MORNING PRAYER

PRAYER TO ST JUDE, MORNING PRAYER

Spread the love

காலை ஜெபம்

PRAYER TO ST JUDE

MORNING PRAYER

புனித யூதா ததேயூவை நோக்கி ஜெபம்

மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுசே எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே! புண்ணியங்கள் மின்னித்துலங்கும் தூயவரே! புதுமை வரங்களில் சிறந்தவரே! தம்மை தேடிவந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே! உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம். இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம். இதயபூர்வமான நன்றி நவில்கிறோம்.
எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)

நேசிக்கப்படத்தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர்பெற்று இயங்கும் தயாள இருதய ததேயுவே! உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போகவிடாதேயும்.
யூதாசின் பெயர் ஒற்றுமையால்; உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.
இப்பெரிய வரத்திற்காக நாங்களும் உம்முடன் சேர்ந்து இறைவனின் புகழைப் பாடத் துணைபுரியும். அவருக்கு நன்றி செலுத்த தயை செய்யும். நீர் எங்களுக்கு செய்கின்ற இப்பேருதவிக்காக எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம். உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். பலர் அறியாப் புனிதரே சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே பலன் தரும் உமது பக்தி பாரெங்கும் பரவ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் எடுப்போம் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறோம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *