இரவு ஜெபம்
NIGHT PRAYER
மன்னிப்பதில் தாராள மனம் கொண்ட, கொடை வள்ளலான
எங்கள் ஆன்டவரே, இயேசுகிறிஸ்துவே! இன்றைய பகல் முழுவதும் உமது கருனையால் எங்களை வழிநடத்திய இறைவா, நாங்கள் மற்றவர்களுக்கு எதிராக எதாவது குற்றம் செய்திருந்தால், எங்களை மன்னியும் அப்பா. மேலும், பிறர் எங்களுக்கு எதிராக ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவர்களை மன்னிக்கும் மனபான்மையை எங்களுக்கு தந்தருளும்படியாகவும் உம்மை மன்றாடுகிறோம்.
எங்கள் மீது அளவில்லாத அக்கரையும், கவலையும் கொண்டுள்ள எங்கள் ஆண்டவரே, கர்ஜிக்கும் சிங்கம் போல் யாரை விழங்கலாம் என்று, காத்துக்கொண்டிருக்கும் சாத்தானின் மாயவலையில் சிக்காமல் இருக்க, எங்கள் மீது கவலை கொண்டு, பேரன்பு கொண்டு எங்களை பாதுகாத்த உமது மேலான அன்பிற்காக, நன்றி செலுத்துகிறோம். இன்றைய நாள் முழுவதும் உமது சிறகுகளின் அரவணைப்பில், எங்களை பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
இன்றைய நாளில் உம்முடைய அன்பினால், எங்களுடைய வேலைகள், பயணங்கள் மற்றும் எல்லா சூழ்நிலையிலும், எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
இறைவா! இந்த இரவு வேளையிலும் எங்களுடைய ஆன்மாவை, தங்களுடைய கரங்களில் ஒப்படைக்கிறோம். எங்களுக்கு மன அமைதியுடன், ஆழ்ந்த உறக்கத்தை தந்து, அதிகாலையில் முழு ஆன்ம உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.