NIGHT PRAYER
இரவு ஜெபம்
எம் இரக்கத்தின் ஊற்றே இறைவா! எங்கள் மூதாதையரான இஸ்ரேல் மக்கள், உம்மை விட்டு பலதடவை விலகிச் சென்றாலும், அவர்களை மன்னித்து என்னிலடங்கா அற்புதங்களை செய்தீர்கள். செங்கடலை இரண்டாக பிரித்து, தரையிலே நடக்கச் செய்தீர். பாறையைப் பிளந்து, தண்ணீர் பொங்கிவர செய்தீர். வானத்திலிருந்து மன்னா என்ற உணவை, இஸ்ரேல் மக்கள் உண்பதற்கு வேண்டிய மட்டும் பொழியச் செய்தீர் அப்பா. நன்றி ஆண்டவரே.
அதே போல் நாங்களும், பலதடவை உம்மை விட்டுச் சென்றாலும், எங்களை கைவிடாமல், எங்கள் தேவைகள் அனைத்தையும், எங்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்பா. ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றி பாதுகாப்பது போல், ஒவ்வொரு நாளும் எம்மை அரவணைத்து வழிநடத்தி வருகிறீர் அப்பா. நன்றி ஆண்டவரே.
இன்றைய நாள் முழுவதும், உம்மை விட்டு விலகிச் செல்லாமல், உம்முடைய வலது கரத்தால் எங்கள் கைகளை பிடித்து, எங்களை அற்புதமாக வழிநடத்தியதற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய இரவு வேளையிலும், எங்களை உமது அடைக்கலத்திலே ஒப்படைக்கின்றோம். இயேசுவே! எங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், அமைதியான மனநிலையையும் தாரும் அப்பா. அதிகாலையில் முழு ஆன்ம, உடல் நலத்துடன் விழித்தெழுந்து, உமது திருமுகத்தைக் கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்