LIFE

PSALM 71, MORNING PRAYER

SURROUND

திருப்பாடல் : 71

என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதி முறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

 

PSALM 27

MORNING PRAYER

MORNING PRAYER

PSALM 27

திருப்பாடல் : 100

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

(திருப்பாடல் 100: 1-5)

🛐 ஜெபம் 🛐

அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய வாரத்தின் முதல் நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். ஆராதிக்கின்றேன். நன்றி செலுத்துகின்றேன். இறைவா, இன்றைய வாரத்தில் உமது திருச்சட்டத்திலிருந்து நான் விலகாதிருக்க அருள் புரியும்.

இயேசுவே, நான் இவ்வுலக வாழ்வில் விண்ணக செல்வத்தை நாடாது மண்ணக செல்வத்தை நாடிய தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மனமிரங்கி என்னை மன்னித்தருளும். 🙏

வாழ்வில் ஒடி ஓடி உழைத்து சேர்க்கும் செல்வம் ஒருநாளும் கூட வராது. செய்த பாவ புண்ணியங்களே நமது நிலை வாழ்வை நிர்ணயிக்கின்றன என்ற உண்மையை அனைவரும் உணர ஆண்டவரே அருள்புரிவீராக.

இறைவா, இந்த புதிய நாளை, உமது பெயரால் துவக்குகின்றேன். தூய ஆவியின் துணை கொண்டு என்னைக் காத்து வழி நடத்தியருளும். என் இறுதி மூச்சு வரை உம் பிள்ளையாக, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க வரம் தாரும்.

 

 

MOR.PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER 1

MORNING PRAYER

 

பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே! பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோணியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வாரும். விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையுள்ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்…..

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும், சக மனிதர் அனைவரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய் தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக.

ஆமென்.

MOR.PRAYER

MORNING PRAYER, PSALM 139

 

MORNING PRAYER

  PSALM 139

MOR.PRAYER

திருப்பாடல் : 139

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.

(திருப்பாடல் 139: 1-3. 13-15.)

🛐 ஜெபம் 🛐

அகில உலகையும் படைத்த எம் இறைவா! இந்த காலை வேளையில் நீர் படைத்த படைப்பு அனைத்தோடும் சேர்ந்து உம்மை போற்றுகிறேன். துதிக்கிறேன். ஆராதிக்கின்றேன்.

இறைவா, நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை நான் பல நேரங்களில் உணராமல், விசுவசிக்காமல் தேவையற்ற உலகக் கவலைகளில் மூழ்கி இருந்து இருக்கிறேன். உமது குரலுக்கு செவிமடுக்காமல் பற்பல பணிகளில் பரபரப்பாகி உம்மைப் புறக்கணித்த தருணங்களுக்காக மனம் வருந்தி உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இயேசுவே உம்முடைய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட தங்களது பணிகளில் ஆர்வமாய் இருக்கும் எண்ணற்ற மக்களுக்காக இன்று விஷேசமாக செபிக்கிறேன்.

ஆண்டவரே! அன்று நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மரியாவைப் போல நாங்களும் விளங்க அருள் புரிவீராக.

தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு கடவுளாகிய எம் இறைவா! உமது பிரசன்னம் எங்களோடு என்றும் இருக்க அருள் புரியும்.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

 

psalm 111

MORNING PRAYER —–PRAY PSALM 111

psalm 111

MORNING PRAYER

                                                                             PRAY PSALM 111

 

திருப்பாடல் : 111

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

(திருப்பாடல் 111: 1-6)

🛐 ஜெபம் 🛐

அனைத்துலகின் வேந்தரே! உம்மை போற்றுகிறோம். உம்மைப் புகழ்கிறோம். நன்றி கூறுகிறோம்.
இறைவா, உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம்.

இறைவா, எங்களோடு உடனிருக்க, எங்களை வழிநடத்த நீர் தூய ஆவியானவரை எங்கள் மத்தியில் அனுப்பியது போல, அலகையை நாங்கள் வல்லமையோடு எதிர்க்க அன்னை மரியாளின் மூலம் தூய செபமாலையை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி தந்தையே..🙏

இறைவா, செபமாலையை முழு கவனத்துடன், பொருள் உணர்ந்து, நிதானமாக ஒருமித்த மனதோடு சொல்லாமல், கவன சிதறலோடு கடமைக்கு விரைவாக செபித்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம்.

இனி செபமாலை செபிப்பதை எங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக்கிக் கொள்ளுவதோடு மட்டுமல்லாது செபமாலை பக்தியை பரப்பும் இறைப்பணியையும் முக்கிய கடமையாகக் எண்ணி நிறைவேற்றுவோம்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.

ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.

என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

(திருப்பாடல்கள் 43:1-5)

அணுக முடியாத ஒளியில் வாழும் இறைவா! இந்த காலை வேலையிலே உம்மை போற்றுகிறோம், புகழுகிறோம், வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், ஆராதிக்கின்றோம், மகிமைப்படுத்துகின்றோம்.

