MOR.PRAYER

PRAYER FOR THE DAY

PRAYER FOR THE DAY

MOR.PRAYER

வல்லமையும் விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!

இந்த அற்புதமான நாளிலே உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!

நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து பாதுகாத்துகொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே,

ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

(வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர். நன்றி தந்தையே!

இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!

எதிர்பார்க்காத எல்லா காரியங்களும் நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே.