இன்று ஒரு சிந்தனை! *
நாமும் இந்த குடையும் ஒன்றல்ல; தேவை என்றால் தூக்கிப் பிடிக்கவும், தேவையில்லை என்றால் ஓரமாக ஒதுக்கி வைக்கவும்! நாம் உணர்வுள்ள மனிதர்கள்.
வாழ்க்கையில் நிகழ்ந்ததை மறுக்கவம் முடியாது, நிகழ்வதை தடுக்கவும் முடீயாது, நிகழப்போவதை நிறுத்தவும் முடீயாது. இவை அனைத்தையும் நம்மால் கடந்து போக மட்டுமே முடீயும்.
மாற்றம் இல்லாமல், முன்னேற்றம் சாத்தியமில்லை, எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியாதவர்களால், வேறு எதையும் மாற்ற முடியாது!
மன அழுத்தங்களை போக்க, எப்போதும் தனிமையை தேடாதே, பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசு, அல்லது பிடித்த எதையாவது செய்!!
வாழ்க்கையில் என்ன நடந்தாலும், உடைந்து போகாதே, உன்னை உடைப்பதற்கு ஒரு தருணம் உண்டு என்றால், உன்னை உருவாக்குவதற்கும் பல தருணங்கள் காத்திருக்கும்!!!