psalm 111

MORNING PRAYER —–PRAY PSALM 111

psalm 111

MORNING PRAYER

                                                                             PRAY PSALM 111

 

திருப்பாடல் : 111

நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

(திருப்பாடல் 111: 1-6)

🛐 ஜெபம் 🛐

அனைத்துலகின் வேந்தரே! உம்மை போற்றுகிறோம். உம்மைப் புகழ்கிறோம். நன்றி கூறுகிறோம்.
இறைவா, உம் திருமுன் பணிந்து உம்மை ஆராதிக்கின்றோம்.

இறைவா, எங்களோடு உடனிருக்க, எங்களை வழிநடத்த நீர் தூய ஆவியானவரை எங்கள் மத்தியில் அனுப்பியது போல, அலகையை நாங்கள் வல்லமையோடு எதிர்க்க அன்னை மரியாளின் மூலம் தூய செபமாலையை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி தந்தையே..🙏

இறைவா, செபமாலையை முழு கவனத்துடன், பொருள் உணர்ந்து, நிதானமாக ஒருமித்த மனதோடு சொல்லாமல், கவன சிதறலோடு கடமைக்கு விரைவாக செபித்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம்.

இனி செபமாலை செபிப்பதை எங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக்கிக் கொள்ளுவதோடு மட்டுமல்லாது செபமாலை பக்தியை பரப்பும் இறைப்பணியையும் முக்கிய கடமையாகக் எண்ணி நிறைவேற்றுவோம்.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *