நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.) அன்பின் இறைவா! திருச்சபையின் திருப்பணியாளர்கள் உம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவில் கொண்டு, உம்மையே பற்றிக்கொண்டு, தாங்கள் உம்வழி செல்லவும்,  இறைமக்களை உம் பாதை நோக்கி வழிநடத்தவும்,வேண்டிய வரம்தர வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.) எங்கள் நம்பிக்கையான இயேசு இறைவா! இறையாட்சியை நோக்கி பயணிக்கும் உம் பிள்ளைகளாகிய நாங்கள், உம்மீது வசுவாசம் கொண்டவர்களாய், ஒரே எதிர் நோக்கோடு, இறுதிவரைக்கும் நற்காரியங்களைச் செய்வதன் மூலம், ஆசீர் பெற்ற மக்களாக உம்மிடம் வந்து சேர, வரம்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.) மனுவுருவான அற்புதக் குழந்தை இயேசு இறைவா. எங்கள் குழந்தைகள், மாணவர்கள், இருபால் இளையோர், இறைவார்த்தை வாசிப்பினை பழக்கமாக்கி கொள்ளவும், உம் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.) எங்கள் அரசரும் ஆயனுமான இயேசு இறையா! எங்கள் நாட்டை ஆளும் அனைத்து தலைவர்களும் மதவெறி தவிர்த்து,அனைவரையும் இந்தியர்களாக சம்மாக நடத்தவும், நீர் காட்டுகின்ற அமைதியை, உமது அரசுத்தன்மையை உள்வாங்கி அனைவருக்கும் நற்பணியாற்றிட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *