காலை ஜெபம்

காலை ஜெபம்

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.

சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.

(திருப்பாடல்கள் 18:1-5)

விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவனுக்கு எல்லா புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும் – ஆமென்!

இரக்கம் நிறைந்த விண்ணக தந்தையே! இதோ இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம்! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது அன்பிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

விண்ணக தந்தையின் மகனாகிய இறைவா! மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பிக்க, மனிதனாகவே பிறந்த தெய்வமே! உம்மை நோக்கி இந்த நேரத்தில் மன்றாடுகின்றோம்; இவ்வுலகில் நீர் சீடர்களோடு சகோதரர்களாகவும், நண்பர்களாகவும், வாழ்ந்தீர்; நாங்களும் அவ்வாறு நண்பர்களுடனும், சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறோம். ஆனால், வெளிவேடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனதுக்குள் பகை உணர்வு, வெறுப்பு கொண்டு வாழ்கிறோம். எங்களின் வெளிவேடமான வாழ்க்கை, எங்களை மேலும் அன்புறவில் இருந்து பிரிக்கிறது, இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். எங்களுக்குள் எந்தவித பிரிவினையும் வேண்டாம், மனக்கசப்பும் வேண்டாம். ஒருவர் மற்றவர்களை மன்னிக்கும், நல்ல மனதை எங்களுக்கு தந்தருளும்.

ஆண்டவரே! எங்களை துன்புறுத்திய அனைவருக்காகவும், இந்த நேரத்தில் வேண்டுகிறோம். அவர்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம் அப்பா! அவர்கள் தங்களது தீய வழிகளை விட்டுவிட்டு, உண்மையின் பாதையில் வழிநடக்க அவர்களுக்கு துணை செய்வீராக!

இவ்வாறு உலகெங்கும் உள்ள உமது பிள்ளைகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக எப்போதுமே வாழும் வரத்தை வேண்டி, இப்போது ஜெபம் செய்கிறோம். ஆண்டவரே! எங்கள் மீது இரங்கும், இரக்கம் வையும், நாங்கள் பலவீனமான மனிதர்கள், எங்களது குறைகளை மன்னியும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

மன்னிப்பு மகத்துவமானது…! மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு… இந்த மன்னிப்பு எனும் மனநிலை மட்டும் இருந்து விட்டால், உலகில் நிலவும் சிக்கல்களில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய் விடும்… மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்லது செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்… அதாவது!, ஒருவரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன… அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனம் சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கி விடுகிறது… அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது., அது உயிரை உலுக்கும் செய்தி… அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்று விட்டான் என்று.”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள்… கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். உயர்ந்த வலுவான கரடுமுரடான உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு கூறினாள்… “நான் உன்னை மன்னித்து விட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் சூ’ -க்கு வழிந்தது… கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என அய்யுற்றிருந்தார்கள்… (அய்யுறுதல்- சந்தேகம்) சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் கூறவியலா நிம்மதி நிரம்பி வழிந்தது… ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால் தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும் போது உங்கள் மனம் இலகுவாகிறது…! உங்கள் புன்னகை தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவது போல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது…!! கோபத்தில் இருந்த நாட்களை விட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்…!!! மன்னிப்பு என்ற வார்த்தை, பெரிய பெரிய சிக்கல்களையும், விவாதங்களையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு…!! மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது, மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்…!!!

மன்னிப்பு மகத்துவமானது…!

மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு…

இந்த மன்னிப்பு எனும் மனநிலை மட்டும் இருந்து விட்டால், உலகில் நிலவும் சிக்கல்களில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய் விடும்…

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்லது செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்…

அதாவது!, ஒருவரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன…

அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனம் சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கி விடுகிறது…

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது., அது உயிரை உலுக்கும் செய்தி…

அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்று விட்டான் என்று.”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான்.

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள்…

கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். உயர்ந்த வலுவான கரடுமுரடான உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு கூறினாள்…

“நான் உன்னை மன்னித்து விட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் சூ’ -க்கு வழிந்தது…

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என அய்யுற்றிருந்தார்கள்… (அய்யுறுதல்- சந்தேகம்)

சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் கூறவியலா நிம்மதி நிரம்பி வழிந்தது…

ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால் தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும் போது உங்கள் மனம் இலகுவாகிறது…!

