புதன் கிழமை நற்செய்தி

செப்.3, 2025, புதன் கிழமை நற்செய்தி மறைச்சாரல்! *

கொலோசையர் 1: 1-8
லூக்கா  4: 38-44

எளிமையும் சேவையும் திருச்சபையின் இரு கண்கள்!

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுலடியார் தெசலோனிகேய மக்களை,  “சகோதர, சகோதரிகளே, நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளரவேண்டாம்” என்று வலியுறுத்துகிறார். மக்களுக்கு ‘நன்மை’ அளிக்கும் பணிகளை மேற்கொள்ளும் போது நாம் நற்செய்தி அறிவிக்கறோம். இதில் என்றும் மனந்தளரக் கூடாது என்பதே பவுலடியாரின் அன்பான எச்சரிக்கையாக தரப்பட்டுள்ளது.
இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வினலறி நற்செய்திப் பணியாற்றுகிறார். தொழுகைக்கூடத்தில் போதித்தப் பிறகு இயேசு, ஓய்வின்றி சீடரான பேதுருவின் மாமியாரைக் குணமாக்கினதோடு, வீட்டிற்கு வெளியே இருந்த சுற்றத்தாரை, மற்றும் வெளியூர் மக்களோடு நற்செய்தியைப் பகிர்கிறார். தொடர்ந்து சற்றும் ஓய்வும் இல்லாமல் கொண்ட பணியை நிறைவேற்றியதை வாசிக்கிறோம்.
திருச்சபையில் இன்றும் பிறர் அன்பு பணிதான் இயேசுவின் சீடத்துவத்தை பெருகச் செய்கிறது. கிறிஸதுவத்தில் பணி வாழ்வும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதவை. எளிமையும் சேவையும் திருச்சபையின் இரு கண்கள். மாறாக, இன்று நம்மில் பெரும்பாலோர், தனிமனித ஆசைகளையும் தேவைகளையும் மட்டுமே முன்னிறுத்தி பெருமைகொள்ளும் பண்பாட்டில் மூழ்கியுள்ளஓம். இதனால் கிறிஸ்துவின் ஆன்மாவை நாம் நாளுக்கு நாள் இழந்துவருகிறோம் என்றால் மிகையாகாது.
மேளாள் திருத்தந்தை பிரான்சிஸ், அவரது ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ எனும் திருத்தூது மடல், எண் 6-ல், “உயிர்ப்பு இல்லாத தவக்காலம்போல கிறிஸ்தவர்களின்  வாழ்வு உள்ளது” என்று தமது வேதனையை வெளிப்படுத்தினார். தவக்காலத்தின் முடிவானது ஆண்டவரின் உயிர்ப்பில்தான் மகிழ்ச்சியாக மாறுகிறது. ஆனால், இன்றைய கிறிஸ்தர்களின் வாழ்வில் அத்தகைய நற்செய்தி மகிழ்ச்சியை நாம் காண்பதில்லை. இதற்கு அடிப்படை காரணம், பிறர் அன்பு சேவைக்கான அர்ப்பணிப்பு நம்மில் குறைந்துகொண்டே போகிறது.
ஆலயத்துக்கு காணிக்கை செழுத்துவது, கோயில் கட்டுவது, ஞாயிறு திருப்பலிக்கு வருவது இயேசுவை நமக்குள் வைத்துக்கொள்ள உதவலாம். பிறர் அன்பு பணிகள் வாயிலாகவே இயேசுவின் நற்செய்தி உலகமெங்கும் மணம் கமழச் செய்ய முடியும். ஆமென்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *