MORNING PRAYER
உம் வயிற்றின் கனியும் ஆசி பெற்றதே!
(லூக்கா 1;39-45)
❤ தியானிப்போம்❤
✝🌲 “மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.(மத்12;33)
✝❤🌲 உண்மையான திராட்சைச் செடி நானே; என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். நீங்கள் அதன் கொடிகள், ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். (யோவா15:1-5) தந்தையின் திராட்சை செடியாக, அன்னை மரியின் கனியாக, சூசை தந்தையின் கொடியாக இம்மண்ணில் ஏழ்மையின் வடிவில் மலர்ந்து, நிலை வாழ்வின் நற்செய்தியை நற்கனிகளாக தந்து தம் பிறப்பால் உலகிற்கு ஒளியூட்டிய மெசியாவின் முதல் வருகையை நினைவூட்டும் திருவருகைக்கால நான்காம் மெழுகுத்திரி.
🙏ஜெபம்🙏
✝🧎♀ விண்ணின் விடியலாக,உலகின் ஒளியாக, நிலை வாழ்வின் நற்செய்தியாக எம்மை தேடி வந்த இயேசுவே! உம்மை அன்பு செய்கின்றோம். உமது மீட்பின் வருகைக்காக நன்றி கூறுகிறோம்.
+🧎♀ உங்களை நான் நண்பர்கள் என்றேன். ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
+🧎♀ நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை; நான் தான் உங்களை தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.
+🧎♀ ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்கு கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.(யோவான் 15;15-17)
அன்பு இயேசுவே! திருவருகைக் காலம் தரும் புத்துணர்வால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் அன்னை மரியா சூசை தந்தையை போன்று இடர்களுக்கு மத்தியிலும் நற்கனிகள் பல தந்து உமது நண்பர்களாக திகழவும், அன்னை மரியின் பிள்ளைகளாக, இயேசுவின் சகோதரர்களாக, எங்கள் சொல்லாலும், செயலாலும் இயேசுவை நாள்தோறும் ஈன்று வளர்த்தெடுக்கவும் அருள் தாரும் ஆமென் அல்லேலூயா. ..
🌸( பிறரை அன்பு செய்து, மன்னித்து, நன்மைகள் புரியும் பொழுது இயேசுவை நாமும் ஈன்றெடுக்கின்றோம்.)