ஆசிரியர்கள் சான்றோர்கள்
ஆசிரியர்கள் சான்றோர்கள்
ஆசிரிய பணி புனிதமானது
அறிவை மட்டும் வளர்க்கவில்லை
அன்பையும் விதைப்பவர்கள
தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டவில்லை
தவறிய பொழுது தூக்கிவிடுபர்கள்
எழுத மட்டும் பழக்கவில்லை
எழுந்து நிற்க வைப்பவர்கள்
சேமிக்க மட்டும் சொல்லவில்லை
சேவைசெய்யவும் சொல்பவர்கள்
கண்டிப்பை மட்டும் செய்யவில்லை
மன்னிக்கவும் கற்பிப்பவர்கள்
போதனை மட்டும் பணியல்ல
பெற்றோரை மதிக்க சொல்பவர்கள்
நேசத்தை மட்டும் தரவில்லை
நேர்மையை விதைப்பவர்கள்
தியாகம் மட்டும் செய்யவில்லை
நியாயத்தை போற்றுபவர்கள்
உண்மையை மட்டும் விதைக்கவில்லை
தர்மத்தை காப்பவர்கள்
ஒழுக்கம் மட்டும் போதிக்கவில்லை
இலட்சிய பாதையை நிர்ணயிப்பவர்கள்
வாழ்க்கையை தரவில்லை
வாழ கற்று கொடுப்பவர்கள்
தூகக்கத்தை மட்டும் இழக்கவில்லை
துணிவுடன் நிற்க செய்பவர்கள்
தெய்வத்தை வழிபட மட்டும் சொல்லவில்லை
மனிதத்தை மதிக்க சொன்னவர்கள்
ஆசிரியர்களை வணங்குவோம்
ஆசிரியர்களை போற்றுவோம்
ஆசிரியர்களை மதிப்போம்
ஆசிரியர்கள் சான்றோர்கள்
ஆசிரியர்களின் ஆசிர் வேண்டி இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்
Happy Teachers'day
Thank you sister for the true words. May your spirit continue to enlighten us.
Sema sr g. The true words about teachers are good. Happy teachers day.
பாடு மனமே கற்பதனால் வரும் மகிமையைக் கூறு.Happy Teacher's Day.