உங்கள் புன்னகை தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவது போல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது…!!

கோபத்தில் இருந்த நாட்களை விட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்…!!!

மன்னிப்பு என்ற வார்த்தை, பெரிய பெரிய சிக்கல்களையும், விவாதங்களையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு…!!

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது, மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்…!!!

இரவு செபம்

இரவு செபம்

அன்புள்ள தந்தையே,
இதோ இந்த நாளின் நிறைவில் நான் உமது திருமுன் வருகிறேன் .
இந்த இரவானது அமைதியான போர்வைபோல, உங்கள் பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொள்ள அனுமதியுங்கள்.

இன்றைய நாளில், உமது பிரசன்னத்தால் நிறைத்தமைக்காக நன்றி. என்னை போசித்தமைக்காக நன்றி. அதிகாலையிலிருந்து இந்நேரம்வரை என்கூடவே இருந்து, எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. எனது போக்குவரத்தில் கரம் பற்றி நடந்தமைக்காக நன்றி.

பாலைவனத்தில் உள்ள உம்முடைய மக்களைப் போலவே, நானும் என் வாழ்வில் உமக்கெதிராக கேள்விகள் பல எழுப்பியுள்ளேன், என் வாழ்க்கையின் இந்த வனாந்தர நாட்களில் நான் வாழ்ந்தபோது, கடவுளாகிய உம்மை சந்தேகித்தேன், நான் அலைந்து திரிந்தேன்.. அதற்காக என்னை மன்னியுங்கள். இன்றைய நாளில் உமக்கு வருத்தம் விளைவித்தமைக்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும், நீங்கள் பொறுமையுள்ள கடவுள் – என்னை விட்டு ஒருபோதும் விலகிச் செல்வதில்லை என்பதை நன்கு அறிவேன்.

ஆண்டவரே, நீர் வானங்களைத் திறந்து, மன்னாவைப் பொழிந்தீர் – கைகளால் செய்யப்படாத வானதூதர்களின் உணவை கொடையாக கொடுத்தீர் என்று இன்றைய திருப்பாடலில் செபித்தோம் .

அப்பா! நீங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறீர். நான் அதைப் பார்க்காதபோதும், என்னால் அதை உணர முடியாதபோதும் கூட, நீங்கள் என்னோடு இருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

நீர் உமது மக்களை, அவர்கள் வயிறு நிரம்பும் வரை மன்னாவால் உணவளித்து, காடைகளால் நிறைத்தது போல,
என் மனதின் தரிசு நிலங்களை நிரப்புகிறவரே! என் பற்றாக்குறையை நீக்குபரே! நான் மறக்கப்பட்டதாக உணரும் தருணத்தில், “இதோ நான் இங்கே இருக்கிறேன்” என்று திடப்படுத்தும் ஆவியானவரே! அனைத்து தீய சக்திகளிடமிருந்து என்னையும், என் ஆன்மாவையும்
காத்துக்கொள்ளுங்கள்.

இன்றிரவு, நான் என் வெறுமையை உணராமலும், என் ஏக்கங்கள் என் தூக்கத்தை குழப்பாமலும், என் சுமைகள் என்னை அழுத்தமாலும், என் மனப் போராட்ட்ங்கள், வலிகள், தனிமைகள், நோய்கள் எவையும் என்னை எதுவும் செய்யாதபடிக்கு, எனக்கு துணையாக உமது காவல் தூதர்களை அனுப்பி வையுங்கள்.

என் அமைதியற்ற இருதயத்தை, சமாதானத்தால் நிறைத்துக் கொள்ளுகள். நான் இப்போது பயத்தினால் அல்ல, ஏனென்றால் பாலைவனத்தில் உணவளித்தவர்; இன்றிரவு என் அருகில் இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு துயில் கொள்வேன். அதனால் உம்மில், எனக்கு எதிலும் குறைவு ஏற்படாது.

