SR.CECILY, NOV.22

SR.CECILY

இன்றைய புனிதர்

(நவம்பர் 22)

☆ புனித செசிலியா ☆

(கன்னியர், மறைசாaint Cecilia) ட்சி)

புனித செசீலியா (பாடகர்களின் பாதுகாவலி) வாழ்க்கை வரலாறு (கி.பி.200-230)

செசீலியா உரோமை நகரிலே அலெக்ஸாண்டர் செவேருஸ் (Alexander Severus) ஆட்சி புரிந்த காலத்தில் கத்தொலிக்க கிறிஸ்தவத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளான வேதகலாபனையின் காலத்தில் கி.பி.200-ல் ரோமில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே இனிமையாக பாடும் திறமை பெற்றிருந்தார். இறைவனுடைய அன்பிற்காக தன்னையே முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தாள். தன்னுடைய கன்னிமையை இயேசுவுக்காக கையளித்தார்.

ஆனால் அவர்கள் பெற்றோர் ஏற்கவில்லை. வல்லேரியன் எனும் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் இவரை அதிகம் விரும்பியதால் பெற்றோரால் மணம் முடித்துக் கொடுக்கப் பட்டார்
ஆனால் திருமணத்திற்குப் பிறகும் தனது தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். இவரது மன உறுதியையும் திட நம்பிக்கையையும் கண்ட அவரது கணவர், அவரது கன்னிமையை மதித்தார். அவரைத் தொடர்ந்து நேசித்தார். திருமணத்தில் இசைத்துப் பாடப்பட்ட பாடலிலே தன் விண்ணகத் தந்தைக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் நம்பிக்கையை உறுதி செய்தார் புனித செசிலியா. அவரது இசையின் நாட்டம் அவரைப் பாடகர்களின் பாதுகாவளியகக் கொள்ளச் செய்துள்ளது.

திருமணம் முடிந்த அன்று தன் கணவனை நோக்கி “கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்குக் காவலராய் இருக்கின்றார் . எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது ” என்றார். வலேரியன் அவரைப் பார்த்து , “கடவுளின் அந்தத் தூதரை நான் பார்த்தால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன் என்றார். அப்போது செசீலியா, “ திருமுழுக்கு பெற்றால் ஒழிய அவரைப் பார்க்க முடியாது” என்றார். சுரங்கங்களில் வாழ்ந்த உர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று வலேரியன் திருமுழுக்குப்பெற்றுக் கொண்டார்.

வீட்டிற்குத் திரும்பிய வலேரியன் தன் மனைவியின் அருகில் ஓர் அழகிய வானதூதர் நிற்பதைக் கண்டார். அவர் கையில் ஒரு ரோசா மலையும் ஒரு லீலி மலையும் வைத்திருந்தார் . பிறகு, வானதூதர் அதை இருவருக்கும் அணிவித்து, இவை வாடா மாலைகள்; இவற்றைப் பிறர் காண இயலாது நீங்கள் புனித வாழ்வு வாழ இது உங்களை அறிவுறுத்தும். என மொழிந்து வலேரியனிடம்,” நீ விரும்பும் வரம் ஒன்று கேள்” என்றார் அவர்,”எனக்கு ஒரு சகோதரன் உள்ளான் . அவன் பெயர் திபுர்சியுஸ், அவனும் என்னைப்போல் கிறிஸ்தவனாக வேண்டும் இதுவே நான் கேட்கும் வரம் ” என்றார். ” அவ்வாறே ஆகுக ! இருவரும் வேதசாட்சி முடிபெற்று சான்று பகர்ந்து இறப்பீர்கள்” என உரைத்து மறைந்தார். அவ்வாறே, திபுர்சியுசும் மனம்மாறி திருமுழுக்கு பெற்றபின் தேவதூதரைக்கண்டான்.

உரோமின் அதிகாரி அல்மாகுஸ் என்பவர் இவர்கள் இருவரையும் கைது செய்யும் நாள்வரை வலேரியனும், திபுர்சியும் மிக நல்ல பணிகளைச் செய்துவந்தனர். உரோமின்அதிகாரி அல்மாகுஸ் செசிலியா, வலேரியன், திபுர்சியுஸ் ஆகியோரைக் கைது செய்து அழைத்து வந்தான் . “நம் கடவுள் ஜூபிடருக்கு தூபம் காட்டி வழிப்பட்டால் பிழைப்பீர்கள். இல்லையேல் கொல்லப்படுவீர்கள். என்று எச்சரித்தான். ஜுபிடர் சிலைக்கு முன் இவர்களை அனுப்பினான். மாக்சிமுஸ் என்ற அதிகாரி இவர்கள் மீது பரிவு கொண்டு இவர்களைத் தம் இல்லம் அழைத்துச் சென்று உபசரித்தான். இவர்களின் சாட்சியத்தைக் கேட்டு அவனும் அவன் வீட்டாரும் கிருஸ்தவர்களாயினர் .மூன்றுபேரும் வேதசாட்சிகளாக மாறி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.

