MORNING PRAYER
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹
கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.
என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.
கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்; அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது.
என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்; நான் கலக்கமுற்றிருக்கிறேன்; என்னால் பேச இயலவில்லை.
கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்; முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.
(திருப்பாடல்கள் 77:1-5)
✝️ஜெபிப்போமாக : 🛐
விண்ணக தந்தையே இறைவா! உம்மை போற்றுகிறோம்! நீரே விண்ணையும், மண்ணையும் படைத்தவர். அனைத்தையும் வழிநடத்தி வருபவரும், ஆள்பவரும் நீரே! உமக்கே அனைத்தும் அடிபணிகின்றன, உமக்கே மகிமையும், மாட்சியும் உரித்தாகுக ஆமென்!
அன்பு ஆண்டவரே! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!
இயேசுவே! எனக்கு வாழ்வே நீர்தான். நீர் என் வாழ்வில் இல்லை என்றால், நான் இருளில் வீழ்ந்து விடுவேன். அப்பா! உம்மை அதிகமாக நேசிக்கவும், எப்போதும் உமது அன்பு உறவில் வாழவுமே ஆசிக்கின்றேன். அன்பு இதயமும், பரிசுத்தமான உள்ளத்தையும் எனக்கு தந்தருளும்.
அப்பா! இன்றைய நாளில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரை கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறும்,
நாங்கள் பேசும் போது கவனத்தோடும், என் செயல்கள் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். தீமையானது எதுவும், என் நாவில் இருந்து வராதபடி எனது சிந்தனையை பரிசுத்தமாக்கும்.
🙏🏻ஆமென்.🙏🏻