இரவு ஜெபம்
அன்டி வந்தோரை ஆதரிக்கும் எங்கள் அடைக்கலமான ஆண்டவரே! இன்றைய நாள் முழுவதும் உம்மீது நாங்கள் வைத்த நம்பிக்கையினால், உமது ஒளியின் பாதையிலே எங்களை வழிநடத்தி, எங்களுடைய செயல்கள், வேலை, பயணம் போன்ற எல்லாவித சூழ்நிலைகளிலும், எந்த பொல்லாப்புகளும் எங்களை நெருங்காமல் பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மலைபோல் வரும் துன்பத்தை, பனிபோல் நீக்கிவிடும் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே! ஒவ்வொரு நாள் முழுவதும், எவ்வளவோ இடையூர்கள், மன உளச்சல், பணிச்சுமை, கடினமான உழைப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் எங்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. ஆனாலும், உம்மீது நாங்கள் வைத்த நம்பிக்கையினால், எல்லாவித பிரச்சனைகளில் இருந்தும் எங்களை விடுவித்து, உமது சிறகுகளின் நிழலில் எங்களை பாதுகாத்து வருகின்றீர் இயேசுவே. நன்றி அப்பா.
இயேசுவே! இன்றைய இந்த இரவு வேளையிலும், எங்கள் ஆன்மாவை உமது கரங்களில் ஒப்படைக்கின்றோம். இறைவா! எங்களுக்கு ஆழ்ந்த, மன அமைதியின் உறக்கத்தை தந்தருளும். காலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் வரத்தை, எங்களுக்கு தந்தருள உம்மை வேண்டி மன்றாடுகின்றோம்.
– ஆமென்.