புனித மரியே! சூசையப்பரே! எங்கள் உடலின் வலிமையை புதுப்பிக்க, நாங்கள் எடுக்கப்போகும் இந்த ஓய்வை ஆசீர்வதியுங்கள்.

இயேசுவே, புனித மரியே! சூசையப்பரே! என் இதயத்தையும், ஆன்மாவையும் உங்களிடம் தருகிறேன்.

ஆமென்.

Give me flowers while I’m living

Give me flowers while I’m living

“In this world today while we’re living, some folks, say the worst of us they can
>> But when we are dead and in our caskets, they always slip some lilies in your hand…

Won’t you give me my flowers while I’m living, and let me enjoy them while I can?
>> Please don’t wait, till I’m ready to be buried, and then slip some lilies in my hand…
>> In this world is where we need the flowers…
… a kind word to help us get along

If you can’t give me flowers while I’m living, then please don’t throw ’em when I’m gone…
>> Won’t you give me my flowers…?”

— Lyrics from the Song “Give me flowers while I’m living”

The words of this song is a living experience to many people in this world, including perhaps some of us.

We have many people in our life.

Many of them receive a lot of favours from us…
… but they fail to thank us.
>> We however, sometimes, do hear them backbiting us or spreading false rumours about us!

Many of them are helped in many ways…
… but they fail to acknowledge those favours.
>> We however, sometimes, do hear them talking ill of us or spoiling our name!

Many of them are rendered assistance in many ways…
… but they fall short of being grateful to us
>> We however, sometimes, do hear them being negatively critical about us and defaming us.

But at the grave, perhaps, all those people would talk highly about us.
>> After our death, perhaps, all those people might acclaim how wonderful a person he/she was!

We often become a people who…
… fail to appreciate when a person is alive, but shower praises after his/her death!
… fail to give a simple flower when alive, but spread garlands and bouquets after his/her death!
… fail to say a good word when alive, but brag and boast highly, after his/her death!

இயேசு கற்றுத்தந்த செபத்தில் உள்ள 23 கூறுகள்

இயேசு கற்றுத்தந்த செபத்தில் உள்ள 23 கூறுகள் (மத்தேயு 6:9-13)

1.உறவு: எங்கள் தந்தை (Our Father)
2.அங்கீகாரம்: விண்ணுலகில் இருக்கிற (which art in heaven)
3.ஆராதனை: உமது பெயர் தூய்மையெனப் போற்றப்பெறுக! (Hallowed be thy name)
4.எதிர்பார்ப்பு: உமது ஆட்சி வருக! (Thy kingdom come)
5.பணிவு/அர்ப்பணிப்பு: உமது திருவுளம் நிறைவேறுக! (Thy will be done)
6.சர்வத்துவம்: மண்ணுலகிலும் (in earth)
7.இணக்கம்: விண்ணுலகில் நிறைவேறுவதுபோல (as it is in heaven)
8.விண்ணப்பம்: அருளுக (Give us)
9.குறிப்பிட்ட தன்மை: இன்று (this day)
10.அவசியம்: தேவையான உணவு (our daily bread)
11.மனந்திரும்புதல்: எங்கள் குற்றங்களை பொறுத்தருளும் (And forgive us our debts)
12.கடமை: எங்கள் குற்றங்கள் (our debts)
13.மன்னிப்பு:: நாங்கள் பொறுத்தருளியதுபோல (as we forgive)
14.அன்பும் இரக்கமும்: எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை (our debtors)
15.வழிகாட்டுதல்: எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் (And lead us not into temptation)
16.பாதுகாப்பு: சோதனைக்குள் விடாமல் (not into temptation)
17. இரட்சிப்பு: தீயோனிடமிருந்து எங்களைக் காத்தருளும் (but deliver us from the evil one)
18.நீதி: தீமையினின்று (தீயோனிடமிருந்து) (from evil)
19.விசுவாசம்: ஏனெனில் ஆட்சியும் உமதே (For thine is the kingdom)
20.தாழ்மை: வலிமையும் (and the power)
21.பக்தி/மரியாதை: மாட்சியும் (and the glory)
22.காலமற்ற தன்மை: என்றும் (for ever)
2३.உறுதிப்படுத்துதல்: ஆமென் (Amen)

TRUTH WILL SET YOU FREE

TRUTH WILL SET YOU FREE

A group of people visiting a magnificent church, came across a large clock next to the bell tower.
>> What attracted the visitors, more than the clock, was the caption written beneath the large clock!

