துணிச்சலுடன் வாழ அழைப்பு
நானே உண்மை” என்று சொன்னார் நம் ஆண்டவர். அதில் நம்பிக்கை வைத்திருக்கின்ற நாம் அனைவரும் உண்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் அவர் அழைப்பு விடுக்கின்றார்.
வெளிவேடத்தின் வகைகள்
இந்த உலகில் எத்தனையோ பேர் பல் வேறு நிலைகளில் மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
அழகாக இல்லாமல் இருக்கின்ற நிலையில் தங்களையே அழகாகக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள் சிலர்.
ஏழைகளாக இருந்தாலும் மற்றவர்கள் முன் பணக்காரர்களாகக் காட்சியளிக்கின்றனர் சிலர்.
உண்மையாகவே கடவுள் மீது பக்தி இல்லை என்றாலும் கூட பக்திமான்களாகத் தோற்றம் அளிக்கின்றனர் சிலர்.
அறிவு குறைந்திருந்தாலும் அறிஞர்களாகச் சிலர் காட்டிக் கொள்ளுகின்றார்கள்.
யாருக்குமே எதுவுமே செய்யாதவர்கள் கூட ஏழை எளியவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவர்களாகக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள்.
சோம்பேறிகள் சிலர் கஷ்டப்பட்டு உழைப்பவர்களாகவும் காட்டிக் கொள்ளுகின்றார்கள்.
ஆண்டவரின் எச்சரிக்கை
ஆண்டவர் இவர்கள் எல்லாரையும் அறிவார். தன்னுடைய மலைப்பொழிவிலேயே ஆண்டவர் சொன்னார்: “நீங்கள் ஜெபிப்பதும், தர்மம் செய்வதும், நோன்பு இருப்பதும் மற்றவர்களுடைய கவனத்தைக் கவருவதற்காக இல்லை, மற்றவர்களால் பாராட்டப்படுவதற்காக இல்லை, மாறாகக் கடவுளைப் பிரியப்படுத்தத்தான் செய்ய வேண்டும்” என்றார்.
இன்னொரு பக்கம், “மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு வானகத் தந்தையைப் புகழட்டும்” என்றார் ஆண்டவர். ஆனால், மக்களை ஏமாற்றி வானகத் தந்தைக்கு நாம் புகழ்ச்சி செய்யவே முடியாது.
இந்த நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார்.
வெளிவேடம் வெளிப்படும் இரண்டு வழிகள்
இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுகின்ற இந்த வெளிவேடம் இரண்டு விதங்களிலே வெளிப்படுகிறது.
1. உண்மை நிலை மறைத்தல்
வெளிவேடத்தின் முதல் விதம்: உண்மையாகவே நல்லவர்களாக இல்லாதிருந்தும் நல்லவர்கள் போல் காட்டிக் கொள்வது.
ஒவ்வொரு மனிதரையும் மூன்று விதமாகக் மதிப்பிடச் செய்யலாம்:
அவர் யார் என்று அவரே நினைப்பது.
அவர் யார் என்று மற்றவர்கள் கணிப்பது.
அவர் யார் என்று கடவுள் தெரிந்திருப்பது.
முதல் நிலையிலும், இரண்டாம் நிலையிலும் தவறுகள் நேரலாம். ஒருவர் உண்மையாகவே நல்லவராக இருக்கின்றபோது, அவரோ மற்றவர்களோ குறைத்து மதிப்பிடலாம். ஆனால், ஆண்டவரைப் பொருத்தமட்டில் அவரைப் பற்றிய மதிப்பீடு ஒருபோதும் தவறாக இருக்கவே முடியாது.
கடவுளை ஏமாற்ற முடியாது
இன்றைக்கு ஆண்டவர் சொல்லுகின்றார்: நீ யாரை ஏமாற்றினாலும் கடவுளை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை. அறியப்படாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.
“நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில் காதோடு காதாய் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்” என்கின்றார்.
வெளிவேடத்தை அகற்ற வழி
எனவே, இத்தகைய வெளிவேடத்தை நாம் அகற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
நம் ஆண்டவர்முன் நம்முடைய உண்மை நிலையைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும்.
எளிமையாக நடந்துகொள்ள வேண்டும்.
நிச்சயமாக, ஆண்டவர் தம்முடைய அளவில்லா அன்பினால் நம்மை ஏற்றுக்கொண்டு, நம் பாவங்களை மன்னிப்பார் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
2. துன்பங்களிலிருந்து ஓடி ஒளிதல்
வெளிவேடத்தின் இரண்டாம் விதம்: நற்செய்திக்காக ஏற்றுக்கொள்ள வேண்டிய துன்பங்களிலிருந்து ஓடி ஒளிந்துகொள்வதால், அவற்றை முற்றிலும் தவிர்ப்பதால் இந்த வெளிவேடம் எழும்பிக்கிறது.

அத்தகையவர்களுக்கு இன்றைக்கு ஆண்டவர் அழைக்கின்ற பதில்: “உடலைக் கொல்வதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் கடவுளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும்.”
சிட்டுக் குருவிகள் மீது அக்கறைகொண்டு இருக்கும் ஆண்டவர் உங்கள் மீதும் அக்கறைகொண்டு இருக்கிறார் என்று அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வாழுங்கள் என்கிறார்.
ஆம் பிரியமானவர்களே, கடவுளை நாம் நம்பி இருக்கும்போது, அவருக்காகத் தியாகங்களை மனமுவந்து ஏற்கின்றபோது, எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக் காப்பார். அவரை நாம் எந்நாளும் நம்ப வேண்டும்.
நாம் ஓடி ஒளிந்துகொள்ளக் கூடாது. நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமே இல்லை என்பதை மனதில் வைத்து வாழுவோம். ஏனென்றால், ஆண்டவர் நம் சார்பாக, நம்மைப் பாதுகாக்க எப்போதும் இருக்கின்றார்.
உண்மையை, உருவான எல்லாவற்றையும் அறிகின்ற, நம்மை எப்போதும் பாதுகாக்கின்ற நம் அன்பு தெய்வத்தில் நம்பிக்கையை வைத்து நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவோம்.
வெளிவேடத்தை முற்றிலும் விட்டொழிப்போம். ஆமென்.