MORNING PRAYER

காலை✝️ஜெபம்🌤️🌴
🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்.!
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
(திருப்பாடல்கள் 118:25-29)
✝️ஜெபிப்போமாக :🛐
ஆண்டவரே! இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம், எங்கள் மீது இரக்கமாயிரும்!
கற்பனைகளுக்கு சிறிதும் எட்டாத, அளவில்லா மாட்சியோடு, பல கோடி ஆண்டுகள் பயணம் செய்தாலும் சென்று சேரமுடியாத, விண்ணுலகில் அரசராக வீற்றிருந்து, இவ்வுலகிற்கு மனிதனாக வந்த எங்கள் அன்பு நேசரே! உம்மை ஆராதிக்கின்றோம்.
எங்களின் புகழ்ச்சி, ஆராதனையை ஏற்றுக்கொள்ளும் அப்பா. ஏனெனில், விண்ணகத்தில் பல கோடி தூதர்கள், உம் முன் உமக்கு ஓயாமல் புகழ் கீதங்கள் பாடுகிறார்கள், எந்நேரமும் உமக்கு ஆராதனை செய்கிறார்கள். ஆயினும் ஆண்டவரே! எங்களின் சிறு ஆராதனை, புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.
நாங்கள் பெரும் பாவிகள், ஏனெனில் நீர் தூயவர்; நாங்கள் பெரும்பாலும் நேர்மையாளர்கள் அல்ல, ஏனெனில் நீர் உண்மையுள்ளவர், நேர்மையானவர்; நாங்கள் பெரும் சுயநலவாதிகள், ஏனெனில் நீர் அன்புக்காக உயிரையே கொடுத்தீர்; இவ்வாறு நீர், உமது நினைவில் வைக்கக்கூட நாங்கள் தகுதி அற்றவர்கள் அப்பா.
என் அன்பு நேசரே! இப்படிபட்ட எங்களை, உமது உறைவிடமான விண்ணகத்திற்கு அழைத்து செல்ல, எங்களைத் தேடி நீர் மண்ணகம் வந்தீர். ஆனால் நாங்கள், உம்மை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். ஆயினும் நீர், எங்களை கைவிடவில்லை. எங்களுக்காக உமது உயிரையே கொடுத்து, எங்களுக்கு தெரியாமலேயே எங்களை மீட்டுக் கொண்டீர். நன்றி அப்பா.
ஆண்டவரே! இவ்வாறு இவ்வுலக சாத்தானிடமிருந்து விடுதலை பெற்ற நாங்கள், இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும் சுயநலத்தோடு, எங்களுக்காக மட்டும் வாழாமல்; உம்மை பின்பற்றி, மற்றவர்களின் ஆன்ம வளர்ச்சியிலும் துணை செய்வோம் என்ற உறுதியோடு, இந்நாளை தொடங்குகிறோம். எங்கள் வேண்டுதலை ஏற்று, எங்களுக்கு உதவி செய்தருளும் அப்பா!