MORNING PRAYER
“காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தார்கள்.
(மத்தேயு 8;23-27)
❤️ தியானிப்போம்❤️
✝️ என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மை மிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்.
✝️ நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர். தீப்பிழம்புகளை உம் பணியாளராய் கொண்டுள்ளவர்.
✝️ நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின் மீது நிலை நாட்டினீர்.அது என்றென்றும் அசைவுறாது. அதனை ஆழ்கடல் ஆடையென மூடி இருந்தது. மலைகளுக்கும் மேலாக நீர் திரள் நின்றது. நீவிர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவிர் இடியென முழங்க அது திகைப்புற்று ஓடியது.(திபா104)
✝️❤️ புதிய மாதம் கடவுளின் கருணை. அவரது ஞானம் வியப்புக்குரியது, நம் அறிவுக்கு எட்டாதது. மாட்சிமை மிகுந்த அவரது மேன்மைக்கு பணிந்து, எல்லையற்ற அவரது கருணையை புகழ்ந்து வணங்கி ஆராதித்து நல்வாழ்வை சுத்திகரித்துக் கொள்வோம்.
🙏 ஜெபம் 🙏
✝️🧎♀️ என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு!
+🧎♀️ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
+🧎♀️ தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பி இருக்கின்றன. நீர் கொடுக்க அவை சேகரித்துக் கொள்கின்றன. நீர் உமது கையை திறக்க அவை நலன்களால் நிறைவுறுகின்றன.
+🧎♀️ நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரை போற்றி பாடுவேன்; என் உயிர் உள்ள வரையிலும் என் கடவுளுக்கு புகழ் சாற்றிடுவேன்.
+🧎♀️ என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக. நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.(திபா104) ஆமென் அல்லேலூயா..
🙏 இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏
🌹 மரியே வாழ்க🌹