MIRACLES OF PRAYING ROSARY
முறையாக பக்தியுடன் தினம் ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்கு அன்னை மரியாள் வாக்களிக்கும் 15 வாக்குறுதிகள்.
1. நம்பிக்கையோடு ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்க என்னுடைய அருள் என்றும் உண்டு.
2. நான் அவர்களுக்கு என்னுடைய பாதுகாப்பைக் கொடுப்பேன்
3. ஜெபமாலை நரகத்திற்கு எதிரான சக்தி வாய்ந்ததது. தப்பறைகளையும், பாவங்களையும் அழிக்கக்கூடியது.
4. கடவுளின் இரக்கத்தை பெற்றத்தந்து உலக இன்பத்திலிருந்து பிரித்து ஆன்மாவை தூய்மைப்படுத்தக் கூடியது.
5. ஆன்மாவை அழியாமல் பாதுகாப்பேன்
6. அவர்கள் பக்தியோடு ஜெபிக்கும்போது தவறான வழிகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். நிலைவாழ்வைப் பெறுவார்கள்.
7. திருச்சபையின் திருவருட்சாதனம் கிடைக்காமல் இறக்கமாட்டார்கள்.
8. வாழும்போதும், வாழ்க்கைக்குப் பின்னும் அளவில்லா இறையருளை பெறுவார்கள்.
9. அவர்களை உத்தரிக்கும் நிலையிலிருந்து விடுவிப்பேன்.
10. விண்ணகத்தில் உயரிய மகிமைக்கு அவர்களை உயர்த்துவேன்
11. நீங்கள் வேண்டுவதைப் பெறுவீர்கள்
12. ஜெபமாலை பக்தியை பரப்புகின்றவர்கள் என்னுடைய உதவியை பெறுவார்கள்.
13. நான் அவர்களின் மரணநேரத்தில் இயேசுவிடம் பரிந்து பேசுவேன்
14. ஜெபமாலை சொல்பவர்கள் எல்லாரும் என்னுடைய மகன்கள் மற்றும் மகள்கள்
15. ஜெபமாலை ஜெபிப்பவர்கள் நிலைவாழ்வுக்கு முன்னுரிமை செய்யப்படுவார்கள்.