MORNING PRAYER
காலை✝️ஜெபம்🌤️🌴
🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹
இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.
மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது.
வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன்.
தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;
(திருப்பாடல்கள் 101:1-5)
✝️ஜெபிப்போமாக :🛐
அன்பான தந்தையே! இதோ இந்த காலை நேரத்தில், உமது இரக்கத்தை தேடி ஓடி வந்திருக்கும் என்னை ஆசீர்வதித்தருளும். இந்த புதிய நாளை எனக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி ஆண்டவரே!
எங்கள் மேய்ப்பரே! உமது மந்தையில் இருந்து விலகி சென்ற ஆடு நான். ஆயனாகிய உமது பின்னே செல்லாமல், தவறான வழியில் நடந்து நொந்து போன ஆடு நான். எங்கள் மீது பரிவு கொள்ளுங்கள்! எங்களை மீண்டும், உமது மந்தையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
செழிப்பான இடத்திற்கு எங்களை கூட்டி செல்பவரே! எங்களைத் தாக்க வரும் கொடிய ஓநாய்களிடமிருந்து, எங்களைக் காப்பவரே! ஓ நல்ல ஆயனே! எங்கள் கடவுளே! நன்றி ஆண்டவரே!
அலகையின் மூலம் ஏமாற்றப்பட்டு, பாவ வலையில் சிக்கி துன்பப்படும் எங்களை கண்ணோக்கும். இவ்வுலக ஆசைகள், எங்களை நெருக்குகிறது, நேர்மையின் வழியில் வாழ முடியவில்லை, சில நேரங்களில் உண்மைக்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது, ஆண்டவரே! இந்த மாதிரியான நேரங்களில், எங்களுக்கு உமது உதவி தேவைப்படுகிறது. உமது திடன், எங்களுக்கு தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எங்களுக்கு உதவி செய்யும் அப்பா.
அலகையின் அனைத்து துன்பங்களிலிருந்தும் எங்களை காப்பவரே! எங்கள் பாவத்தால் உம்மை கொன்றோம், இப்போது நீர் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, நாங்கள் மன்னிப்பை பெற்றுள்ளோம். இனிமேல் நாங்கள் தூய்மையின் பிள்ளைகள், இனி நீர் இறக்க போவதில்லை, வாழ்கிறீர், என்றென்றும் அரசராக வாழ்கிறீர். நீர் நீதி வழங்கும்போது, நாங்கள் மகிழ்வுடன் உமது நீதி அரியணை முன் நிற்க, எங்களை நாங்கள் தகுதிப்படுத்த, உமது துணை தேவைப்படுகிறது. விண்ணிலிருந்து எமக்கு உதவி செய்வீராக!
🙏🏻ஆமென்.🙏🏻