HAPPINESS MATTERS
ஓடுகிறோம் ஓடுகிறோம்
எதை தேடி ஓடுகிறோம்
எதை சாதிக்க ஓடுகிறோம்
அடிப்படை தேவைகள்
எல்லாம் இருந்தும் ஓடுகிறோம்.
பணமே பிரதானமென்று ஆனபின்பு பாசத்தைப் புறம் தள்ளி ஓடுகிறோம்.
உறவுகளைப் புறம்
ஒதுக்கி ஓடுகிறோம்.
நியாயம், நேர்மை, பக்தி
இவற்றையும் கைவிட்டு பல நாள் கடந்தாகியது.
யாருக்காக எதற்காக
ஏன் ஓடுகிறோம் எனத் தெரியாமலே ஓடுகிறோம்.
நின்று நிதானிக்க்கூட விருப்பமின்றி ஏனிந்த ஓட்டம்.
ஓடி ஓய்ந்து முடியாது என்று நின்ற போதுதான் நாம் இழந்து போன சந்தோசங்கள் எவ்வளவு என வருத்தம்
“நம்முள் எட்டிப்பார்க்கிறது.
வருந்தினால் மட்டும் இனி அந்த அன்பு,உறவு,நேர்மை
பக்தி இனி கிடைத்திட வாய்ப்பில்லை.
நாம் வந்ததற்கும்,வாழ்ந்ததற்கும் ஓடியதற்கும் அடையாளமில்லாமலே
முடிந்து போகிறது என்பதே உண்மை.
எஞ்சிய நாட்களிலாவது
நம்மைச்சுற்றியுள்ள இயற்கைகளையும்,
சுற்றங்களையும் நேசிப்போம், ரசிப்போம், மகிழ்வோம், மதிப்போம்.
ஆசீர்வதிப்போம்.