MORNING PRAYER
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கை
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் ப+வுலகு நிறைந்துள்ளது.
(திருப்பாடல்கள் 33:1-5)
உலகை படைத்து, பராமரித்து வழிநடத்தி வரும் இறைவா! இதோ இந்த காலை நேரத்திலே, உம்மை போற்றி புகழுகிறோம்.
உம்மோடு பேசவும், உம்து அன்பை அனுபவிக்கவும், இன்னொரு புதிய நாளை எங்களுக்கு தந்தமைக்காக, உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஆண்டவரே! உமது அன்பை மறந்து நாங்கள் செய்த அனைத்து செயல்களுக்காகவும், இந்த நேரத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறோம். உமது அன்பிலிருந்து விலகி சென்றதற்காக மனம் வருந்துகிறோம். உமது பேரிரக்கத்தை முன்னிட்டு எங்களை மன்னித்தருளும் அப்பா.
எங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாய் இரும்; எங்கள் அன்றாட செயல்களில், நேர்மையுடன் நடக்க எங்களுக்கு துணை புரியும்; இரக்க செயல்கள் செய்ய எங்களை ஈடுபடுத்தும்.
இவ்வாறு, எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை பிறருக்கு வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான அருள் வரங்களை தந்துருளும்.