It seems that the clock was habitually too fast or too slow.
>> And so, a good old-sacristan realising that it was beyond repair, decided to write a caption on the placard.

The caption read: “Neither believe nor blame what my hands show!
The trouble lies deeper!
>> Therefore, even in life, ensure that you set your interior right, so that your externals display the truth!”

The hands of the clock displayed wrong timings…
… because the interior parts had some trouble!

So often are our external actions such in life!

We seem to be putting on a show outside…
… but the truth of the action can be known, only if the interior intention is true!
We seem to be good at displaying a clean image…
… but the sincerity of our deeds will be known, if we truly ensure purity from within!

 

துணிச்சலுடன் வாழ அழைப்பு

துணிச்சலுடன் வாழ அழைப்பு

நானே உண்மை” என்று சொன்னார் நம் ஆண்டவர். அதில் நம்பிக்கை வைத்திருக்கின்ற நாம் அனைவரும் உண்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் அவர் அழைப்பு விடுக்கின்றார்.

வெளிவேடத்தின் வகைகள்

இந்த உலகில் எத்தனையோ பேர் பல் வேறு நிலைகளில் மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

அழகாக இல்லாமல் இருக்கின்ற நிலையில் தங்களையே அழகாகக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள் சிலர்.

ஏழைகளாக இருந்தாலும் மற்றவர்கள் முன் பணக்காரர்களாகக் காட்சியளிக்கின்றனர் சிலர்.

உண்மையாகவே கடவுள் மீது பக்தி இல்லை என்றாலும் கூட பக்திமான்களாகத் தோற்றம் அளிக்கின்றனர் சிலர்.

அறிவு குறைந்திருந்தாலும் அறிஞர்களாகச் சிலர் காட்டிக் கொள்ளுகின்றார்கள்.

யாருக்குமே எதுவுமே செய்யாதவர்கள் கூட ஏழை எளியவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவர்களாகக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள்.

சோம்பேறிகள் சிலர் கஷ்டப்பட்டு உழைப்பவர்களாகவும் காட்டிக் கொள்ளுகின்றார்கள்.

ஆண்டவரின் எச்சரிக்கை

ஆண்டவர் இவர்கள் எல்லாரையும் அறிவார். தன்னுடைய மலைப்பொழிவிலேயே ஆண்டவர் சொன்னார்: “நீங்கள் ஜெபிப்பதும், தர்மம் செய்வதும், நோன்பு இருப்பதும் மற்றவர்களுடைய கவனத்தைக் கவருவதற்காக இல்லை, மற்றவர்களால் பாராட்டப்படுவதற்காக இல்லை, மாறாகக் கடவுளைப் பிரியப்படுத்தத்தான் செய்ய வேண்டும்” என்றார்.

இன்னொரு பக்கம், “மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு வானகத் தந்தையைப் புகழட்டும்” என்றார் ஆண்டவர். ஆனால், மக்களை ஏமாற்றி வானகத் தந்தைக்கு நாம் புகழ்ச்சி செய்யவே முடியாது.

இந்த நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார்.

வெளிவேடம் வெளிப்படும் இரண்டு வழிகள்

இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுகின்ற இந்த வெளிவேடம் இரண்டு விதங்களிலே வெளிப்படுகிறது.

1. உண்மை நிலை மறைத்தல்
வெளிவேடத்தின் முதல் விதம்: உண்மையாகவே நல்லவர்களாக இல்லாதிருந்தும் நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வது.

ஒவ்வொரு மனிதரையும் மூன்று விதமாகக் மதிப்பிடச் செய்யலாம்:

அவர் யார் என்று அவரே நினைப்பது.

அவர் யார் என்று மற்றவர்கள் கணிப்பது.

அவர் யார் என்று கடவுள் தெரிந்திருப்பது.

