MORNING PRAYER

MORNING PRAYER

Dear Lord, answer me; your steadfast love is great; look on me with favor. Do not hide your face from me; I am in distress, answer me quickly. Come near and rescue me; redeem me from my enemies.

You know my shame, my disgrace, and my humiliation; my adversaries are all before you. Insults have broken my heart, and I am in despair; I looked for sympathy, but there was none; for comforters, but I found none.

God of mercy, bless me as I speak with you this morning. Console me with your boundless love; your feet are my throne, your word is my breath. Your mercy is immense, beyond measure; pour your compassion on me, and let me drown in your ocean of kindness.

When I stray from your love, darkness falls; when I turn away from your gaze, suffering ensues. Lord, remember me and look upon me with kindness.

Father, you know the trials your children face; you are our sole protector. Without you, I couldn’t live a single moment; have mercy on us.

Beloved, embodiment of love, my God, be with me daily, guiding and protecting me in every situation. Thank you, Lord.

Jesus, Mary, Joseph, I entrust my heart and soul to you. Amen. ¹

காலை ஜெபம்

காலை ஜெபம்

ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.

உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.

என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.

என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.

பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.

(திருப்பாடல்கள் 69:16-20)

கருணையே உருவான இறைவா! இதோ இந்த காலைப்பொழுதில், உம்மோடு பேச உறவாட வந்திருக்கும் என்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

அளவிட முடியாத அன்பால், என்னை தேற்றுகின்ற இறைவா! உமது பாதம் என் சிம்மாசனம், உமது காலடி என் வாழ்வின் சன்னதி, உமது வார்த்தை என் உயிர்மூச்சு.

கருணையின் உருவமாகிய இறைவா! உமது கருணை மிகவும் பெரியது, எங்களால் அளவிட முடியாதது, இந்த பாவியின் மேல் உமது இரக்கத்தை பொழிந்தருளும், உமது கருணையின் கடலில் என்னை மூழ்கச் செய்யும்.

உமது அன்பிலிருந்து விலகி சென்ற நேரம், என் வாழ்வின் இருளின் நேரம்; உமது பார்வையிலிருந்து விலகிச்சென்ற நேரம், என் வாழ்வின் துன்ப நேரம். ஆண்டவரே! என்னை நினைவில் வையும், என்னை கருணையுடன் பார்த்தருளும்.

அப்பா! இவ்வுலகில் உமது பிள்ளைகள் சந்திக்கும் இன்னல்களை நீர் அறிவீர். எங்களை காக்கிறவர் நீர் ஒருவரே! நீர் இல்லாமல் ஒரு நொடி கூட என்னால் வாழ முடியாது அப்பா. எங்கள் மேல் மனமிரங்கும்.

அன்பு நேசரே! அன்பின் வடிவமே! என் கடவுளே! என்னோடு இரும், தினந்தோறும் என் வாழ்க்கை பயணத்தில், நான் சந்திக்கும் எல்லா சூழ்நிலைகளிலும், என்னை வழிநடத்தும். காத்தருளும். நன்றி ஆண்டவரே!

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.ஆமென்.

HEART TOUCHING STORY ON MOTHERS LOVE

HEART TOUCHING STORY ON MOTHERS LOVE

அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்… தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ஒரு பெரிய கடையின் முன் தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது…

“எவ்வளவு விலை சார் இது”

” 250 டாலர்”..

” இதைவிட அருமையான பூ காண்பிக்க முடியுமா?”

வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது…. ” இது ஆர்கிட் வகைப்பூ மிகஅருமையா இருக்கும்…. ஒரு வாரம் வரை வாடாது 500 டாலர்”.

“சரி, இதையே , ‘பேக் செய்யுங்க…
உங்களிடம், கொரியர் சர்வீஸ் இருக்கா?”

“கொரியர் சர்வீஸ்’சும், செய்கிறோம்… அதற்கு ஒரு 100 டாலராகும்”.

“வேண்டாம்… இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்’ பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்….
ஒன்று செய்யுங்க…..’ ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து …இந்த பூங்கொத்தை, இன்றே என் தாயிடம் , இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க”
.
“ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்…. அதற்கும் சேர்த்து 500 டாலர்”.

” நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின் வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் , பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்…..

” குழந்தை ஏன் அழறே?”

” அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?”

“ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?”.

“நோ அங்கிள்… எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று …
நான் வருடா, வருடம் அம்மாவின் பர்த்டேக்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்… என்னிடம்
பணம் இல்லை…. நீங்க ஒரு டாலர்
கொடுத்தால் ஒரு ரோஜாப்பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட்டிங்’…. ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?”

பாவம் ஏழை பெண் அவள்….
“ஒரு டாலர் என்னமா…. 10 டாலர் தரேன் எடுத்துக்கோ…”.

“வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்”…. என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு ‘சிட்’டாக பறந்தாள் அச்சிறுமி.

ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.

ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க….. கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார். மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி பூவை எடுத்தபடி ஓட அச்சிறுமி எங்கு போகிறாள்? எந்த வீடு? தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.

சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்…. அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..
பல வளைவுகளை,தெருக்களை கடந்து, ஓடும் அவள் போய் நிற்கும் இடம் சமாதி…. ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜாப்பூவை வைத்து…. “அம்மா, ‘ஹாப்பி பர்த்டே’ உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன்மா”… என கூறி அம்மாவின் கல்லறையில் முத்தமிட , பார்த்துக்கொண்டிருந்த பணக்காரரின் கண்ணில் கரகரவென நீர் சுரந்தது .

“சார் , மீட்டிங்கிற்கு நேரமாச்சு…”

டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை, வீட்டிற்கு போக சொன்னார்.

பெரிய கார் , தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த 92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி, யாரது ? என பார்க்க ….

“அம்மா” என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து… “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா” என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்……

” உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே?”

” அம்மா , அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன். உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச்சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்….. நெகிழ்ந்து விட்டேன்… ஆனால் நான்? அச்சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன் உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?”… மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.

தாய், தந்தை இருப்பவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்…. அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.
உங்களின், உங்கள் பண்பின், அன்பை நினைத்து, மகிழ்ந்து…. ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்…..

எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயர்வு என்றும் சந்தோஷம்
சந்தோஷத்தில்,… மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்……

A Heartwarming Story of Love and Appreciation.

A Heartwarming Story of Love and Appreciation.

A wealthy American businessman visited a flower shop to send a bouquet to his mother on her birthday. As he was about to leave, a small girl, around 5-6 years old, approached him, crying. She asked him for $1 to buy a rose for her mother’s birthday. The businessman was touched by her innocence and generosity.

He decided to follow the girl to see where she was going. She ran to a cemetery and placed the rose on a grave, saying “Happy Birthday, Mom.” The businessman was deeply moved by this scene and realized the importance of showing love and appreciation to his own mother.

He canceled his meeting and went home to visit his 92-year-old mother, bringing a bouquet of flowers. He learned a valuable lesson from the small girl about expressing love and gratitude to those who matter most.

This story highlights the significance of cherishing and showing love to our parents while they are still with us.

Alice in Wonderland

Alice in Wonderland

Alice in Wonderland” is a popular 1865 novel.
It tells of a girl named Alice falling through a rabbit hole into a fantasy world.

One of the conversations, in this book, between Alice and a cat goes thus…

Alice: “Would you tell me, please, which way I ought to go from here”?
Cat: “That depends a good deal on where you want to get to”

Alice: “I don’t much care where”….”So long as I get somewhere.”
Cat: “Then it doesn’t much matter which way you go!”

Many times, like Alice we are such…
… we don’t really know where are going
… we are not aware of the destination towards which are we moving

As a result, we fail to realize the importance of the “Journey” that we make.

MORNING PRAYER

 

MORNING PRAYER

காலை ஜெபம்

ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.

அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.

நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.

(திருப்பாடல்கள் 85:7-13)

எங்களை படைத்து, காத்து, பராமரித்து வரும் விண்ணக இறைவா! இதோ இந்த காலை நேரத்தில், உம்மை போற்றி புகழ்கின்றோம் அப்பா.