 

இந்த நேரம் வரை எங்களை வழிநடத்தி வந்த, உமது இரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

தூய்மையின் பிறப்பிடமே இறைவா! நாங்கள் பாவத்திலிருந்து மீட்பு பெற்று, தூய்மையான நிலையில் உம்மிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காகவே நீர் பாடுகள் பட்டீர். ஆனால் நாங்கள், எங்களின் இயலாமையினால் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகின்றோம்.

ஆண்டவரே! எங்கள் உடல் ஒருநாளும் பாவத்திற்கு இடம் கொடாதவாறும், எங்கள் உடல் ஒருநாளும் பாவத்திற்கு துணை போகாதவாரும், நீர் உமது தூதரை அனுப்பி எங்களை காத்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம்.

இவ்வாறு நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும், சாத்தானுக்கு இடம் கொடாமலும், அவனது தீய வலையில் விழாமலும் காப்பாற்றப் படுவோமாக! இதுவிதமே நாங்கள் உமது பிள்ளைகளாக, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக வாழும் வரம்தர வேண்டும் என்று..

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

 

PSALM 85

MORNING PRAYER—PSALM 85

 

MORNING PRAYER

திருப்பாடல் : 84

PSALM 85

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

(திருப்பாடல் 84: 2-5, 11)

🛐 ஜெபம் 🛐

என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏

 

MOR.PRAYER

MORNING PRAYER

MORNING PRAYER

MOR.PRAYER

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கை

அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.

(திருப்பாடல்கள் 33:1-5)

உலகை படைத்து, பராமரித்து வழிநடத்தி வரும் இறைவா! இதோ இந்த காலை நேரத்திலே, உம்மை போற்றி புகழுகிறோம்.

உம்மோடு பேசவும், உம்து அன்பை அனுபவிக்கவும், இன்னொரு புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆண்டவரே! உமது அன்பை மறந்து நாங்கள் செய்த அனைத்து செயல்களுக்காகவும், இந்த நேரத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உமது அன்பிலிருந்து விலகி சென்றதற்காக மனம் வருந்துகிறோம். உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எங்களை மன்னித்தருளும் அப்பா.

எங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாய் இரும்; எங்கள் அன்றாட செயல்களில், நேர்மையுடன் நடக்க எங்களுக்கு துணை புரியும்; இரக்க செயல்கள் செய்ய எங்களை ஈடுபடுத்தும்.

இவ்வாறு, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை பிறருக்கு வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான அருள் வரங்களை தந்துருளும்.

 

PSALM 145

திருப்பாடல் : 145

திருப்பாடல் : 145

MORNING PRAYER

PSALM 145

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.

(திருப்பாடல் 145 : 8-14)

🛐 ஜெபம் 🛐

இரக்கமும், கனிவும், பேரன்பும் கொண்ட எம் இறைவா! இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன்! உம்மைப் புகழ்கின்றேன்! நன்றி கூறுகின்றேன்.

இறைவா! இந்நாள் முழுவதும் எனக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெற அருள் புரிவீராக. அப்போதுதான் என் வாய் மனித ஞானத்தால் கற்றுக் கொண்ட சொற்களைப் பேசாமல் தூய ஆவியானவர் கற்றுத் தரும் சொற்களையே பேசும்.

இயேசுவே! பல குடும்பங்களில் ஏற்படும் குழப்பம், சமாதானமின்மை, சண்டை, சச்சரவு ஆகியவற்றிற்குக் காரணமான தீய ஆவிகளை உமது வானளாவிய அதிகாரத்தால், வல்லமையால் விரட்டிவிடும். அக்குடும்பங்களில் குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினால் நிலையான அமைதி, சமாதானம் குடிகொள்ள அருள் புரிவீராக.

இறைவா, இந்த நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

MORNING PRAYER

MORNING PRAYER      —-                WINGS OF PRAYER                                  

MORNING PRAYER

WINGS OF PRAISES

MORNING PRAYER

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.

(திருப்பாடல்கள் 105:1-5)

என் அன்பிற்குரிய இறைவா! உம்மை புகழ்கின்றேன், வணங்குகின்றேன், ஆராதிக்கின்றேன்.

இந்த இனிய காலை வேளையை மீண்டும் காணச்செய்து, உம்மை தாழ்ச்சியுடன் ஜெபிக்க, வரம் தந்த மேலான ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இந்த நாள் ஒரு புனித நாளாக மலரட்டும். இந்நாளில் எது நடந்தாலும், அது என் நன்மைக்காகத்தான் என்று ஏற்றுக்கொள்ள கூடிய நல்ல உள்ளத்தை எனக்குத் தாரும். என்ன நேர்ந்தாலும், உமக்கு நன்றி சொல்லக்கூடிய மனப்பக்குவத்தை என்னில் மலரச் செய்யும்.

என் அன்பு இயேசுவே! என் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆசீர்வதியும். உலக நாட்டங்களில் சிக்கி கொள்ளாமல், நேர்மையான உள்ளத்தோடு, பரிசுத்தமாக வாழ.. உமது ஆவியின் கனிகளால் எம்மை நிரப்பிப் பாதுகாப்பீராக.

இயேசு மரியாயே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.