NOVENA TO OUR LADY OF VELANKANNI
NATIVITY OF OUR LADY
ஆரோக்கிய அன்னையே! இறைவனின் தாயான உம்மை வாழ்த்துகிறோம். இறைவனின் புகழ் பாடும் படைப்புப் பொருட்கள் அனைத்தும் உம்மை வாழ்தும்படியாக அழைக்கின்றோம். கடவுளின் படைப்புகளே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். இறைவனின் தூதர்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானகப் படைப்புகளே, வானக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். விண்ணகத்திலுள்ள புனிதர்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். பகலோனே, நிலவே, வானத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களே, ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மழையே, வெண் பனியே விண்ணக அரசியைப் புகழ்ந்து பாடுங்கள். வெம்மையே, குளிரே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். மலைகளே, குன்றுகளே, பள்ளத்தாக்குகளே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். இருளே, ஒளியே ஆரோக்கிய அன்னையை வாழ்த்துங்கள். மேகங்களே, மின்னல்களே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். பூமிதனில் உள்ள விளைச்சல்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். நீர் சுனைகளே, மலை அருவிகளே, நதிகளே, ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். கடலே, கடல்வாழ் உயிர்களே ஆரோக்கிய அன்னையைப் போற்றுங்கள். வானத்துப் பறவைகளே, தரைவாழ் உயிரினங்களே ஆரோக்கிய அன்னையைப் புகழ்ந்து பாடுங்கள். ஆரோக்கியத் தாயே! புகழ் பாடும் உம் மக்களின் மன்றாட்டுக்களை தயவுடன் ஏற்றுக் கொள்ளும். நாங்கள் என்றென்றும் உம்மை எங்கள் தாயாக அன்பு செய்வோம். நாங்கள் ஆன்ம உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இறைவனின் அன்பில் நிலைத்துப் புனிதர்களாக வாழ்ந்திட எங்களுக்காக உம் திரு மகன் வழியாக விண்ணகத் தந்தையிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.