NIGHT PRAYER
WORD OF GRATITUDE
எங்களை ஒவ்வொரு நாளும், அற்புதமாய் வழிநடத்தும் அன்பு தகப்பனே, உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு போற்றுகின்றோம், புகழ்கின்றோம், ஆராதிக்கின்றோம், உமக்கு நன்றி செலுத்துகின்றோம் அப்பா.
இன்றைய நாள் முழுவதும், எம்மை கண்ணின் மணிபோல் காத்து, யாதொரு தீங்கும் எம்மை அனுகாமல் பாதுகாத்த, உம் இரக்கத்திற்காக, உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.
காலை முதல் இந்நேரம் வரை, எங்களின் அன்றாடப் பணிகளை செவ்வனே செய்து முடிக்க எங்களுக்கு ஆற்றலையும், ஞானத்தையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்ன்றோம் அப்பா.
எங்களுக்கு சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் இருந்த போதிலும், உமது இறைஇரக்கத்தின் இரத்தத்தால், எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்த உம் தாயினும் மேலான அன்பிற்காக நன்றி செலுத்துகின்றோம் அப்பா.
ஆண்டவரே, இந்த இரவுப்பொழுதை ஆசீர்வதியுங்க. உமது காவல் தூதர்களை அனுப்பி எங்களை பாதுகாத்திடுங்க. எங்களுக்கு ஆழ்ந்த நித்திரையையும், மனஅமைதியையும் தாரும் அப்பா. நாங்கள் அதிகாலை புதிய ஆற்றலோடும், புத்துணர்ச்சியோடும் எழுந்து, உம்மை போற்றி புகழ வரம் தாரும்.
அன்பு தகப்பனே! இன்று நாங்கள் உமக்கு எதிராக, அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக, பாவங்களுக்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம் அப்பா. எங்களை தயைகூர்ந்து மன்னித்து, உமது பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென, சிரம் தாழ்த்தி வணங்கி மன்றாடுகின்றோம். ஆமென்.