முதல் நிலையிலும், இரண்டாம் நிலையிலும் தவறுகள் நேரலாம். ஒருவர் உண்மையாகவே நல்லவராக இருக்கின்றபோது, அவரோ மற்றவர்களோ குறைத்து மதிப்பிடலாம். ஆனால், ஆண்டவரைப் பொருத்தமட்டில் அவரைப் பற்றிய மதிப்பீடு ஒருபோதும் தவறாக இருக்கவே முடியாது.

கடவுளை ஏமாற்ற முடியாது

இன்றைக்கு ஆண்டவர் சொல்லுகின்றார்: நீ யாரை ஏமாற்றினாலும் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

“நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்” என்கின்றார்.

வெளிவேடத்தை அகற்ற வழி

எனவே, இத்தகைய வெளிவேடத்தை நாம் அகற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

நம் ஆண்டவர்முன் நம்முடைய உண்மை நிலையைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும்.

எளிமையாக நடந்துகொள்ள வேண்டும்.

நிச்சயமாக, ஆண்டவர் தம்முடைய அளவில்லா அன்பினால் நம்மை ஏற்றுக்கொண்டு, நம் பாவங்களை மன்னிப்பார் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

2. துன்பங்களிலிருந்து ஓடி ஒளிதல்
வெளிவேடத்தின் இரண்டாம் விதம்: நற்செய்திக்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய துன்பங்களிலிருந்து ஓடி ஒளிந்துகொள்வதால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பதால் இந்த வெளிவேடம் எழும்பிக்கிறது.

நானே உண்மை” என்று சொன்னார் நம் ஆண்டவர். அதில் நம்பிக்கை வைத்திருக்கின்ற நாம் அனைவரும் உண்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் அவர் அழைப்பு விடுக்கின்றார்.

வெளிவேடத்தின் வகைகள்

இந்த உலகில் எத்தனையோ பேர் பல் வேறு நிலைகளில் மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

அழகாக இல்லாமல் இருக்கின்ற நிலையில் தங்களையே அழகாகக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள் சிலர்.

ஏழைகளாக இருந்தாலும் மற்றவர்கள் முன் பணக்காரர்களாகக் காட்சியளிக்கின்றனர் சிலர்.

உண்மையாகவே கடவுள் மீது பக்தி இல்லை என்றாலும் கூட பக்திமான்களாகத் தோற்றம் அளிக்கின்றனர் சிலர்.

அறிவு குறைந்திருந்தாலும் அறிஞர்களாகச் சிலர் காட்டிக் கொள்ளுகின்றார்கள்.

யாருக்குமே எதுவுமே செய்யாதவர்கள் கூட ஏழை எளியவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவர்களாகக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள்.

சோம்பேறிகள் சிலர் கஷ்டப்பட்டு உழைப்பவர்களாகவும் காட்டிக் கொள்ளுகின்றார்கள்.

ஆண்டவரின் எச்சரிக்கை

ஆண்டவர் இவர்கள் எல்லாரையும் அறிவார். தன்னுடைய மலைப்பொழிவிலேயே ஆண்டவர் சொன்னார்: “நீங்கள் ஜெபிப்பதும், தர்மம் செய்வதும், நோன்பு இருப்பதும் மற்றவர்களுடைய கவனத்தைக் கவருவதற்காக இல்லை, மற்றவர்களால் பாராட்டப்படுவதற்காக இல்லை, மாறாகக் கடவுளைப் பிரியப்படுத்தத்தான் செய்ய வேண்டும்” என்றார்.

இன்னொரு பக்கம், “மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு வானகத் தந்தையைப் புகழட்டும்” என்றார் ஆண்டவர். ஆனால், மக்களை ஏமாற்றி வானகத் தந்தைக்கு நாம் புகழ்ச்சி செய்யவே முடியாது.

இந்த நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார்.

வெளிவேடம் வெளிப்படும் இரண்டு வழிகள்

இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுகின்ற இந்த வெளிவேடம் இரண்டு விதங்களிலே வெளிப்படுகிறது.

1. உண்மை நிலை மறைத்தல்
வெளிவேடத்தின் முதல் விதம்: உண்மையாகவே நல்லவர்களாக இல்லாதிருந்தும் நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வது.

ஒவ்வொரு மனிதரையும் மூன்று விதமாகக் மதிப்பிடச் செய்யலாம்:

அவர் யார் என்று அவரே நினைப்பது.

