Morning Prayer

Morning Prayer
🌹🙏🏻In the name of the Father, and of the Son, and of the Holy Spirit.! Amen.🙏🏻🌹
I call upon you, my God, for you will answer me; turn your ear to me and hear my prayer.
Show the wonder of your great love, you who save by your right hand those who take refuge in you from their foes.
Keep me as the apple of your eye; hide me in the shadow of your wings
from the wicked who are out to destroy me, from my mortal enemies who surround me.
(Psalm 17:9)

✝️Let us pray : 🛐
Heavenly Father, Almighty God! Behold, on this sweet morning, we praise you, glorify you, and worship you.
You created all your magnificent creations with your word; but you created man in your image according to your will, and so you willed to redeem us with the invaluable blood of your Son and sacrificed him. Thank you, Father! Thank you, Lord! Thank you, God!
Father! To separate us from you, Satan roams about like a roaring lion. Keep us away and protect us from him. Redeem all who suffer various afflictions through Satan’s temptations.
In this way, may we live in such a way that we never become enslaved to Satan and sin in any situation! Thus, Lord, grant us the grace to always live as your witnessing children.
We surrender this day to you. You alone lead us, bless us, and protect us, Father.
🙏🏻Amen.🙏🏻

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.

(திருப்பாடல்கள் 17:9)

 

✝️ஜெபிப்போமாக : 🛐

விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலை பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகின்றோம்.

உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர்; ஆனால் மனிதனை, உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர், ஆகவே உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!

அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும்.

இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும் பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.

இன்றைய நாளை, உம்மிடம் ஒப்படைக்கின்றோம். நீரே எங்களை வழிநடத்தும், ஆசீர்வதியும், காத்துக்கொள்ளுங்க அப்பா.

     PRAYER

     PRAYER

DEAR LORD
Our Savior… we thank You for Your boundless mercy and sacrificial deeds.
How praiseworthy is Your immense love, for shedding Your priceless Precious Blood to free us from sin and sanctify us. We remember with great sorrow and gratitude the Precious Blood You shed in the Garden of Gethsemane, the Precious Blood shed when You were bound and scourged, the blood shed on the rugged path to Calvary, the Precious Blood You shed during the sacrifice on the Cross of Calvary, and the Precious Blood that flowed when the soldier pierced Your sacred side with a spear.
We are deeply sorry and ask for forgiveness for our sinful actions that violated the Ten Commandments You gave us, and for the times we failed to do the good we should have done for others.
Jesus, wash us with Your Precious Blood and sanctify us.
Glory to the Eternal Father who gave us You, the Sacrificial One; adoration to You who continue the work of redemption; and our humble thanks to the Holy Spirit who continues to sanctify us each day.

 MORNING PRAYER

 MORNING PRAYER

O Immaculate Virgin Mother! Remember your gracious mercy, when you, adorned in divine splendor, clothed in pure white radiating an inexpressible, brilliant light, came and mercifully appeared in the lonely grotto of Lourdes. Recall also the immeasurable power your Divine Son bestowed upon you.
O Our Lady of Lourdes, renowned for your miracles, behold, we have come to you with great faith in your merits, seeking your kind support. Protect with the power of your holy hands the Holy Father who recognized and affirmed the truth of your apparitions.
Open the treasures of salvation, filled with divine mercy and love, and pour them upon us. Do not let any of our humble requests made to you go in vain. O Our Lady of Lourdes, immaculate Virgin, since you are our Mother, graciously hear our prayers.

There is a last time

There is a last time

If I could give you one piece of advice to hold in your heart, it would be to appreciate every second you have with the things that you love; be they places, objects, or people…. Because there is a last time for everything and you don’t always know that it’s the last time when you’re in it.
There will be a last time you see a sunrise, a last time you taste ice-cream and a last time you smell a rose. There will be a last time you enter every room, a last time you hold every pet, and a last time you hear a loved one’s voice.
Sometimes we know we’re in those moments and we can savour every second of them – but so often we don’t know until that moment is gone and it’s too late to go back and relive it.
So hold onto those moments while you have them…. live inside them…. appreciate them to their fullest every time so you’ll never regret taking them for granted one day when they’re gone.

u r precious

MORNING PRAYER

MORNING PRAYER

u r precious

காலை ஜெபம் –

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும். புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும்.

தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால், எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்.

ஆமென்.

லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

GOD BLESS BLESS BLESS

Morning prayer

                                                                             Morning prayer

GOD BLESS BLESS BLESS

Eternal One, as I wake to the dawning of this day , I know you surround me with your love and protection. You have forgiven all my shortcomings and for that, I rejoice.

As I journey my life of faith, no matter what challenges may come my way, help me to remember that your grace is sufficient for me and your tender mercy is new every morning.

As I lift my voice to you in prayer, help me to rest in the assurance that you hear me.

Thank you, God for being ever present in my life. Help me to guard my heart and enlighten the eyes of my understanding that I may serve you better.

May my earnest desire this day be to live my life in a manner that glorifies you. My hope is in you this day: help me to follow your will.

 

 

FRIENDSHIP

GREATNESS OF FRIENDSHIP

GREATNESS OF FRIENDSHIP

FRIENDSHIP

நம் வாழ்வின் மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்றான நட்பைப் பற்றிப் பேசுவதாகும். நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு ஆழமான உறவு, பலம், மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரம்.
நாம் பிறக்கும்போது தனியாகப் பிறக்கிறோம், ஆனால் இந்த வாழ்க்கைப் பயணத்தில் நமக்குத் துணையாக, தோள் கொடுப்பவர்களாக நண்பர்கள் அமைகிறார்கள். ஒரு உண்மையான நண்பன் யார்? அவன் உங்கள் சிரிப்பில் பங்குகொள்பவன் மட்டுமல்ல, உங்கள் கண்ணீரைத் துடைப்பவன். உங்கள் வெற்றியில் மகிழ்பவன் மட்டுமல்ல, உங்கள் தோல்வியில் தாங்கிப் பிடிப்பவன். உங்கள் பலவீனங்களை அறிந்திருந்தாலும், உங்களை ஒருபோதும் கைவிடாதவன்.
நட்பு என்பது ஒரு அழகான தோட்டம் போன்றது. அதை நாம் அக்கறையுடனும், அன்புடனும், நம்பிக்கையுடனும் வளர்க்க வேண்டும். ஒரு சிறிய விதை மரமாக வளர்வது போல, ஒரு சிறிய அறிமுகம் கூட காலப்போக்கில் ஒரு உறுதியான நட்பாக மாறலாம். அதற்கு பொறுமை தேவை, புரிதல் தேவை, விட்டுகொடுத்தல் தேவை.
நண்பர்கள் நம்மை நாமாகவே இருக்க அனுமதிக்கிறார்கள். அவர்கள் நம்மை விமர்சிக்க மாட்டார்கள், ஆனால் தேவைப்படும்போது சரியான வழியைக் காட்டுவார்கள். அவர்கள் நம் ரகசியங்களைப் பாதுகாப்பார்கள், நம் கனவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நாம் தடுமாறும் போது, அவர்கள் கை கொடுத்து தூக்கி விடுவார்கள்.
வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை நாம் சந்திக்க நேரிடும். சில சமயங்களில் நாம் தனியாக உணர்வோம், வழி தெரியாமல் தவிப்போம். அப்போது, நம் நண்பனின் குரல் ஒரு கலங்கரை விளக்கம் போல நமக்கு வழி காட்டும். அவன் இருளில் வெளிச்சமாக இருப்பான், நம்பிக்கையின் ஒளியைப் பரப்புவான்.
நட்பை வளர்த்துக் கொள்வது ஒரு கலை. அதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும், அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்.
இன்றைய உலகில், சமூக வலைத்தளங்கள் மூலம் பல “நண்பர்களை” நாம் பெற்றிருக்கலாம். ஆனால், எத்தனை பேர் உண்மையானவர்கள்? உண்மையான நட்பு என்பது திரைக்குப் பின்னால் அல்ல, நேரில் சந்தித்து, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் உள்ளது.
எனவே, என் அன்பான நண்பர்களே, உங்கள் வாழ்வில் இருக்கும் நண்பர்களைப் போற்றுங்கள். அவர்களின் மதிப்பை உணருங்கள். அவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களை நேசியுங்கள், ஆதரவு கொடுங்கள். ஏனென்றால், இந்த வாழ்க்கைப் பயணத்தில் நமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த செல்வம் உண்மையான நட்பே!
நட்பு வாழ்க! நன்றி!

