MORNING PRAYER
காலை✝️ஜெபம்🌤️🌴
🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹
ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.
அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.
ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்.
ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
(திருப்பாடல்கள் 103:19-22)
✝️ஜெபிப்போமாக :🛐
படைப்புகளின் பரம்பொருளே! உயிர்களின் ஊற்றே இறைவா! உம்மை புகழ்ந்து ஆராதிக்கின்றேன். இந்த இனிய காலை வேளையில், உம்மை நினைத்து ஜெபிக்கும் வரம்தந்த உமது மேலான இரக்கத்திற்காக, நன்றி செலுத்துகின்றேன்.
என் வாழ்வு, இறை வேண்டுதலில் என்றும் உம்மோடு இணைந்திருந்து, என் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும், உம்மை மட்டுமே பிரதிபலிப்பவையாக அமையட்டும்.
இயேசுவே! உங்கள் ஆசியால் இன்று நான் யாதொரு பொல்லாப்பையும் காணாமல், நினையாமலும், செய்யாமலும் இருக்கச் செய்தருளும்.
இயேசுவே! உமதன்பில் பாவிகள் மனம் திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக செய்யப்படும் பாவங்களுக்கு பரிகாரமாகவும், இந்த நாளை ஒப்புக் கொடுக்கிறேன்.
🙏🏻ஆமென்.🙏🏻