இரவு ஜெபம்
இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்களுக்காகவும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நன்றி செலுத்துகிறோம்!
எங்கள் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தடுக்க உமது வலிமைமிக்க சம்மனசுக்களை எங்களைச் சூழ்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி. கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.
அப்பா, எங்கள் கவலைகளை நீர் அறிவீர்! எங்கள் கஷ்டங்களை கவனித்துக்கொள்கிறீர். எனவே எங்களுடைய கடினமான கவலைகள் அனைத்தையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக் கிறோம். எமது கடின சூழ்நிலைகளை நாங்கள் உமது காலடியில் வைக்கிறோம். ஒரு புதிய நாள் தொடங்கும்வரை எங்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுத்தருளும். இவை அனைத்தையும் எங்கள் இரட்சகராகிய இயேசுவின் தூய திருநாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்!