளைகளில், இனி சோர்ந்து போகாமல், அடுத்து கிடைக்கவிருக்கும் மகிமையை காண, வழிநடக்க உமது வல்லமையை எமக்குத் தாரும்.
🙏🏻ஆமென்.🙏🏻