NIGHT PRAYER
என்னை நேசிக்கின்ற அன்புத் தகப்பனே! நீர் கொடுத்த இந்த அருமையான நாளுக்காக நன்றி செலுத்துகின்றேன்! உம்முடைய ஆசீர் இன்று முழுவதும் என்னோடு தங்கியிருந்து என்னை வழிநடத்தி, என்னைப் பாதுகாத்துக்கொண்டீரே ஐயா, உமக்கு நன்றி!
உம்முடைய ஆசீராலும், இரக்கத்தினாலும், தயவினாலும் இந்த நாளை நான் கடந்து வர எனக்கு உதவி செய்தீரே உமக்கு நன்றி!
இதோ இந்த இரவு நேரத்தில் களைப்போடும், சோர்வோடும், நான் உறங்கச் செல்கின்ற வேளையில் நீரும், நீர் எனக்கு கொடுத்த பாதுகாவலரும், அன்னை மரியாளும், என் அருகில் இருந்து என்னை தேற்றுவீர்களாக!
உமது இரக்கம் இந்த நேரத்தில், இந்த இரவிலே, எனக்கு என் அருகிருந்து என்னை பாதுகாக்கட்டும்! இரவில் வருகின்ற கனவுகளில் உமது தயவு எனக்கு இருக்கட்டும்! காலையில் நான் விழிக்கின்ற வரைக்கும் தகப்பனே, என்னோடு தங்கியிருக்க போவதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்! நன்றி இயேசுவே, நன்றி! ஆமென்!
உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் உறங்கினால் சுகமான உறக்கம் பெறுவது உறுதி! இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்!
நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்! நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு! வைகறையில் விழித்தெழுந்து, நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை, மானிடர் தம் கடவுளின் அன்பர், தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்!