NOVENA TO OUR LADY OF VELANKANNI

இரக்கம் மிகுந்த அன்னையே! எங்கள் பாவங்களின் பொருட்டு நீர் இயேசுவுடன் அனுபவித்த வேதனை எவ்வளவோ கொடூரமானது. அதை நினைத்து ஆலைவாய்க் கரும்பென மனம் வருந்துகின்றோம். ஓ, கருணைக் கடவுளின் கன்னித் தாயே! நீர் சிந்திய கண்ணீர் யாவும் எங்களுக்கு அருட்சுனையாய்ப் பாயட்டும். எங்கள் உள்ளத்தில் காணப்படும் தீய நாட்டங்களை எல்லாம் அகற்றி இறை அன்பை வளர்க்கட்டும். அன்புத் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாக நாங்கள் வாழ எங்களுக்கு ஆசீர் தாரும். தூய அன்னையே! எல்லா ஆபத்துகளினின்றும்
எங்களை பாதுகாத்தருளும். வேடனைக் கண்ட பறவை விண்ணிலே பறந்து மறைவது போலவும், புலியைக் கண்ட புள்ளிமான் புதருக்குள் பதுங்கி ஒளிவது போலவும், பாவிகளாகிய நாங்கள் உமது மாசற்ற திரு இருதயத்தில் அடைக்கலம் நாடி ஓடி வருகிறோம். எங்களை அரவணைத்து, இறைவனிடம் அழைத்துச் செல்ல எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.