u r precious

MORNING PRAYER

MORNING PRAYER

u r precious

காலை ஜெபம் –

புனித லூர்து மாதாவுக்கு ஜெபம்

அமலோற்பவ கன்னி மாதாவே ! சொல்லொணா சோதிக் கதிர் வீச, சூரியன் ஒளி தங்கிய சுத்த வெள்ளை உடை அணிந்து, தெய்வீக வடிவு அலங்காரத்தோடு அன்று எழுந்தருளி வந்து, தன்னந்தனிமையான லூர்து மலைக் கெபியில் காட்சி தரக் கருணை புரிந்த உமது கிருபாகடாட்சத்தை நினைத்தருளும். உமது திருக்குமாரன் உமக்குக் கட்டளையிட்ட மட்டற்ற வல்லமையையும் நினைவு கூர்ந்தருளும். புதுமையில் பிரபல்லியமான லூர்து மலை மாதாவே , உமது பேறு பலன்களின் மீது நிறைந்த நம்பிக்கை வைத்து உமது தயவு ஆதரவை அடைய இதோ ஓடி வந்தோம் . உமது தரிசன வரலாறுகளின் உண்மையை உணர்ந்து ஸ்திரப்படுத்தின பரிசுத்த பாப்பானவரை உமது திருக்கர வல்லபத்தால் காத்தருளும்.

தேவ இரக்க நேச மனோகரம் அடங்கிய இரட்சண்ணிய பொக்கிஷங்களைத் திறந்து அவைகளை எங்கள் மீது பொழிந்தருளும். உம்மை மன்றாடிக் கேட்கும் எங்கள் விண்ணப்பங்கள் எதுவும் வீண் போக விடாதேயும் . மாசற்ற கன்னிகையான லூர்து மலை மாதாவே , தேவரீர் எங்கள் தாயாராகையால், எங்கள் மன்றாட்டுக்களைத் தயவாய்க் கேட்டருளும்.

ஆமென்.

லூர்து ஆண்டவளே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *