MORNING PRAYER

MORNING PRAYER

Spread the love

காலை ஜெபம்

MORNING PRAYER

MORNING PRAYER

“ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு”.

(திருப்பாடல் 27: 1. 4. 13-14)

எப்போதும் எங்களை அரவணைக்கும், எங்கள் அன்பு ஆண்டவரே! எங்கள் மேல் கொண்ட நம்பிக்கையின் நிமித்தம், மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்துள்ளீரே! நன்றி அப்பா! எங்களைப் படைத்த எங்கள் தந்தையே! உம்மை வாழ்த்திப் போற்றி, தாழ்ந்து பணிந்து ஆராதிக்கின்றோம். கடந்த இரவு முழுவதும் எங்களை, கண்ணின் மணிபோல எங்கள் அருகில் இருந்து, எங்களைப் பாதுகாத்துக்கொண்ட உமது மேலான கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா.

ஆண்டவரே! நீரே என் ஒளி; நீர் என் மீட்பு; யாருக்கும் நான் அஞ்ச வேண்டியதில்லை. ஆண்டவரே! நீரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

மனிதரோ, நோய் நொடியோ, துன்பமோ, துயரமோ, அதிகாரமோ, அடக்குமுறையோ, சதியோ, வீண்பழியோ, கடனோ, கவலையோ இவற்றில், எவை எனக்கு இடறலாக இருந்தாலும், படைத்த இறைவன் நீர் இருக்க, எதற்கு நான் அஞ்சிட வேண்டும்?

கடவுளே! உமது வாய்ச்சொல், எங்கள் விண்ணகத் தயாரிப்புக்குத் தேவையான ஆன்மீக வாழ்வை, ஆன்ம சுத்தியோடு வாழச் செய்கிறது. உமது திருமகன் இயேசுவின் திருவுடல், நாங்கள் இவ்வுலக வாழ்வை ஊக்கத்தோடு வாழ வழி செய்கிறது.

இயேசுவே! அன்று ஏராளமான மக்களுக்கு அப்பத்தை பகிர்ந்தளித்து, அவர்களது பசியினைப் போக்கினீரே. இன்று நாங்கள் பசியோடு இருப்போரை இனம் கண்டு, அவர்களது பசியினைப் போக்கும் நல் வாய்ப்பினை எங்களுக்குத் தந்தருளும். இன்று அவர்கள் உணவினால் நிறைவுற்றதைக் கண்டு, எங்களது மனம் நிறைவடையும்படி செய்தருளும்.

இறைவா! உமது இறைத்திட்டத்தை நிறைவேற்றும், இறைகருவிகளாக எங்களை பயன்படுத்தும்.

இயேசு, மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்

ஆமென்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *