வேண்டும் மீண்டும் சுதந்திரம்
பகிர்வு சுதந்திரம் :
தன்னலம் போக்கி அனைவரையும் வாழ வைக்கும் சுதந்திரம் வேண்டும்.
வீர சுதந்திரம்:
மொழி , இனம், மதம் கடந்து மனிதம் மதிக்கும் சுதந்திரம் வேண்டும்.
வாய்மை சுதந்திரம்:
பொய்மை ஒழிந்து உண்மை நிலைபெறும் சுதந்திரம் வேண்டும்.
உரிமை சுதந்திரம்:
பெண்கள், பெண் குழந்தைகள் தன்மானம் காக்கும் சுதந்திரம் வேண்டும்.
தியாக சுதந்திரம்:
சமூக ஆர்வலர்கள் , சமூகம் காப்பவர்கள் உழைப்பு உயிர் பெறும் சுதந்திரம் வேண்டும்.
அன்பு சுதந்திரம்:
தனித்து விடப்பட்ட முதியவர்களை பேணி காக்கும் சுதந்திரம் வேண்டும்.
நியாய சுதந்திரம்:
உழைக்கும் மக்களின் வாழ்வு வளம்பெரும் சுதந்திரம் வேண்டும்.
உண்மை சுதந்திரம்:
எழுத்தாளர்கள், ஊடக பணியாளர்கள் உழைப்பு மதிக்கப்பட வேண்டும்.
வெற்றி சுதந்திரம்:
ஏழ்மையும் , வறுமையும் நீங்கி உயிர் வாழும் சுதந்திரம் வேண்டும்.
நேர்மை சுதந்திரம்:
ஊழல் இல்லாத, மனிதம் மதிக்கப்படும் சுதந்திரம் வேண்டும்.
ஆக மொத்தம் வேண்டும் சுதந்திரம் மீண்டும்.