    Morning Prayer

    Morning Prayer

O Lord, save us! O Lord, grant us success!
Blessed is he who comes in the name of the Lord! We bless you from the house of the Lord.
The Lord is God; he has made his light shine on us; take branches and start the festival; go in procession to the horns of the altar.
You are my God, and I will give you thanks; my God, I will exalt you.
Give thanks to the Lord, for he is good; his love endures forever.
(Psalm 118:25-29)

✝️Let us pray:🛐
Lord, have mercy. For we have sinned, have mercy on us!
Our beloved Savior, who reigns as King in heaven, immeasurably majestic beyond all comprehension, unreachable even after traveling billions of years, who came to this world as a human being! We adore You.
Accept our praise and adoration, Father. For in heaven, billions of angels ceaselessly sing hymns of praise before You, and adore You at all times. Yet, Lord! We pray that You accept our small adoration and praise and bless us.
We are great sinners, for You are holy; we are mostly not righteous, for You are faithful and righteous; we are great egoists, for You gave Your life for love; thus, we are not even worthy to be remembered by You, Father.
My beloved Savior! You came to earth to find us, to take us, who are like this, to Your dwelling place in heaven. But we failed to recognize You. Yet, You did not abandon us. You gave Your life for us and redeemed us without our knowledge. Thank You, Father.
Lord! Having been liberated from the evil one of this world, from now on, every day, we resolve to follow You and assist in the spiritual growth of others, instead of living selfishly only for ourselves. Accept our prayer and help us, Father!

GOD BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

GOD BLESS BLESS

காலை✝️ஜெபம்🌤️🌴

🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹

ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்.!

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

(திருப்பாடல்கள் 118:25-29)

✝️ஜெபிப்போமாக :🛐

ஆண்டவரே! இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம், எங்கள் மீது இரக்கமாயிரும்!

கற்பனைகளுக்கு சிறிதும் எட்டாத, அளவில்லா மாட்சியோடு, பல கோடி ஆண்டுகள் பயணம் செய்தாலும் சென்று சேரமுடியாத, விண்ணுலகில் அரசராக வீற்றிருந்து, இவ்வுலகிற்கு மனிதனாக வந்த எங்கள் அன்பு நேசரே! உம்மை ஆராதிக்கின்றோம்.

எங்களின் புகழ்ச்சி, ஆராதனையை ஏற்றுக்கொள்ளும் அப்பா. ஏனெனில், விண்ணகத்தில் பல கோடி தூதர்கள், உம் முன் உமக்கு ஓயாமல் புகழ் கீதங்கள் பாடுகிறார்கள், எந்நேரமும் உமக்கு ஆராதனை செய்கிறார்கள். ஆயினும் ஆண்டவரே! எங்களின் சிறு ஆராதனை, புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.

நாங்கள் பெரும் பாவிகள், ஏனெனில் நீர் தூயவர்; நாங்கள் பெரும்பாலும் நேர்மையாளர்கள் அல்ல, ஏனெனில் நீர் உண்மையுள்ளவர், நேர்மையானவர்; நாங்கள் பெரும் சுயநலவாதிகள், ஏனெனில் நீர் அன்புக்காக உயிரையே கொடுத்தீர்; இவ்வாறு நீர், உமது நினைவில் வைக்கக்கூட நாங்கள் தகுதி அற்றவர்கள் அப்பா.

என் அன்பு நேசரே! இப்படிபட்ட எங்களை, உமது உறைவிடமான விண்ணகத்திற்கு அழைத்து செல்ல, எங்களைத் தேடி நீர் மண்ணகம் வந்தீர். ஆனால் நாங்கள், உம்மை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். ஆயினும் நீர், எங்களை கைவிடவில்லை. எங்களுக்காக உமது உயிரையே கொடுத்து, எங்களுக்கு தெரியாமலேயே எங்களை மீட்டுக் கொண்டீர். நன்றி அப்பா.

ஆண்டவரே! இவ்வாறு இவ்வுலக சாத்தானிடமிருந்து விடுதலை பெற்ற நாங்கள், இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும் சுயநலத்தோடு, எங்களுக்காக மட்டும் வாழாமல்; உம்மை பின்பற்றி, மற்றவர்களின் ஆன்ம வளர்ச்சியிலும் துணை செய்வோம் என்ற உறுதியோடு, இந்நாளை தொடங்குகிறோம். எங்கள் வேண்டுதலை ஏற்று, எங்களுக்கு உதவி செய்தருளும் அப்பா!