அவர் யார் என்று மற்றவர்கள் கணிப்பது.

அவர் யார் என்று கடவுள் தெரிந்திருப்பது.

முதல் நிலையிலும், இரண்டாம் நிலையிலும் தவறுகள் நேரலாம். ஒருவர் உண்மையாகவே நல்லவராக இருக்கின்றபோது, அவரோ மற்றவர்களோ குறைத்து மதிப்பிடலாம். ஆனால், ஆண்டவரைப் பொருத்தமட்டில் அவரைப் பற்றிய மதிப்பீடு ஒருபோதும் தவறாக இருக்கவே முடியாது.

கடவுளை ஏமாற்ற முடியாது

இன்றைக்கு ஆண்டவர் சொல்லுகின்றார்: நீ யாரை ஏமாற்றினாலும் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

“நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்” என்கின்றார்.

வெளிவேடத்தை அகற்ற வழி

எனவே, இத்தகைய வெளிவேடத்தை நாம் அகற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

நம் ஆண்டவர்முன் நம்முடைய உண்மை நிலையைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும்.

எளிமையாக நடந்துகொள்ள வேண்டும்.

நிச்சயமாக, ஆண்டவர் தம்முடைய அளவில்லா அன்பினால் நம்மை ஏற்றுக்கொண்டு, நம் பாவங்களை மன்னிப்பார் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

2. துன்பங்களிலிருந்து ஓடி ஒளிதல்
வெளிவேடத்தின் இரண்டாம் விதம்: நற்செய்திக்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய துன்பங்களிலிருந்து ஓடி ஒளிந்துகொள்வதால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பதால் இந்த வெளிவேடம் எழும்பிக்கிறது.

துணிச்சலுடன் வாழ அழைப்பு

அத்தகையவர்களுக்கு இன்றைக்கு ஆண்டவர் அழைக்கின்ற பதில்: “உடலைக் கொல்வதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் கடவுளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்.”

சிட்டுக் குருவிகள் மீது அக்கறைகொண்டு இருக்கும் ஆண்டவர் உங்கள் மீதும் அக்கறைகொண்டு இருக்கிறார் என்று அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வாழுங்கள் என்கிறார்.

ஆம் பிரியமானவர்களே, கடவுளை நாம் நம்பி இருக்கும்போது, அவருக்காகத் தியாகங்களை மனமுவந்து ஏற்கின்றபோது, எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக் காப்பார். அவரை நாம் எந்நாளும் நம்ப வேண்டும்.

நாம் ஓடி ஒளிந்துகொள்ளக் கூடாது. நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை என்பதை மனதில் வைத்து வாழுவோம். ஏனென்றால், ஆண்டவர் நம் சார்பாக, நம்மைப் பாதுகாக்க எப்போதும் இருக்கின்றார்.

உண்மையை, உருவான எல்லாவற்றையும் அறிகின்ற, நம்மை எப்போதும் பாதுகாக்கின்ற நம் அன்பு தெய்வத்தில் நம்பிக்கையை வைத்து நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம்.

வெளிவேடத்தை முற்றிலும் விட்டொழிப்போம். ஆமென்.

அத்தகையவர்களுக்கு இன்றைக்கு ஆண்டவர் அழைக்கின்ற பதில்: “உடலைக் கொல்வதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் கடவுளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்.”

சிட்டுக் குருவிகள் மீது அக்கறைகொண்டு இருக்கும் ஆண்டவர் உங்கள் மீதும் அக்கறைகொண்டு இருக்கிறார் என்று அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வாழுங்கள் என்கிறார்.

ஆம் பிரியமானவர்களே, கடவுளை நாம் நம்பி இருக்கும்போது, அவருக்காகத் தியாகங்களை மனமுவந்து ஏற்கின்றபோது, எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக் காப்பார். அவரை நாம் எந்நாளும் நம்ப வேண்டும்.

நாம் ஓடி ஒளிந்துகொள்ளக் கூடாது. நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை என்பதை மனதில் வைத்து வாழுவோம். ஏனென்றால், ஆண்டவர் நம் சார்பாக, நம்மைப் பாதுகாக்க எப்போதும் இருக்கின்றார்.

உண்மையை, உருவான எல்லாவற்றையும் அறிகின்ற, நம்மை எப்போதும் பாதுகாக்கின்ற நம் அன்பு தெய்வத்தில் நம்பிக்கையை வைத்து நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம்.

வெளிவேடத்தை முற்றிலும் விட்டொழிப்போம். ஆமென்.

The Last Judgment

The Last Judgment

Michelangelo has been one of the greatest artists the world has ever seen.

His notable works of “Pieta”, “David”, “Moses” and “The Last Judgment” have been unparalleled in their beauty and perfection.

Another of his fantastic work has been the Frescoes on the Sistine Chapel Ceiling (in the Vatican)
>> It is said that as this great artist painted the magnificent frescoes on the ceiling of the Sistine chapel…
… lying on his back for endless hours to finish every detail with great care

A friend asked him why he took such pains with figures that would be viewed from a considerable distance.
>> “After all,” the friend said, “Who will notice whether it is perfect or not?”

The artist who was known for his perfection at all works replied…
… “I will!”

The motivation for perfection in all things, for Michelangelo, was not from outside…
… it was a based on his conviction that he should be “credible and authentic” in all what he does.

Our spiritual life also follows a similar principle: When credibility and authenticity are lacking in a spiritual endeavour…
… there is very less spiritual growth and nourishment!

It is credibility and authenticity that helps to gain spiritual progress and advancements!

Just grow

Just grow

No need to cut off people. Just grow. They will fall off.”

Focus on nurturing your growth and personal development without feeling the need to intentionally distance yourself from others.
As you evolve and expand, those who no longer align with your journey will naturally drift away.
Trust in the organic process of growth to naturally weed out relationships that no longer serve your path, allowing space for new connections that resonate with your authentic self to blossom and thrive.

Embrace this transformative journey with openness and grace, knowing that as you flourish, your tribe will naturally gravitate towards you, creating a harmonious tapestry of support and understanding.

MIRACLES OF PRAYING ROSARY

MIRACLES OF PRAYING ROSARY

முறையாக பக்தியுடன் தினம் ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்கு அன்னை மரியாள் வாக்களிக்கும் 15 வாக்குறுதிகள்.

1. நம்பிக்கையோடு ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்க என்னுடைய அருள் என்றும் உண்டு.

2. நான் அவர்களுக்கு என்னுடைய பாதுகாப்பைக் கொடுப்பேன்

3. ஜெபமாலை நரகத்திற்கு எதிரான சக்தி வாய்ந்ததது. தப்பறைகளையும், பாவங்களையும் அழிக்கக்கூடியது.

4. கடவுளின் இரக்கத்தை பெற்றத்தந்து உலக இன்பத்திலிருந்து பிரித்து ஆன்மாவை தூய்மைப்படுத்தக் கூடியது.

5. ஆன்மாவை அழியாமல் பாதுகாப்பேன்

6. அவர்கள் பக்தியோடு ஜெபிக்கும்போது தவறான வழிகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். நிலைவாழ்வைப் பெறுவார்கள்.

7. திருச்சபையின் திருவருட்சாதனம் கிடைக்காமல் இறக்கமாட்டார்கள்.

8. வாழும்போதும், வாழ்க்கைக்குப் பின்னும் அளவில்லா இறையருளை பெறுவார்கள்.

9. அவர்களை உத்தரிக்கும் நிலையிலிருந்து விடுவிப்பேன்.

10. விண்ணகத்தில் உயரிய மகிமைக்கு அவர்களை உயர்த்துவேன்

11. நீங்கள் வேண்டுவதைப் பெறுவீர்கள்

12. ஜெபமாலை பக்தியை பரப்புகின்றவர்கள் என்னுடைய உதவியை பெறுவார்கள்.

13. நான் அவர்களின் மரணநேரத்தில் இயேசுவிடம் பரிந்து பேசுவேன்

14. ஜெபமாலை சொல்பவர்கள் எல்லாரும் என்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள்

15. ஜெபமாலை ஜெபிப்பவர்கள் நிலைவாழ்வுக்கு முன்னுரிமை செய்யப்படுவார்கள்.