MORNING PRAYER
காலை✝️ஜெபம்🌤️🌴
🌹🙏🏻தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🌹🙏🏻
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
(திருப்பாடல்கள் 100:1-5)
✝️ஜெபிப்போமாக:🛐
எல்லாம் வல்ல என் அன்பு இயேசுவே, உம்மை வாழ்த்திப் போற்றி ஆராதிக்கின்றேன்.
ஒவ்வொரு காலையும் கண் விழிக்கும்போதும், நான் உள்வாங்கும் ஒவ்வொரு மூச்சின் போதும், ஒவ்வொரு மணித்துளியின் போதும், நான் உமது வல்லமையின் பாதுகாப்பில் இருக்கின்றேன்!
இறைவா! உமது வல்லமையினால் நான் படைக்கப்பட்டேன். அதே வல்லமையில் நீர் என்னை தொடவேண்டுமென, உம்மை பணிந்து மன்றாடுகின்றேன்.
ஒன்றுமில்லாமையிலிருந்து என்னை உருவாக்கிய நீர், மீண்டும் என்னை புதுப்படைப்பாக்க உம்மால் கூடும்.
இறைவா..! என் உள்ளத்திற்கும், உடலுக்கும், ஆத்துமாவுக்கும் முழுநலனை தாரும். இதனால் எஞ்சியுள்ள எனது வாழ்நாளில், உமக்கு உகந்தவனாக நான் பணி புரிவேனாக.
🙏🏻ஆமென்.🙏🏻
GOOD