ரோமன் கடவுளுக்கு பலியிட வந்த மக்களை செசீலியா மனந்திருப்பினாள். அவரைக் காணவந்த திருத்தந்தை உர்பன் அவர் இருந்த இடத்தில் நானூறு பேருக்கு அதிகமான பேருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். செசீலியா கோர்ட்டுக்கு வந்தபோது அல்மாகுஸ் மீண்டும் அவளை மறுதலிக்கக் செய்ய பலமுறை முயன்றான் . அசைக்க முடியாத அவளது நம்பிக்கையைக் கண்டு மூச்சுமுட்டி சாகச் செய்ய தீர்ப்பு வழங்கப் பட்டது . ஒரு அறையில் நெருப்பு மூட்டச்செய்து மிகவும் அதிகமான நெருப்பு வைத்த பிறகும் செசீலியா சாகவேயில்லை. இறுதியாக இவரது தலை வெட்டப்பட உத்தரவு இடப்பட்டபோது, மூன்று முறை வெட்டப்பட்ட நிலையிலும் மூன்று நாள் உயிர் பிரியவில்லை. அந்த வேதனையின் மத்தியிலும் இறைவனைப்பாடி புகழ்ந்த வண்ணம் வாழ்ந்து அதன் பின்னரே இறைவனடி சேர்ந்தார்.

ஜெபம் : அர்ச்.செசீலியம்மாளை உங்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் எங்களுக்கும் கடவுள் ஒரு காவல் தூதரைக்கொடுத்துள்ளார். நாங்கள் பாவங்கள் செய்ய நினைக்கும்போது எங்கள் அருகில் இருக்கும் காவல் தூதரிடம் வேண்டி அந்த பாவத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் வரம் தாரும். நாங்கள் தினமும் காவல் சம்மனசானவர் ஜெபம், மிக்கேல் அதிதூதர் ஜெபம், மனவல்ய ஜெபங்களையும் ஜெபிக்க வரம் தாரும். முக்கியமாக நம் நேசர் இயேசுவுக்காய் எல்லாத் துன்பங்களையும் கொடிய சாவையும் ஏற்று இறுதிவரை விசுவாசத்தில் உறுதியார் இருந்ததுபோல் நாங்களும் கடைசிவரை விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வரம் பெற்றுத்தாரும் ஆமென்.

புனித செசிலியம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் !!!

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

MOTIVATIONAL DAY

MOTIVATIONAL DAY

The more you let go the higher your possibilities to rise in life.

The way you treat everyone with fairness showcases your stronger character.

Your behaviour reflects your values of inclusivity and respect, making you truly awesome as a human being

“The strongest force in human nature is to stay consistent with the identity you hold of yourself”

FANTASTIC FRIDAY

FANTASTIC FRIDAY

When our words won’t be sufficient enough to explain why we care so much for someone, and often it was not intelligible to the average person or perceived well by another, you are actually walking closer to the realm of love.

Never ever have a question in your mind about its impact on your surroundings. One day someone will love you the way you deserve to be loved and you don’t have to fight for it.

“You can give without loving, but you can never love without giving”

Remain calm, always in command of yourself

Remain calm, always in command of yourself

Remain calm, serene, always in command of yourself.

Never be in a hurry; do everything quietly and in a calm spirit. Do not lose your inner peace for anything whatsoever, even if everyone around you are upset with you.

When you are joyous, look deep into your heart and you shall find it is only that which has given you sorrow that is giving you joy.

When you are sorrowful look again in your heart and you shall see that in truth you are weeping for that which has been your delight. Remember, let feelings alone not rule your day

“All houses are dark until the mother wakes up”

PEACEFUL DAY

PEACEFUL DAY

The word Shalom means more than just peace it signifies wholeness, completeness, and well-being.

It is not merely the absence of trouble but the presence of God’s perfect order in our lives. In a world full of anxiety and unrest, true Shalom is found only in God.

His peace guards our hearts and minds when we surrender to Him. Let us rest in God’s perfect peace, trusting that He is in control. God Bless, Have a blessed day today.

FABULOUS FRIDAY

FABULOUS FRIDAY

Begin each day with a heart filled with kindness; retire each evening having emptied it all out.

This world needs more genuine smiles, more acts of kindness, and more hearts willing to lift others up instead of breaking them down.

