NIGHT PRAYER
இரவு ஜெபம் †
என்றும் வாழும் அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் உம்மிடம் திரும்பி வர உமது மென்மையான, தெளிவான குரலை நாடுகிறோம். நீர் பேசுவதை நாங்கள் கேட்கும்போது, உமது பரிசுத்த சித்தத்தைத் தழுவுவதற்கும், உமது தெய்வீக இரக்கத்தின் கருவியாக மாறுவதற்கும், உமது கட்டளைகளைப் பின்பற்றுவதற்கான வல்லமையையும் எங்களுக்குத் தந்தருளும்!
ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும், குணப்படுத்தலுக்காகவும், தவித்து வேதனையுறும் எங்களை கண்ணோக்கி, உம் கை வேலைப்பாடுகளான, களிமண்ணான எங்களுக்கு உமது ஆவியை ஊற்றி புத்துயிர் பெறச் செய்யும்.
ஒவ்வொரு நாளும் எங்களை கண்ணின் மணிபோல் காத்து, அரவணைத்து, பாதுகாத்து, வழிநடத்தி வரும் அன்பு இறைவா! இன்று இரவு எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தந்தருளும். நாளைய தினத்தை உம் ஆசீரால் நிரப்பும். நன்றி ஆண்டவரே.
எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க தூய திருநாமத்திலும், அவருடைய அதி பரிசுத்த தாயாரான ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், இவை அனைத்தையும் தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †
இனிய இரவு வணக்கம்!
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †