MORNING PRAYER
காலை ஜெபம்
இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.
உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.
(திருப்பாடல்கள் 17:9)
✝️ஜெபிப்போமாக : 🛐
விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலை பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகின்றோம்.
உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர்; ஆனால் மனிதனை, உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர், ஆகவே உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!
அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும்.
இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும் பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.
இன்றைய நாளை, உம்மிடம் ஒப்படைக்கின்றோம். நீரே எங்களை வழிநடத்தும், ஆசீர்வதியும், காத்துக்கொள்ளுங்க அப்பா.