We each have our own unique gifts to offer the world, even if it’s only to share your smile with someone everyday, keep giving from the heart, it matters much.

FANTABULOUS FRIDAY

FANTABULOUS FRIDAY

ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;

மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.

அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.
சீராக் 17:29-32.

இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

Happy Morning

Happy Morning

You can’t go back and change the beginning, but you can start where you are and change the ending. Sometimes you have to restart your plan.

Begin again, all over again, as many times as it takes. So you can make it where you need to go.

Failures happen. Mistakes are part of the journey, the goal is to not live a perfect life – the goal is to live a life of purpose

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.) அன்பின் இறைவா! திருச்சபையின் திருப்பணியாளர்கள் உம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவில் கொண்டு, உம்மையே பற்றிக்கொண்டு, தாங்கள் உம்வழி செல்லவும்,  இறைமக்களை உம் பாதை நோக்கி வழிநடத்தவும்,வேண்டிய வரம்தர வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.) எங்கள் நம்பிக்கையான இயேசு இறைவா! இறையாட்சியை நோக்கி பயணிக்கும் உம் பிள்ளைகளாகிய நாங்கள், உம்மீது வசுவாசம் கொண்டவர்களாய், ஒரே எதிர் நோக்கோடு, இறுதிவரைக்கும் நற்காரியங்களைச் செய்வதன் மூலம், ஆசீர் பெற்ற மக்களாக உம்மிடம் வந்து சேர, வரம்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.) மனுவுருவான அற்புதக் குழந்தை இயேசு இறைவா. எங்கள் குழந்தைகள், மாணவர்கள், இருபால் இளையோர், இறைவார்த்தை வாசிப்பினை பழக்கமாக்கி கொள்ளவும், உம் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.) எங்கள் அரசரும் ஆயனுமான இயேசு இறையா! எங்கள் நாட்டை ஆளும் அனைத்து தலைவர்களும் மதவெறி தவிர்த்து,அனைவரையும் இந்தியர்களாக சம்மாக நடத்தவும், நீர் காட்டுகின்ற அமைதியை, உமது அரசுத்தன்மையை உள்வாங்கி அனைவருக்கும் நற்பணியாற்றிட, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

NIGHT PRAYER

NIGHT PRAYER

இரவு ஜெபம்

எம் அன்பு இறைவா! உம்மை நாங்கள் போற்றுகின்றோம், புகழ்கின்றோம், மகிமைபடுத்துகின்றோம், ஆராதனை செய்து நன்றி கூறுகின்றோம்.

எங்களை ஒரு குழுவாக, குடும்பமாக, நண்பர்களாக உறவை வளர்க்கும் கருவியாக, உறவோடு உமது ஞான வார்த்தைகளை பகிர்ந்து கடமையைச் செய்ய, உறவில் நாங்கள் மகிழ்ச்சியைக் காணச் செய்ததற்காக, நன்றி கூறுகின்றோம்.

இன்றைய நாள் முழுவதும் எங்கள் உடனிருந்து, பாதுகாத்து, ஆலோசனை தந்து, ஆரோக்கியத்தை அளித்து, சோர்வுகள் எங்களை தாக்கினாலும் எமக்கு ஆற்றில் தந்து, அரவணைத்தீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

உமது அன்பை பிரதிபலிக்கும் வகையில் எங்களை இன்று நடக்கச் செய்தீரே, உமது ஆவியின் வரங்களினால் எங்களை நிரப்பினீரே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

பிறருக்கு ஆறுதல் அளிக்க மறந்ததற்காகவும்; பாராட்ட மறந்ததற்காகவும்; நன்றி சொல்ல மறந்ததற்காகவும்; உற்சாகப்படுத்த மறந்ததற்காகவும் எங்களை மன்னியும்.

தேவையான நேரத்தில் பிறருக்கு உதவி செய்ய, பிறருக்கு நன்மை செய்யத் தவறியதற்காக எங்களை மன்னியும்.

பிறருடைய கடைமைகளிலே நாங்கள் தடையாக இருந்திருந்தால் அல்லது சிரமம் கொடுத்தற்காக எங்களை மன்னியும்.

எங்கள் பெற்றோரிடமும் சகோதர சகோதரியிடமும், நண்பர்களிடமும் பிள்ளைகளிடமும், மனம் புண்படும்படியாக எதாவது செய்திருந்தால் எங்களை மன்னியும்.

தாயும் தந்தையுமான இறைவா! இந்த இரவில் நல்ல தூக்கத்தைத் தந்தருளும்.

நாளை காலை மீண்டும் எழுந்து உம்மைப் போற்றிப் புகழவும், உம்மோடு இன்னும் நெருங்கி வாழவும் அருள்புரியும்.

ஆமென்.