ஆண்டவரே! இன்று இன்னொரு புதிய நாளை எனக்கு கொடுத்ததற்காக, உமக்கு நன்றி கூறுகின்றேன். இந்த புதிய நாளில், நான் சந்திக்கும் ஒரு சிலரிடமாவது உமது அன்பை எடுத்துக்கூற, எனக்கு துணிவையும் அருளையும் தாரும் அப்பா.

விண்ணக தந்தையே! உம்மை பின்பற்றி பயணம் செய்யும் உமது பிள்ளைகள் ஒவ்வொருவரும், தனது இலக்கை அடைவதற்கு நீர்தாமே உதவி செய்யும். திருச்சபையில் உள்ள அருட் பணியாளர்கள், இறைபணிக்காக எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற துணைபுரியும்.

உமது ஆசீரோடு தொடங்கும் இந்த நாள், எனக்கு வெற்றியை தரும் நாளாக அமையட்டும். பகைமை உணர்வுடன் யாரிடமும் உறவாடாமல், கனிந்த உள்ளத்துடன் நடந்துகொள்ள அருள் தாரும்.

போலி இல்லாத அன்பை விதைக்கவும், துவண்ட உள்ளத்திற்கு திடன் அளிக்கவும் எனக்கு அருள் தாரும் அப்பா. இவ்வாறு உமது இறையரசை, இப்புவியில் நான் வெளிபடுத்த எனக்கு துணை புரியும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

காலை ஜெபம் 

காலை ஜெபம் 

திருப்பாடல் : 16

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

(திருப்பாடல் 16: 1-2, 5. 7-8. 11)

ஜெபம்:

என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏

இயேசுவே, “முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.” என கூறியிருக்கிறீர்.

நாங்கள் பிறரை குற்றம் காணும் போதும், பிறரது குறைகளை சுட்டிக் காட்டும் போதும் எங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையை மறந்து விடுகிறோம். மன்னித்தருள்வீராக.

இயேசுவே இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழி நடத்தும். இன்று என் வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும், நன்மை , தீமை அனைத்தையும் இயேசுவே உமது மாசில்லா திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

*இன்று ஒரு சிந்தனை! *

*இன்று ஒரு சிந்தனை! *

ஒருவருக்கு நீ கொடுக்கக் கூடிய பெரிய பரிசு உனது நேரம். ஏனெனில் உனது நேரம் தான் நீ மீண்டும் பெறமுடியாத உனது வாழ்வின் ஒரு பகுதி ஆகும்.

சிறந்த, உயர்வான விஷயங்களை, செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, செய்யும் சிறு விஷயத்தை, சிறப்பாக செய்!

கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார், அதை வரமாக்குவதும், சாபமாக்குவதும், உன் கைகளில் தான் உள்ளது!!

உயர்வான எண்ணமும், விரிவான சிந்தனையும், நேர்மையான செயல்பாடும் இருந்தால், உன்னை யாராலும் வீழ்த்த இயலாது!!!

Today’s Prayer 

Today’s Prayer 

O Virgin, fair as the moon, delight of the angels and saints in heaven, grant that we may become like you and that our souls may receive a ray of your beauty, which does not decline with the years but shines forth into eternity. O Mary, sun of heaven, restore life where there is death and enlighten spirits where there is darkness. Turn your countenance to your children and radiate on us your light and your fervor. Amen

A DIAMOND—-SHORT STORY

A DIAMOND—-SHORT STORY

A diamond doesn’t sparkle when it’s buried. It just looks like another piece of carbon, dark, rough and ordinary.

When pulled out, placed in the right hands, polished, and set under the lights, it shines. Not because it suddenly became valuable, but because it is finally in the right place to show what it always was.

This is a lot like us. Sometimes we feel invisible, overlooked or not good enough.

It is not because we don’t have talent or value, but because we are in an environment that can’t see it.

We may be measured against the wrong standards or be surrounded by people who don’t recognize us.

We might be in a soil that doesn’t help us grow. Improvement matters, and so does alignment with the right environment, the right people and with the right purpose. So if feeling stuck or unseen, let’s not rush to doubt ourselves.

Remember that a diamond in the earth is still a diamond. We are not worthless. We are just be misplaced.