MORNING PRAYER
திருப்பாடல் : 100
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
(திருப்பாடல் 100: 1-5)
🛐 ஜெபம் 🛐
அப்பா, தந்தையே! அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய வாரத்தின் முதல் நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். ஆராதிக்கின்றேன். நன்றி செலுத்துகின்றேன். இறைவா, இன்றைய வாரத்தில் உமது திருச்சட்டத்திலிருந்து நான் விலகாதிருக்க அருள் புரியும்.
இயேசுவே, நான் இவ்வுலக வாழ்வில் விண்ணக செல்வத்தை நாடாது மண்ணக செல்வத்தை நாடிய தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மனமிரங்கி என்னை மன்னித்தருளும். 🙏
வாழ்வில் ஒடி ஓடி உழைத்து சேர்க்கும் செல்வம் ஒருநாளும் கூட வராது. செய்த பாவ புண்ணியங்களே நமது நிலை வாழ்வை நிர்ணயிக்கின்றன என்ற உண்மையை அனைவரும் உணர ஆண்டவரே அருள்புரிவீராக.
இறைவா, இந்த புதிய நாளை, உமது பெயரால் துவக்குகின்றேன். தூய ஆவியின் துணை கொண்டு என்னைக் காத்து வழி நடத்தியருளும். என் இறுதி மூச்சு வரை உம் பிள்ளையாக, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க வரம் தாரும்.