NIGHT PRAYER

THANKSGIVING PRAYER

                                                                THANKSGIVING PRAYER

மாத இறுதி இரவு நன்றி ஜெபம்

NIGHT PRAYER

அன்பின் விண்ணகத் தந்தையே இறைவா! இந்த மாதம் முழுவதும் உமது இரக்கப் பெருக்கத்தினாலும், புனித அன்னை மரியாளின் பரிந்துரையாலும், எங்களுக்கு ஏராளமான அற்புதங்களை செய்துள்ளீர்கள் அப்பா. இதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மேலும், இந்த மாதத்தில் உமக்கு விரோதமாக செய்த பாவங்களுக்காக, குறிப்பாக பிறரன்பிற்கு விரோதமாக செய்த பாவங்களுக்காகவும், பிறரை மன்னிக்காமல் இருந்ததற்காகவும், பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலை எனக்கு இருந்தும், உதவி செய்ய தவறியதற்காகவும் உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம் அப்பா. எங்களை மன்னித்தருளும் இறைவா.

பிறக்க இருக்கும் புதிய மாதத்தில், உம்முடைய அளவற்ற அன்பினாலும், இரக்கத்தினாலும் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமாய் இறைஞ்சி மன்றாடுகின்றோம். வரும் நாட்களில் எங்களுக்கு என்ன தேவை என்பது உமக்கு தெரியும் ஆண்டவரே. எங்களின் விண்ணப்பங்களை ஏற்று, உமது சித்தத்தின் படி எங்களுக்கு தயவாய் அருள் புரிந்தருளும் அப்பா.

இந்த இரவு நேரத்தையும் உம்முடைய பாதத்தில் ஒப்படைக்கின்றோம். எங்களுக்கு எந்த மனஅழுத்தமும் இல்லாமல், ஆழ்ந்த உறக்கம் தந்து, காலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கண்டு புதிய மாதத்தைக் காண எங்களை வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

– ஆமென்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *